Home
News

புது ரூல்ஸ்.. SIM கார்டு, Aadhaar கார்டு.. பயோமெட்ரிக் வெரிபிகேஷன்.. இனிமே படாதபாடு இல்ல.. இப்போ என்ன மாறுது?

ஆதார் கார்டு (Aadhaar Card) மட்டுமல்லாமல், ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை கொடுத்து சிம் கார்டு வாங்கிய கஸ்டமர்கள் ஏரளமாக இருக்கும்போது, ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் பொருந்தும்படி புது சிம் கார்டு விதிகள் (New SIM Card Rules) அமலுக்கு வர இருக்கின்றன. உங்களிடம் பயோமெட்ரிக் ஆதார் வெரிபிகேஷன் (Biometric Aadhaar Verification) கேட்கப்பட இருக்கிறது. இந்த விதிகள் எப்போது வருகின்றன? இதனால் என்ன மாறப்போகிறது? ஏற்கனவே சிம் கார்டு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு எப்படி? உள்ளிட்ட விவரங்களை பார்ப்போம்.

இந்த புது சிம் கார்டு விதிகளால் பதற்றமடைய வேண்டியது கிடையாது. இப்போதைக்கு புது சிம் காார்டு கனெக்சனை பெறும்போது மட்டுமே பயோமெட்ரிக் ஆதார் வெரிபிகேஷனை கட்டாயமாக்கும்படி மத்திய தொலைத்தொடர்பு துறைக்கு - டிஓடி (Department of Telecommunications - DoT) உத்தரவிடப்பட்டுள்ளது. பிதரமர் அலுவலகம் (PMO) இந்த உத்தரவை கொடுத்ததாக ET தளத்தில் கூறப்பட்டுள்ளது.

புது ரூல்ஸ்.. SIM கார்டு, Aadhaar கார்டு.. பயோமெட்ரிக் வெரிபிகேஷன்கள்!

அதாவது, ஓட்டர் ஐடி (Voter ID), பாஸ்போர்ட் (Passport) போன்று சிம் கார்டு வாங்குவதற்கு தேவைப்படும் எந்த ஆவணங்களை கொண்டு சென்றாலும் அவர்களுக்கும் பயோமெட்ரிக் ஆதார் வெரிபிகேஷன் கட்டாயமாக்க இந்த புது விதிகள் வழிவகை செய்கிறது. இதனால், புது சிம் கார்டு (New SIM Card) வாங்குவதற்கான பிரதான ஆவணமாக ஆதார் கார்டு மாறவும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த விதிகளை மத்திய தொலைத் தொடர்பு துறை எப்போது அமலுக்கு கொண்டுவரும் என்ற விவரங்கள் வெளியாகவில்லை. இருப்பினும், பிரதமர் அலுவலகம் (Prime Minister Office) நேரடியாக உத்தரவை கொடுத்திருப்பதால், அடுத்த சில வாரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஆதார் கார்டு வருகைக்கு பிறகு சிம் கார்டுகள் அதன் மூலமாகவே வாங்கப்படுகின்றன.

ஆதார் கார்டு நகல் இல்லாமல் சென்றாலும்கூட பயோமெட்ரிக் வெரிபிகேஷன் மூலம் சிம் கார்டு வாங்கி கொள்ள முடிகிறது. ஆகவே, இது நடைமுறையில் இருக்கும் விதிகளாக இருக்கிறது. இதனால் பதற்றமடைய வேண்டியது கிடையாது. இருப்பினும், ஆதார் கார்டுடன் மொபைல் நம்பரை இணைக்காமல் இருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த பயோமெட்ரிக் வெரிபிகேஷன் கொண்டு வரப்படலாம்.

இது எந்த ஆதார் கார்டுடன் மொபைல் நம்பர் (Mobile Number) இணைக்கப்பட்டிருக்கிறது என்பதை உறுதி செய்கிறது. ஆகவே, இது அதிக பாதுகாப்பை கொடுப்பது மட்டுமல்லாமல், போலியான சிம் கார்டுகள் வாங்கப்படுவதை எளிதாக குறைத்துவிடும். இந்த புது விதிகள் அமலுக்கு வந்தால், சிம் கார்டு விற்பனையாளர்கள் கட்டாயம் பயோமெட்ரிக் ஆதார் வெரிபிகேஷனை உங்களிடம் கேட்பார்கள்.

ஆகவே, ஆதார் கார்டில் இருக்கும் பயோமெட்ரிக் விவரங்கள் சரியாக இருக்கிறாதா என்பதை சரிபார்க்க வேண்டி வரலாம். அதேபோல ஆதார் கார்டு கொடுக்காமல் ஓட்டர் ஐடி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்கள் மூலம் சிம் கார்டு வாங்கிய கஸ்டமர்கள் அந்த நம்பரை ஏற்கனவே ஆதாருடன் இணைத்திருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு எந்த தொல்லையும் இல்லை.

அப்படி இணைக்காமல் வைத்திருந்தால், அவர்களை ஆதாருடன் இணைக்க உத்தரவு வர வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால், பயோமெட்ரிக் ஆதார் வெரிபிகேஷன் செய்யப்படாமல் சிம் கார்டு வழங்கப்பட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்கவும் மத்திய தொலைத்தொடர்பு துறை முடிவெடுத்துள்ளது. ஆகவே, இந்த விதிகள் அமலுக்கு வருவது தொலைவில் இல்லை என்பது தெரிகிறது.

முன்னதாக, சிம் கார்டு நிறுவனங்களுக்கு டிரேசபில் விதிகள் அமலுக்கு வந்தன. ஏர்டெல் (Airtel), ஜியோ (Jio), வோடபோன் ஐடியா (Vi), பிஎஸ்என்எல் (BSNL) போன்ற எந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சிம் கார்டுகள் மூலமாகவும் வணிக ரீதியாக எஸ்எம்எஸ்கள் அல்லது கால்களை செய்வதற்கு ஒயிட் லிஸ்ட்டில் இடம்பெற வேண்டும். இல்லையென்றால், எஸ்எம்எஸ் செல்லாது என்ற விதி வந்தது குறிப்பிடத்தக்கது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New SIM Card Rules From PMO Mandatory Biometric Aadhaar Verification For New Mobile Connections
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X