Home
News

புது SIM பைண்டிங் விதிகள்.. இனி WhatsApp, Arattai, Telegram படாதபாடு.. ஒரே நேரத்தில் 2 முக்கிய மாற்றங்கள்!

இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைத்தொடர்புத் துறை ஆனது வாட்ஸ்அப், அரட்டை, டெலிகிராம், சிக்னல் போன்ற ஒட்டுமொத்த ஆப்களுக்கும் சிம் பைண்டிங் விதிகளை (SIM Binding Rules) அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகள் 90 நாட்களுக்குள் அமல் செய்யப்பட்ட இருக்கின்றன. ஆகவே, ஒட்டுமொத்த மக்களும் இந்த விதிகளை தெரிந்து கொள்ள வேண்டும்.

எஸ்எம்எஸ் மூலமாக ஓடிபி வெபிகேஷன், சிம் கார்டு வெரிபிகேஷன் உள்ளிட்டவை செய்யப்படுகின்றன. எஸ்எம்எஸ்களுடன் இணைக்கப்பட்ட ஆப்களில் நேரடியாக சிம் கார்டும் இணைக்கப்பட்டு இருக்கும். ஆனால், வாட்ஸ்அப், அரட்டை, டெலிகிராம், சிக்னல் போன்ற ஆப்களில் ஐடியை வைத்து சாட் செய்துகொள்ளும்படி வசதிகள் வர இருக்கின்றன.

புது SIM பைண்டிங் விதிகள்.. இனி WhatsApp, Arattai, Telegram படாதபாடு!

அதேபோல ஸ்மார்ட்போனில் சாட் செய்வது மட்டுமல்லாமல், வெப் மூலமாகவும் சாட் செய்யும் வசதியை அந்த ஆப்கள் கொடுக்கின்றன. இதனாலேயே தொலைத்தொடர்புத் துறை ஆனது சிம் பைண்டிங் விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த விதிகள் மூலமாக சிம் கார்டு வழியாக ஃபைண்டிங் செய்யப்பட்ட ஆப்களில் மட்டுமே சாட் சேவையை பயன்படுத்த முடியும்.

1. சாட்டிங் ஆப்களில் பதிவு செய்ய பயன்படுத்தப்படும் சிம் கார்டு அந்த யூசருக்கு மட்டுமே சொந்தமானது. ஆகவே, புதிய சிம் கார்டு வாங்கினாலும் ரீ-வெரிபிகேஷன் இருக்கும்.
2. யூசர் புதிய சிம் கார்டுக்கு மாறினால், ஆப் வழியாக ரீ-வெரிபிகேஷன் செய்யப்பட்டு சிம் ஃபைண்டிங் செய்யப்பட வேண்டும்.
3. சிம் பைண்டிங் தோல்வியடைந்தாலோ அல்லது சரிபார்க்கப்படாமலோ இருந்தாலோ யூசர்களுக்கு எந்த தகவல் தொடர்பு சேவையும் கொடுக்கப்படாது.
4. அனைத்து வெரிபிகேஷன் அட்டெம்ப்ட்களும் பாதுகாப்பாக ஸ்டோர் செய்யப்பட்டு பராமரிக்கப்படும்.

இந்த விதிகளின்படி ஸ்மார்ட்போனில் சாட் (Chat) சேவையை கொடுக்கும் வாட்ஸ்அப், அரட்டை, டெலிகிராம், சிக்னல் உள்ளிட்ட ஆப்களுக்கு தொலைத்தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. கூடவே, 90 நாட்களில் அதை அமல் செய்யவும் உத்தரவிட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன்களில் மட்டுமல்ல, வெப் வழியாக கொடுக்கப்படும் சாட் சேவைக்கும் பொருந்தும்.

ஆகவே, வாட்ஸ்அப் வெப் போன்ற வெப்சைட் அடிப்படையிலான சாட் சேவைகள் கொடுக்கப்பட்டால், அந்த யூசர்களின் அக்கவுண்ட் அவ்வப்போது லாக் அவுட் செய்யப்பட வேண்டும். ஒவ்வொரு லாக் அவுட்டுக்கும் 6 மணி நேரத்துக்கு மிகாமல் இடைவெளி கொடுக்கலாம் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆகவே, வெப் மூலமாக சாட் செய்யும்போது, லாக் அவுட் அடிக்கடி இருக்கும்.

இந்த விதிகளின்படி சாட் சேவையை கொடுக்க 90 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. வாட்ஸ்அப், அரட்டை உள்ளிட்ட சாட் ஆப்கள் இதன்படி சேவைகளை கொடுக்கும்பட்சத்தில் வெரிபிகேஷன் அதிகமாக இருக்கும். அதேபோல வெரிபிகேஷன் முடியும்வரையில் சேவையை பயன்படுத்த முடியாமலும் போகலாம். ஆனால், இது புதிய ஃபைண்டிங் செய்வோருக்கு மட்டுமே இருக்கும்.

ஒரே சிம் கார்டு மூலமாக வாட்ஸ்அப், அரட்டை, டெலிகிராம் உள்ளிட்ட ஆப்களை பயன்படுத்தும்போது, இது பெரிய சிரமத்தை ஏற்படுத்தாது. அதே நேரத்தில் வெப் மூலமாக இந்த ஆப்களை பயன்படுத்தும்போது, 6 மணி நேரத்துக்கு ஒரு முறை மீண்டும் லாகின் செய்ய வேண்டி இருக்கும். ஆகவே, இதற்கு பின் நம்பர், கியூஆர் கோட் போன்றவை மீண்டும் மீண்டும் கேட்கப்படலாம்.

அக்டோபரில் அறிவிக்கப்பட்ட தொலைத்தொடர்பு சைபர் பாதுகாப்பு திருத்த விதிகள், 2025 இலிருந்து இந்த அதிகாரங்களைப் இந்திய அரசு பெறுகிறது. ஆகவே, தொலைத்தொடர்பு விதிமுறைகளின் கீழ் டெலிகம்யூனிகேஷன் ஐடென்டிஃபயர் யூசர் என்டிட்டி (TIUE) என்ற விதிகளை இப்போது அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இதுவே சிம் பைண்டிங்கை ஆதரிக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New SIM Binding Rules From Indian Government WhatsApp Arattai Telegram To Enforce in 90 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X