Home
News

இனி நோ டைப்பிங்.. நோ வாய்ஸ் ரெக்கார்டிங்.. சைலன்ட்-ஆ WhatsApp-க்கு வந்த புதிய 60 செக்கென்ட் அம்சம்!

ஏற்கனவே பெரும்பலமான வாட்ஸ்அப் பயனர்கள் (WhatsApp Users) டைப் செய்து மெசேஜ் அனுப்புவதை.. அதாவது டெக்ஸ்ட் மெசேஜ்களை (Text Messages) அனுப்புவதை குறைந்துக் கொண்டே வருகின்றனர்; பலரும் வாய்ஸ் ரெக்கார்ட்களைத் (Voice Recording) தான் வாட்ஸ்அப் மெசேஜ்களாகவும் மற்றும் அதற்கான ரிப்ளைகளாகவும் அனுப்பிகொண்டு இருக்கின்றனர்.

இதற்கிடையில், வாய்ஸ் மெசேஜ்களின் பயன்பாடும் கூட இனி மெல்ல மெல்ல குறையும் என்பது போல வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு வெர்ஷன் (Android Version) மற்றும் ஐஓஎஸ் வெர்ஷன் (iOS Version) ஆகிய இரண்டிலுமே - சத்தமில்லாமல் - ஒரு புதிய "60 செக்கென்ட" அம்சம் (New 60 Second Feature) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன அம்சம்? அதன் பயன் என்ன? அதை பயன்படுத்துவது எப்படி? இதோ விவரங்கள்:

சைலன்ட்-ஆ WhatsApp-க்கு வந்த புதிய 60 செக்கென்ட் அம்சம்!

அதென்ன அம்சம்? வாட்ஸ்அப்பில் ஷார்ட் வீடியோ மெசேஜ் (Short Video Message) என்கிற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சமத்தின் பெயர் குறிப்பிடுவது போலவே, இது குறுகிய வீடியோக்களை உடனடி மெசேஜ்களாக (Instant Message) அனுப்ப உதவும் ஒரு அம்சமாகும்.

முன்னதாக வாட்ஸ்அப் பயனர்களால், ஆடியோ (Audio) அல்லது டெக்ஸ்ட் மெசேஜ்களை மட்டுமே ரிப்ளையாக அனுப்ப முடிந்தது. ஆனால் இனிமேல் குறுகிய வீடியோக்களை பதிவுசெய்து, அதை டெக்ஸ்ட் மெசேஜ்களுக்கான ரிப்ளையாக அனுப்ப முடியும். இந்த புதிய அம்சத்தின் கீழ் உங்களால் 60 வினாடிகள் வரை நீளும் ரியல்டைம் வீடியோ மெசேஜை (Realtime Video Message) ரிப்ளையாக அனுப்ப முடியும்.

வாட்ஸ்அப்பின் கீழ் உள்ள மற்ற மெசேஜ்களை போலவே ஷார்ட் வீடியோ மெசேஜும் கூட எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ட் (End-to-end Encrypt) செய்யப்பட்ட மெசேஜ்களாக இருக்கும் என்று வாட்ஸ்அப் நிறுவனம் கூறுகிறது. அதாவது நீங்கள் யாருக்கு ஒரு ஷார்ட் வீடியோ மெசேஜை அனுப்புகிறீர்களோ, அவரை தவிர்த்து வேறு யாராலும் (வாட்ஸ்அப் நிறுவனத்தால் கூட) அதை பார்க்கவோ, அணுகவோ முடியாது என்று அர்த்தம்.

ஷார்ட் வீடியோ மெசேஜ் அம்சத்தின் ரோல் அவுட் (வெளியீடு) ஏற்கனவே தொடங்கி விட்டது. இது கூடிய விரைவில் உலகளவில் உள்ள அனைத்து வாட்ஸ்அப் பயனர்களுக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். முன்னரே குறிப்பிட்டபடி இது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆகிய இரண்டிலுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒருவேளை இந்த புதிய 60 செக்கென்ட வீடியோ அம்சத்தை பயன்படுத்தி பார்க்க நீங்கள் மிகவும் ஆர்வமாக இருந்தால், அவ்வப்போது வாட்ஸ்அப்பிற்கு லேட்டஸ்ட் அப்டேட் (Latest Update) வந்துள்ளதா என்பதை கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) வழியாக அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோர் (Apple App Store) வழியாக செக் செய்யவும்.

வாட்ஸ்அப்பில் ஷார்ட் வீடியோ மெசேஜை எப்படி அனுப்புவது? ஷார்ட் வீடியோ மெசேஜ் அனுப்புவது வைஸ் மெசேஜை அனுப்புவதை போலவே மிகவும் எளிமையாக இருக்கும். வீடியோ மோட்-க்கு (Video Mode) மாறி, அதை லாங் பிரஸ் அல்லது ஹோல்ட் (Long Press OR Hold) செய்வதன் மூலம் உங்களால் ஒரு ஷார்ட் வீடியோவை பதிவுசெய்ய முடியும்; பின்னர் அதை ரிப்ளையாக அனுப்பலாம். அவ்வளவு தான்!

வீடியோ ரெக்கார்டிங் செய்யும் போது மேல் நோக்கி ஸ்வைப் (Swipe Up) செய்வதன் மூலம் நீங்கள் ரெக்கார்ட் செய்யும் வீடியோவை லாக் (Lock) செய்வதற்கான விருப்பமும் உங்களுக்கு கிடைக்கும். அதாவது வாய்ஸ் ரெக்கார்டிங் மெசேஜில் கிடைப்பது போலவே ஷார்ட் வீடியோ மெசேஜ் அம்சத்திலும் லாக் அம்சம் அணுக கிடைக்கும்; இது லாங் பிரஸ் அல்லது ஹோல்ட் செய்யும் வேலையை குறைக்கும் ஒரு வசதியாகும்.

கடைசியாக ஷார்ட் வீடியோ மெசேஜில் கவனிக்கப்பட வேண்டிய இன்னொரு வசதியும் உள்ளது. அது என்னவென்றால், நீங்கள் ஒருவருக்கு ஷார்ட் வீடியோ மெசேஜ் அனுப்பும் போது, அதை அவர் கிளிக் செய்து திறந்தால் மட்டுமே குறிப்பிட்ட வீடியோவானது சவுண்ட் (Sound) உடன் பிளே ஆகும்; இல்லை என்றால் அது தானாகவே சத்தம் இல்லாமல் அவரது வாட்ஸ்அப் சாட் ஸ்க்ரீனில் பிளே ஆகும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Short Video Message Feature Added in WhatsApp With 60 Seconds Time Limit How to Send
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X