Home
News

புது SIM கார்டு ரூல்ஸ்.. 2 சிம், 2 போன் யூஸ் பண்றவங்களுக்கு செக் வச்ச இந்திய அரசு! இனி 90 நாட்களுக்கு ஒருமுறை?

மத்திய அரசு சிம் கார்டு தொடர்பான சில புதிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது. மெசேஜிங் ஆப்கள் ஆனது சிம் கார்டு சரிபார்ப்பை (SIM card verification) அமல்படுத்த வேண்டும் மற்றும் ஒவ்வொரு 6 மணி நேரத்திற்கும் இணைய அடிப்படையிலான அமர்வுகளிலிருந்து தானாகவே வெளியேற (லாக்-அவுட் ஆக) வேண்டும்.

இதன் பொருள் - பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் (WhatsApp) அல்லது டெலிகிராம் (Telegram) போன்ற ஆப்களுக்கு ரிஜிஸ்டர் செய்யும் போது பயன்படுத்திய பிஸிக்கல் சிம் கார்டு (Physical SIM Card) இல்லையென்றால், அவர்களுக்கு குறிப்பிட்ட சேவைகளை அணுகுவதில் இருந்து தடை விதிக்கப்படும்.

புது SIM கார்டு ரூல்ஸ்.. 2 சிம், 2 போன் யூஸ் பண்றவங்களுக்கு செக்!

டாட் (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறையின் இந்த புதிய உத்தரவு ஆனது வாட்ஸ் அப், டெலிகிராம், சிக்னல் (Signal), அரட்டை (Arattai), ஸ்னாப்சாட் (Snapchat), ஷேர்சாட் (Sharechat) மற்றும் பிற முக்கிய தளங்களை பாதிக்கும் என்றும், மேலும் இந்த புதிய உத்தரவு ஆனது கடுமையான முறையில் சைபர் மோசடியை எதிர்த்து போராடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் டாட் அறிவிப்பின்படி, குறிப்பிட்ட தகவல்தொடர்பு ஆப்கள் ஆனது 90 நாட்களுக்குள் தங்கள் சேவைகளுக்கான ரிஜிஸ்ட்ரேஷனின் போது பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் குறிப்பிட்ட அக்கவுண்ட் ஆனது "தொடர்ந்து" இணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும் சிம் பைண்டிங் (SIM Binding) எனப்படும் சிம் கார்டு பாதுகாப்பு தொடர்பான தொழில்நுட்பம் வழியாக, ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட சிம் இல்லையென்றால் அணுகலை தடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது

கூடுதலாக வாட்ஸ்அப் (WhatsApp Web) உட்பட மேற்குறிப்பிட்ட ஆப்களின் வெப் டிப்படையிலான வெர்ஷன்கள் கூட அவ்வப்போது பயனர்களை லாக்-அவுட் செய்ய அனுமதிக்க வேண்டும். மேலும் இந்த செஷன்கள் 6 மணிநேரத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். டாட்-ன் இந்த புதிய விதிமுறைகளானது தொலைத்தொடர்பு அடையாளங்காட்டி பயனர் நிறுவனம் (TIUE) என்கிற கருத்தை அறிமுகப்படுத்தி, கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு திருத்த விதிகள், 2025 இன் ஒரு பகுதியாகும்.

"வாடிக்கையாளர்களை அடையாளம் காண மொபைல் எண்ணை பயன்படுத்தும் சில ஆப் அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகள் ஆனது பயனர்கள் சாதனத்திற்குள் அடிப்படை சிம் கிடைக்காமல் தங்கள் சேவைகளைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன என்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இது தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளது, ஏனெனில் அது நாட்டிற்கு வெளியில் இருந்து சைபர் மோசடிகளை செய்ய தவறாகப் பயன்படுத்தப்படுகிறது" என்று டாட் அறிவித்துள்ளது.

இந்த புதிய விதிகள் - பல டிவைஸ்களை பயன்படுத்தும் மற்றும் அடிக்கடி பயணங்கள் மேற்கொள்ளும் யூசர்களுக்கு என்ன அர்த்தம்? இந்தியாவில் வாட்ஸ்அப்பை 500 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் பயன்படுத்துகின்றனர். ஆக புதிய டாட் விதிமுறைகள் ஆனது வழக்கமான மற்றும் தினசரி பயன்பாட்டை நிச்சயம் தடுக்கலாம்.

எடுத்துக்காட்டாக, சிலர் மொபைல் மற்றும் டேப்லெட்டுகள் அல்லது இரண்டு ஸ்மார்ட்போன்கள் போன்ற பல டிவைஸ்களை பயன்படுத்துகிறார்கள். ஆனால் இரண்டு டிவைஸ்களிலும் ஒரு அக்கவுண்ட்டை பயன்படுத்துகிறார்கள். இப்படிபட்டவர்கள் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள சிம் கார்டு விதிகளால் இடையூறுகளை சந்திக்க நேரிடும். மேலும், ஸ்மார்ட்போனில் தங்கள் ஸ்க்ரீன் டைமை குறைக்க தங்கள் லேப்டாப்களில் வாட்ஸ்அப்பை பயன்படுத்துபவர்களும் வேலை நேரத்தில் இடையூறுகளை சந்திக்க நேரிடும்.

"தற்போது, ​​சந்தாதாரரின் ஆப் அடிப்படையிலான தகவல் தொடர்பு சேவைகளுக்கும் அவர்களின் மொபைல் சிம் கார்டுக்கும் இடையிலான பிணைப்பு செயல்முறை ஆரம்ப நிறுவல் மற்றும் சரிபார்ப்பு கட்டத்தில் ஒரு முறை மட்டுமே நிகழ்கிறது,.அதன் பிறகு சிம் கார்டு பின்னர் அகற்றப்பட்டாலும், மாற்றப்பட்டாலும் அல்லது செயலிழக்கச் செய்யப்பட்டாலும், ஆப் ஆனது டிவைஸில் சுயாதீனமாக செயல்படும் என்று சிஓஏஐ (COAI) முன்பு கூறி இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது/

More from GizBot

Best Mobiles in India

English summary
New SIM Card Rules From Indian Govt Messaging Apps to Enforce SIM Card Verification Automatic Logout
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X