புது ரூல்ஸ்.. ஏப்ரல் 15 முதல் அமல்.. உங்க SIM கார்டுல இந்த சேவை கிடைக்காது.. ஜியோ, ஏர்டெல் கஸ்டமர்கள் கவனம்!
ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea), பிஎஸ்என்எல் (BSNL) போன்ற அனைத்து டெலிகாம் (Telecom) நிறுவனங்களுக்கும் முக்கிய கட்டுப்பாடுகளை மத்திய அரசின் தொலை தொடர்பு துறையானது விதித்துள்ளது இந்த விதிகள் ஏப்ரல் 15 முதல் அமலுக்கு வருகின்றன.
இதனால் காலம் காலமாக டெலிகாம் கஸ்டமர்கள் பெற்று வந்த முக்கிய சேவை நிறுத்தப்பட இருக்கிறது. சிம் கார்டு (SIM Card) பயன்படுத்தும் அனைத்து கஸ்டமர்களுக்கும், இந்த விதிகள் பொருந்தும் என்பதால் அவர்கள் சற்று பதற்றம் அடைந்துள்ளனர். அப்படி என்ன விதிகள் அமலுக்கு வருகின்றன என்பதை இப்போது விரிவாக பார்ப்போம்.

இந்த ஏப்ரல் மாதம் வந்ததில் இருந்து பல்வேறு புதிய விதிகளை மக்கள் சந்தித்து வருகின்றனர். அதுவும் புதிய நிதியாண்டு என்பதால் வருமான வரி முதல் கிரெடிட் கார்டு வரையில் ஏப்ரல் 1ஆம் தேதியே புதிய விதிகள் அமலுக்கு வந்து விட்டன. இப்போது, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற தொலை தொடர்பு நிறுவனங்களுக்கான விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன.
அதாவது, இதுவரையில் வழங்கப்பட்டு வந்த யுஎஸ்எஸ்டி அடிப்படையிலான அழைப்பு பகிர்தல் (USSD Based Call Forwarding) சேவையை நிறுத்த மத்திய தொலை தொடர்பு நிறுவனம் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த சேவையை மாற்று வழியில் கஸ்டமர்களுக்கு வழங்க டெலிகாம் ஆபரேட்டர்களுக்கு (Telecom Operators) அனுமதி கொடுத்துள்ளது.
இந்த யுஎஸ்எஸ்டி சேவையைப் பற்றி அனைத்து கஸ்டமர்களுக்கும் கட்டாயம் தெரிந்திருக்கும். ஏனென்றால், சிம் கார்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது, டேட்டா இருக்கிறது என்பதை இந்த யுஎஸ்எஸ்டி கோடுகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும். அதுமட்டுமில்லாமல் மொபைலின் ஐஎம்இஐ நம்பரை தெரிந்து கொள்ளலாம்.
அதுமட்டுமல்லாமல், உங்களது நம்பருக்கு வரும் கால்களை மற்றொருவருக்கு ஃபார்வேர்டு செய்து கொள்ள முடியும். இப்படி பல்வேறு சேவைகளுக்கு இந்த யுஎஸ்எஸ்டி கோட்கள் பயன்படுகின்றன. என்னதான் மொபைல் ஆப் மூலமே பேலன்ஸ், டேட்டாவை தெரிந்து கொண்டாலும் இன்டர்நெட்டை பெரும்பாலும் பயன்படுத்தாத சிம் கார்டு கஸ்டமர்கள் இந்த சேவையே நம்பி இருக்கின்றனர்.
இதுபோன்ற கஸ்டமர்களை கால் பார்வேர்டிங் கோட்கள் மூலம் எளிதாக ஏமாற்றி விட அதிக வாய்ப்புள்ளது. ஏனென்றால், உங்களது போனை சில நிமிடங்கள் வேறொருவர் வைத்திருந்தால் போதும் கால் பார்வேர்டிங் யுஎஸ்எஸ்டி கோடை பயன்படுத்தி உங்களுக்கு வரும் கால்களை அவர்களுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
இதன் மூலம் உங்களுக்கு வரும் கால்கள் மட்டுமல்லாமல் எஸ்எம்எஸ்களையும் பயன்படுத்தி டிஜிட்டல் பண பறிப்பிலும் அவர்களால் ஈடுபட முடியும். இதனாலேயே இந்த சேவையை தொலை தொடர்பு துறை நிறுத்த முடிவு செய்திருக்கிறது. ஆகவே, ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் போன்ற டெலிகாம் நிறுவனங்களில் இந்த சேவை நிறுத்தப்படும்.
இந்த சேவையை மாற்றும் முறையில் வழங்க டெலிகாம் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியாக அதிக வாய்ப்புள்ளது. முன்னதாக, மத்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமானது, இந்த யுஎஸ்எஸ்டி கால் பார்வேர்டிங் சேவை குறித்து டெலிகாம் கஸ்டமர்களுக்கு அறிக்கை வெளியிட்டிருந்தது.
யுஎஸ்எஸ்டி கால் பார்வேடிங் சேவை மூலம் பல்வேறு டிஜிட்டல் பணப்பரிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும், இதனால் டெலிகாம் கஸ்டமர் முதல் சேவையை முற்றிலும் தவிர்க்கும் மாறும் கேட்டுக் கொண்டது. இப்போது, நேரடியாக டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு டிஜிட்டல் பணப்பரிப்பு வழக்குகளை தவிர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications








