புது SIM கார்டு ரூல்ஸ்.. ஆகஸ்டு 24 முதல் கதை முடிஞ்சு.. வச்சி செய்ய போகும் லிமிட்.. இதை பண்ணுங்க.. என்ன வருது?
இந்தியாவில் புதிய சிம் கார்டுகளை (New SIM Card) வாங்குவோருக்கும், அனுமதிக்கப்பட்ட வரம்பை மீறி அதிக சிம் கார்டுகளை வைத்து இருப்பவர்களுக்கும், டிஓடி (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்பு துறை (Department of Telecommunications) ஆனது புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது.
இதில் புதிய சிம் கார்டு விதிகளில் லிமிட் வெரிபிகேஷன் விதிகள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. டிசம்பர் 1ஆம் தேதி முதல் ரியல் டைம் வெரிபிகேஷன் விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. ஆகவே, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா அல்லது பிஎஸ்என்எல் என்று எந்த நெட்வொர்க் கஸ்டமர்களாக இருந்தாலும் இந்த விதிகளை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அனுமதிக்கப்பட்ட வரம்பை விட கூடுதலாக சிம் கார்டுகளை வாங்கி பயன்படுத்துவதை தடுக்க மத்திய அரசின் டிஜிட்டல் நுண்ணறிவு தளம் (Digital Intelligence Platform - DIP) இனிமேல் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த தளம் வழியாக கஸ்டமர்களின் போட்டோக்களை வெரிபிகேஷன் செய்து கொள்ள முடியும். ஆகவே, கூடுதலாக சிம் கார்டுகளை பெறும்போதே அதை தடுக்க முடியும்.
அதே நேரத்தில், ஏற்கனவே வரம்பை மீறி சிம் கார்டுகளை வைத்திருப்பவர்களையும் இதன் வழியாக கண்டறிய முடியும். ஏற்கனவே இருக்கும் விதிகளின்படி, எந்த டெலிகாம் நிறுவனங்களின் சிம் கார்டுகளாக இருந்தாலும், ஒருவர் அதிகபட்சமாக 9 சிம் கார்டுகளை மட்டுமே அவரது பெயரில் வைத்திருக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. சில மாநிலங்களில் 6 சிம் கார்டுகளுக்கு மட்டுமே அனுமதி இருக்கிறது.
பாதுகாப்பு தேவைப்படும், ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் இந்த வரம்பு 6 சிம் கார்டுகளாக மட்டுமே இருக்கிறது. இப்படி இருக்கையில், வெவ்வேறு பகுதிகளில் சிம் கார்டுகளை வாங்குவதால் அனுமதிக்கப்பட்ட வரம்பு மீறப்படுகிறது. இப்படி மீறப்பட்ட கஸ்டமர்களின் போட்டோக்கள் ஆகஸ்ட் 23 முதல் டெலிகாம் நிறுவனங்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்த போட்டோக்களை டெலிகாம் நிறுவனங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, புதிய சிம் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போது, டிஜிட்டல் நுண்ணறிவு தளம் வழியாக டெலிகாம் நிறுவனங்கள் வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். வரம்பை மீறி இருந்தால், புதிய சிம் கார்டை இணைப்பை வழங்க மறுக்கலாம். இதை ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த விதிகளுக்கு அடுத்து வருகிற நவம்பர் 30ஆம் தேதிக்குள் புதிய சிம் கார்டு இணைப்பை வழங்கும் விதிகளில் ரியல் டைம் வெரிபிகேஷனை (Real-time Verification) முழுமையாக அமல்படுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. ஆகவே, இந்த தேதிக்கு பிறகு புதிய சிம் கார்டு வாங்கும்போது ரியல் டைம் வெரிபிகேஷன் செய்யப்படும்.
இந்த வெரிபிகேஷனின் போது வரம்பை மீறிய சிம் கார்டுகளின் இணைப்பு கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட டெலிகாம் நிறுவனம், அந்த சிம் கார்டு இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க (Suspend) அனுமதி கொடுக்கப்படும். இந்த விதிகளையே தொலைத்தொடர்பு துறை கொண்டுவர இருக்கிறது. ஆகஸ்ட் 24ஆம் தேதியில் இருந்து அமலுக்கு வர இருக்கிறது.
ஏற்கனவே இருக்கும் விதிமுறைகளின்படி, வரம்பை மீறி கூடுதல் இணைப்புகளை வைத்திருக்கும் சந்தாரார்கள், தாங்களாகவே முன்வந்து அதை ஒப்படைக்க வேண்டி இருந்தது. ஆனால், இனிமேல் போட்டோ அடிப்படையிலான வெரிபிகேஷன் செய்யப்பட்டு, எளிதாக அதை தடுக்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது. ஆகவே, கூடுதல் சிம் கார்டுகள் இருந்தால், ஒப்படைப்பது நல்லதாகும்.


Click it and Unblock the Notifications