Home
News

புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. சிம் கார்டுக்கு கும்பிடு.. 7 நாட்களுக்கு வெச்சாச்சு.. இனிமே எப்படி மாற்றுவது?

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் - டிராய் (Telecom Regulatory Authority of India - TRAI) கொண்டுவந்த புதிய விதிகள் அமலுக்கு வந்துவிட்டன. ஜூலை 3ஆம் தேதி முதல் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களின் கட்டண உயர்வும் அமலுக்கு வருகிறது. இனிமேல் சிம் கார்டு வைத்திருக்கும் ஒவ்வொருக்கும் 7 நாட்கள் விதிக்கப்படும் புதிய விதிமுறைகள் என்ன? எம்என்பி மற்றும் யுபிசி எப்படி கொடுக்கப்படும்? ஒரு சிம் நெட்வொர்க்கில் இருந்து மற்றொன்று மாறுவது எப்படி?

ஜூலை மாதம் வந்ததும் போதும், சிம் கார்டு வெச்சிருந்ததும் போதும் என்று சொல்லும்படி கஸ்டமர்கள் கதிகலங்கும்படி அடுத்தடுத்து சிம் கார்டு தொடர்பான விதிகள் அமலாகி வருகின்றன. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) நிறுவனங்கள் சொல்லி வைத்தது போல அடுத்தடுத்து கட்டண உயர்வை (Tariff Hike) அறிவித்தன.

புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. சிம் கார்டுக்கு கும்பிடு.. மாற்றுவது?

இந்த புதிய கட்டண மாற்றங்கள் ஜூலை 3ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றால், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, அதிரடியாக புதிய சிம் கார்டு விதிகளை ஜூலை 1ஆம் தேதி முதலே அமலுக்கு கொண்டுவந்துவிட்டது. ஆகவே, இனிமேல் சிம் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றொரு நெட்வொர்க்குக்கு மாற விரும்பினால், புதிய விதிகளை பின்பற்ற வேண்டும்.

ஆனால், இந்த புதிய சிம் கார்டு விதிகள் குறித்து, ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா கஸ்டமர்கள் பதற வேண்டியது கிடையாது. சொல்லப்போனால், இது தளர்வு செய்யப்பட்ட விதிகள் என்றே சொல்ல வேண்டும். அதாவது, முன்பு சிம் ஸ்வாப் (SIM Swap) அல்லது சிம் ரீபிளேஸ்மெண்ட் (SIM Replacement) செய்ய வேண்டுமானால், எம்என்பி (MNP) செயல்முறை 10 நாட்களுக்கு நடக்கும்.

அதாவது, ஒரு நெட்வொர்க்கில் இருந்து மற்றொரு நெட்வொர்க்குக்கு மாறவோ, சிம் தொலைந்தால் அல்லது சேதமடைந்தால் அதை மாற்றவோ மொபைல் நம்பர் போர்டபிலிட்டி (Mobile Number Portability) செயல்முறையை பின்பற்ற வேண்டும். இதை செய்தால், உங்களுக்கு யுனிக் போர்டிங் கோட் (Unique Porting Code) வழங்கப்படும்.

புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. சிம் கார்டுக்கு கும்பிடு.. மாற்றுவது?

இந்த கோட் வழங்கப்பட்ட பின்பு, நீங்கள் புதிய சிம் கார்டை பயன்படுத்தலாம். ஆனால், இந்த கோட் பெற வேண்டுமானால், 10 நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்த நாட்களுக்கு முன்னதாக டெலிகாம் நிறுவனங்கள் யுனிக் போர்டிங் கோட் வழங்கினால், அது நிராகரிக்கப்பட்டுவிடும். சிம் கார்டு தொடர்பான மோசடிகளை தவிர்க்க டிராய் இந்த விதிமுறையை கொண்டுவந்தது.

இந்த நாட்கள் அதிகமாக இருப்பதாகவும், குறைக்க வேண்டும் என்று டெலிகாம் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. இந்த சூழலிலேயே 10 நாட்களுக்கான எம்என்பி செயல்முறையை 7 நாட்களாக டிராய் குறைத்துள்ளது. இந்த நேரத்தில் கட்டண உயர்வால் பலர் தங்களது சிம் நெட்வொர்க்கை மாற்ற நினைப்பார்கள் அவர்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?

சிம் போர்ட் செய்வது எப்படி? உங்களது சிம் கார்டு 90 நாட்களுக்கு ஆக்டிவில் இருந்தால் மட்டுமே போர்ட் செய்ய முடியும். ஆகவே, முதலில் இதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். இப்போது, நீங்கள் மாற விரும்பும் சிம் கார்டு நெட்வொர்க்கின் ஸ்டோர்கள் அல்லது வெப்சைட் மூலம் சிம் போர்ட்டிங் செய்து கொள்ளலாம்.

ஸ்டோர்களுக்கு நேரடியாக சென்றால், அவர்களே மாற்றி கொடுத்து விடுவார்கள். ஒருவேளை வெப்சைட்டில் நீங்கள் போர்டிங் செய்ய விரும்பினால், நீங்கள் மாற விரும்பும் நெட்வொர்க்கின் வெப்சைட்டுக்கு சென்று சிம் போர்ட் அல்லது எம்என்பி பக்கத்துக்கு செல்லுங்கள். இப்போது, உங்களது மொபைல் நம்பர் கேட்கப்படும்.

அதை கொடுத்த பிறகு ஓடிபி மற்றும் உங்களது தனிப்பட்ட விவரங்கள் கேட்கப்படும். அதை கொடுத்துவிட்டால், உங்களது எம்என்பி கோரிக்கை பெற்றுக்கொள்ளப்பட்டது என்று எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்படும். அதோடு 24 மணி நேரம் கோரிக்கையை திரும்பெற அவகாசமும் வழங்கப்படும். இந்த எம்என்பி செயல்முறைக்கு யுபிசி (UPC) கோட் வழங்கப்படும்.

இந்த யுபிசி கோட் செயல்முறை முடிய குறைந்தது 7 நாட்கள் தேவைப்படும். அதற்கு முன்பாக முடிந்தால் அந்த சிம் போர்ட்டிங்கை டிராய் நிராகரித்துவிடும். இதனிடையே, உங்களது முகவரிக்கு சிம் கார்டு அனுப்பி வைக்கப்பட்டுவிடும். அதன்பின் அதை மொபைலில் செலுத்தி ஆக்டிவேட் செய்து கொள்ளலாம். கால் மூலம் ஆக்டிவேட் செய்யப்படும்.

Best Mobiles in India

English summary
New SIM Card Rules Comes Into Effect Now You Know How To Port Your SIM Card Step by Step Guide
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X