புது SIM கார்டு ரூல்ஸ்.. ஒரே நேரத்தில் 3 முக்கிய மாற்றங்கள் அமல்.. ஆதார் வெரிஃபிகேஷன், 10 போட்டோ, சிம் கணக்கு!
புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்வதாக, ஒரே நேரத்தில் 3 முக்கிய மாற்றங்கள் (New SIM Card Rules) அமலுக்கு வந்துள்ளன. இனிமேல் அனைத்து புதிய சிம் கார்டுகளுக்கும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு (Aadhaar-based Biometric Verification) கட்டாயமக்கப்பட்டு உள்ளது
பிரதமர் அலுவலகத்தில் (Prime Minister's Office - PMO) இருந்து தொலைத்தொடர்புத் துறைக்கு (Department of Telecommunications - DoT) பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவு, போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட மொபைல் இணைப்புகளும், அதன் வழியாக அதிகரித்து வரும் தவறான பயன்பாடுகளையும் நிறுத்தும் நோக்கத்தின் கீழ் அமலுக்கு வந்துள்ளது.

முன்னதாக வாக்காளர் ஐடி அல்லது பாஸ்போர்ட் போன்ற அரசாங்க அடையாள அட்டையின் கீழ் புதிய சிம் கார்டை வாங்க முடிந்தது. ஆனால் இப்போது ஒவ்வொரு புதிய சிம் கார்டு இணைப்புக்கும் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் சரிபார்ப்பு தேவைப்படுகிறது.
புதிய சிம் கார்டுகளை விற்பனை செய்யும் டெலிகாம் ரீடெயில் விற்பனையாளர்கள் இந்த செயல்முறையை முடிக்காமல் சிம் கார்டுகளை விற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள். இதோடு சேர்த்து, ஒவ்வொரு நபருக்கும் எத்தனை சிம் கார்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதையும் இந்த சிஸ்டம் ட்ராக் செய்ய உள்ளது மற்றும் வெவ்வேறு பெயர்களில் உள்ள மல்டிபிள் கனெக்ஷன்களும் சரிபார்க்கப்பட உள்ளது.
எல்லாவற்றை விட முக்கியமாக "தேவைப்படும் பட்சத்தில்" புதிய சிம் கார்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் புகைப்படத்தை 10 வெவ்வேறு கோணங்களில் எடுத்து வழங்க வேண்டும். இப்படியாக புதிய சிம் கார்டு வாங்குவது தொடர்வதாக, ஒரே நேரத்தில் 3 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதன் மூலம் போலியான விவரங்களின் கீழ் வாங்கப்பட்ட சிம் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மோசடியான அல்லது போலியான சிம் கார்டுகள் வழியாக நடக்கும் நிதி மோசடிகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதாக, இந்திய தொலைத்தொடர்பு துறையின் மறுஆய்வு தெரிவித்து இருந்தது. அதை தொடர்ந்தே இந்த புதிய சிம் கார்டு விதிகள் அமலுக்கு வந்து உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
போலி சிம் காடுகள் தொடர்பான ஒரு விசாரணையில், சைபர் க்ரைமில் விதிமுறைகளை மீறி, ஒரு டிவைஸ் உடன் பல சிம் கார்டுகள் இணைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதைச் சமாளிக்க, சட்ட அமலாக்கத்துடன் நெருக்கமாகப் பணியாற்றவும், ஏஐ டூல்களை பயன்படுத்தி குற்றவாளிகளை பிடித்து தண்டிக்கவும் டிஓடி-க்கு பிஎம்ஓ அறிவுறுத்தியதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
போலி ஆவணங்கள் மூலம் சிம் கார்டுகளை வழங்கினால் சில்லறை விற்பனையாளர்கள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் சைபர் கிரைமை எதிர்த்து போராடுவதற்கும் பாதுகாப்பான மொபைல் இணைப்புகளை உறுதி செய்வதற்கும் ஒரு தெளிவான படியாகும்.
ஆதார் சரிபார்ப்பு நடைமுறையில் இருப்பதால், சரிபார்க்கப்படாத சிம் கார்டுகள் மூலம் மோசடி செய்வதற்கான வாய்ப்புகள் கணிசமாக குறையும் என்பதில் சந்தேகமே வேண்டாம். இந்த நடவடிக்கை நாடு முழுவதும் சிம் கார்டுகள் எவ்வாறு வழங்கப்படுகின்றன மற்றும் கண்காணிக்கப்படுகின்றன என்பதற்கான வலுவான கட்டுப்பாடுகளையும் முன் வைக்கிறது.
இதுபோல சமீபத்தில் அமலுக்கு வந்த புதிய விதிகளை பொறுத்தவரை, கூகுள் பே ஆப் ஆனது கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வழியிலான பில் பேமெண்ட்டுகளுக்கு கட்டணம் வசூலிக்க தொடங்கி உள்ளது. அதாவது இரண்டு நபர்களுக்கு இடையேயான யுபிஐ வழியிலான பணபரிவர்த்தனை அல்லது ஒரு கடைக்காரருக்கு நீங்கள் செய்யும் வழக்கமான யுபிஐ பேமெண்ட்கள் ஆனது தொடர்ந்து இலவசமாக இருக்கும்.
ஆனால் கூகுள் பே ஆப் வழியாக டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பில் பேமெண்ட்களை செய்தால் - கட்டணம் வசூலிக்கப்படும். கூகுள் பே அறிவித்துள்ள இந்த புதிய மாற்றங்களின்படி டெபிட் அல்லது கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி செய்யப்படும் பில் பேமெண்ட்களுக்கு, அதன் இறுதி தொகையில் இருந்து 1% முதல் 5% வரை கட்டணம் வசூலிக்கப்படும். உதாணரணத்திற்கு உங்களுடைய மின் கட்டணம் ரூ.1,000 ஆக இருந்தால், அதில் 1 சதவீதம் (அதாவது ரூ.10) கட்டணமாக வசூலிக்கப்படும்.


Click it and Unblock the Notifications