Home
News

புது SIM விதிகள்.. Jio, Airtel, Vi-க்கு இனி ஐடி கட்டாயம்.. மொபைல் நம்பரின் கால்களில் வருது விதி.. என்ன மாறும்?

டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), பிஎஸ்என்எல் (BSNL) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) உள்ளிட்ட டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகளால் சிம் கார்டு கஸ்டமர்களுக்கு நேரடி மாற்றங்கள் வர இருக்கின்றன. மொபைல் நம்பருக்கு வரும் கால்களில் ஐடி வெரிபிகேஷன் இருக்கப் போகிறது. இந்த விதிகள் குறித்த முழு விவரங்கள் இதோ.

டாட் (DoT) என்றழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு துறை (Department of Telecommunications) ஆனது டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு விதிக்கும்படியான சிஎன்ஏபி (CNAP) விதிகளை கொண்டுவந்துள்ளது. இதை காலிங் நேம் பிரசன்டேஷன் (Calling Name Presentation) என்று சொல்கிறது. இதில் காலர் ஐடென்டிபிகேஷனை (Caller Identification) செய்து கொள்ளலாம்.

புது SIM விதிகள்.. Jio, Airtel, Vi-க்கு இனி ஐடி கட்டாயம்.. நம்பருக்கு?

அதாவது, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் போன்ற சிம் கார்டுகளுக்கு கால்கள் வரும்போது, அதை செய்வோரின் உண்மையான பெயர் டிஸ்பிளேவில் காண்பிக்கப்படும். இதன் மூலம் உங்களுக்கு யார் கால் செய்கிறார் என்பதை எளிதாக தெரிந்து கொள்ளலாம். இது புதிய நம்பராக இருந்தாலும் பொருந்தும். ஆகவே, எளிதில் அடையாளம் காணலாம்.

ட்ரூகாலர் (Trulecall) போன்ற காலர் ஐடி ஆப்கள் இதுபோன்று கால் செய்யும்போது சிம் கார்டு பயன்படுத்துபவரின் பெயரை காண்பிக்கிறது. ஆனால், இது அந்த ஆப்-ஐ லாகின் செய்து பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டுமே கிடைக்கும். அதேபோல சிம் கார்டு உரிமையாளரின் பெயரை காண்பிக்காது. அதை பயன்படுத்துவோரின் பெயரையே பெரும்பாலும் காண்பிக்கிறது.

ஆனால், இந்திய தொலைத்தொடர்பு துறை கொண்டுவரும் சிஎன்ஏபி விதிகள் அப்படி கிடையாது. சிம் கார்டு வாங்கும்போது, கொடுக்கப்பட்ட விவரங்களில் இருக்கும் பெயர்களை அடையாளம் காட்டும். ஆகவே, நேரடியாக சிம் கார்டு உரிமையாளரின் அடையாளத்தை தெரிந்து கொள்ளலாம். இதை டெலிகாம் ஆப்ரேட்டர்கள் அமல்படுத்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது.

ஆகவே, அந்தந்த நிறுவனங்களின் சிம் கார்டுகளை வாங்கியபோது, கொடுக்கப்பட்ட பெயர்களே காலர் ஐடென்டிபிகேஷனில் காண்பிக்கப்பட இருக்கிறது. இந்த விதிகளின் ஒப்புதலை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் இருந்து தொலைத்தொடர்பு துறை பெற்றுவிட்டது. ஏனென்றால், சிம் கார்டுகளில் புதிய விதிகளை டிராய் மட்டுமே அமல்படுத்த முடியும்.

இப்போது, ஒப்புதல் கிடைத்துவிட்டதால், இந்த விதிகள் அடுத்த கட்டத்துக்கு சென்றுவிட்டன. 4ஜி மற்றும் 5ஜி கஸ்டமர்களுக்கு முதலில் அமல் செய்யப்பட இருக்கின்றன. இதற்கு அடுத்து 3ஜி மற்றும் 2ஜி கஸ்டமர்களுக்கு அமல் செய்யப்பட இருக்கின்றன. இந்த சிஎன்ஏபி பீச்சர் டீபால்ட்டாக கொடுக்கப்பட இருக்கிறது. ஆனால், இதை கஸ்டமர்கள் ஆப்ஷன் முறையில் பயன்படுத்தலாம்.

அதாவது, உங்களுக்கு தேவைப்பட்டால் எனபிள் செய்து கொள்ளலாம். இல்லையென்றால், டிசேபிள் செய்து கொள்ளலாம். இது உங்களது சிம் கார்டு ஆப்ரேட்டர்களிடம் இருந்து கொடுக்கப்பட இருப்பதால், வெரிபைடு செய்யப்பட்ட மொபைல் நம்பர்களின் விவரங்கள் மட்டுமே உங்களுக்கு காண்பிக்கப்படும். அப்படியில்லை என்றால், அது கட்டாயம் ஸ்பேம் அழைப்புகளாகவே இருக்கும்.

இது தனிப்பட்ட நபர்களுக்கு எளிதாக இருக்கும். அதே நேரத்தில் வணிக மற்றும் நிறுவனம் தொடர்பான காலர் ஐடென்டிபிகேஷனுக்கு வெரிபிகேஷன் செய்யப்பட்ட வர்த்தகப் பெயர்கள் அல்லது வர்த்தக முத்திரைகளை காண்பிக்க டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. இது ஒரு வாரத்தில் அமல்படுத்தப்பட இருக்கிறது.

ஆனால், மொத்த கஸ்டமர்களுக்கும் கிடையாது. ஒரு டெலிகாம் சர்க்கிளில் அமல்படுத்தி அதை 60 நாட்களுக்கு பைலட் பேஸ் போல நடைமுறைப்படுத்தி அதன்பிறகு மற்ற சர்க்கிள்களில் அமல்படுத்த டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, இந்த விதிகள் படிப்படியாக மட்டுமே சிம் கார்டு கஸ்டமர்களுக்கு அமல்படுத்தப்பட இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New SIM Card Rules From DoT To Mandate CNAP Caller Identification For Indian Telecom Operators
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X