போட்டியா., பொறாமையா?- இது சும்மா., நாங்க வேற லெவல்- பெரும் பணக்காரர்களின் டுவிட் மோதல்!

|

ஜெஃப் பெசோஸ்-ன் ப்ளூ ஆரிஜின் நிறுவனம் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் நிறுவனத்துடன் ஒப்பிடும்படியான டுவீட்களை பகிர்ந்து கொண்டது. பெரும் பணக்காரர்களான ஜெஃப் பெசோஸ், ரிச்சர்ட் பிரான்சன் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் தங்களது விண்வெளி பயணத்துக்கான நடவடிக்கையில் தொடர்ந்து முன்னேற்ற ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். விண்வெளி பயணம் என்ற குறி பலரது கனவமாக இருக்கிறது.

ஜெஃப் பெசோஸ், எலான் மஸ்க், ரிச்சர்ட் பிரான்சன்

ஜெஃப் பெசோஸ்-ன் ப்ளூ ஆர்ஜின் நிறுவனம், எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ், ரிச்சர்ட் பிரான்சனின் விர்ஜின் கேலக்டிக் ஆகிய நிறுவனங்கள் விண்வெளி சுற்றுலா பயணத்தில் முணைப்புகள் காட்டி வருகின்றனர். தொழிலதிபரான பிரான்சன் தனது விர்ஜின் கேலக்டிக் மூலம் உருவாக்கப்பட்ட ஷிப்-ல் கடந்த ஞாயிற்றுக்கிழமை விண்ணுக்கு பயணித்தார்.

கர்மன் கோட்டிற்கு மேலே பயணம்

ப்ளூ ஆர்ஜின் விண்வெளி ஷிப் கர்மன் கோட்டிற்கு மேலே பயணிக்கக் கூடியது இது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லை ஆகும். ஆனால் விர்ஜின் கேலக்டிக் விண்வெளி பயணம் மிகக் குறைவு என்பதை சுட்டிக்காட்டினார்.

ப்ளூ ஆர்ஜின் நேரடியாக டுவிட்

ப்ளூ ஆர்ஜின் நேரடியாக டுவிட்

ப்ளூ ஆர்ஜின் நேரடியாக டுவிட் செய்யாமல் மறைமுகமாக டுவிட் செய்யப்பட்டது. புதிய ஷெப்பர்ட் ராக்கெட் கோர்மன் கோட்டிற்கு மேலே பறக்கக் கூடியது. எனவே தங்கள் வீரர்கள் யாரும் தங்கள் பெயருக்கு அடுத்து நட்சத்திர குறியீட்டை கொண்டிருக்கவில்லை என குறிப்பிட்டார். அதோடு விர்ஜிந் கேலக்டிக் விட புதிய ஷெப்பர்ட் ஏன் சிறந்தது என்பதை விளக்கும் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டது. இது ஜன்னல்கள் மற்றும் தப்பிக்கும் அளவையும் ஒப்பிடுகிறது.

விர்ஜின் கேலக்டிக் உருவாக்கிய சூப்பர்சோனிக்

விர்ஜின் கேலக்டிக் உருவாக்கிய சூப்பர்சோனிக்

ரிச்சர்ட் பிரான்சனின் நிறுவனமான விர்ஜின் கேலக்டிக் உருவாக்கிய சூப்பர்சோனிக் விண்வெளி பயணம் செய்த முதல் நபர் ஆனார். அவரது நிறுவனமான விர்ஜின் கேலடிக் விண்வெளி விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நியூ மெக்ஸிகோவில் இருந்து வானத்துக்கு பறந்தது. இதில் பிரான்சன் மற்றும் மூன்று சக பணியாளர்களை சுமந்து சென்றது.

வானத்தை நோக்கி 50,000 அடி உயர பயணம்

வானத்தை நோக்கி 50,000 அடி உயர பயணம்

பிரான்சன் விர்ஜின் கேலடிக் ஊழியர்களான பெத் மோசஸ், கொலின் பென்னட் மற்றும் சிரிஷா பாண்ட்லா உட்பட விமானிகள் டேவ் மேக்கே மற்றும் மைக்கேல் மசூசி ஆகியோருடன் ஸ்பேஸ்ஷிப் விண்ணில் பறந்தது. வானத்தை நோக்கி 50,000 அடி உயரத்தில் பறந்தது. பிரிட்டன் தொழிலதிபரான ரிச்சர்ட் பிரான்சன், விண்ணுக்கு சென்று திரும்ப வேண்டும் என்ற கனவு நினைவாகியுள்ளதாக குறிப்பிட்டார்.

தொடர்ந்து நடத்தப்படும் விண்வெளி சோதனை

தொடர்ந்து நடத்தப்படும் விண்வெளி சோதனை

ப்ளு ஆர்ஜின் நிறுவனம் விண்வெளி ஓடங்களையும், விண்வெளி வாகனங்களுக்குத் தேவையான பொருட்களையும் தயாரிக்கிறது. பயணிகளை மிகப் பாதுகாப்பாக விண்வெளிக்கு அழைத்துச் சென்று, திரும்ப அழைத்து வருவதற்கான ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டு வருகிறது. இந்த ஆய்வுக்காக நியூ செப்பர்டு (என்எஸ்) என்ற பெயரில் ராக்கெட்டை உருவாக்கி விண்வெளிக்கு அனுப்பிச் சோதித்து வருகிறது.

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் 10 நிமிடம்

பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் 10 நிமிடம்

சோதனை ஏவுதலில் பயணிகள் இல்லாமல் ராக்கெட்டின் மேல் கேப்ஸ்யூல்கள் எதிர்கால விமானங்களுக்கு ஆறு பேரை ஏற்றிச்செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இதற்குமுன்பு நடத்தப்பட்ட சோதனையில் கேப்ஸ்யூல்கள் சுமார் 3,40,000 அடிக்கு மேல் அதாவது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட விண்வெளி எல்லைக்கு மேலே சுமார் 100 கிமீ உயரத்தை எட்டி பூமிக்கு திரும்பியது. பூஜ்ஜிய ஈர்ப்பு விசையில் 10 நிமிடங்கள் தாக்குப்பிடித்தது.

விண்வெளிக்கு பயணிக்கும் பெசோஸ்

விண்வெளிக்கு பயணிக்கும் பெசோஸ்

விண்வெளிக்கு அனுப்பும் கேப்ஸ்யூல்களில் பயணிகளின் பார்வைக்கு மிகப்பெரிய ஜன்னல் உள்ளது. ஜூலை 20 ஆம் தேதி விண்ணுக்கு செல்லும் நியூசெப்பர்டு விண்கலத்தில் மொத்தம் 6 பேர் பயணம் மேற்கொள்ளலாம். இதில் ஜெஃப் பெசோஸ் மற்றும் அவரது தம்பி விண்வெளி பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இவர்களுடன் 82 வயதான பெண் வாலி ஃபங்க் என்பவரும் செல்ல இருக்கிறார்.

எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ்

எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ்

எலான் மஸ்க்கின் கனவுத்திட்டமாக கூறப்படுவது செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்பும் திட்டமாகும். இதற்கான விண்வெளி சோதனை தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதற்கான விண்வெளி சோதனையில் தொடர்ந்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
New Shepard designed to fly above karma line: Blue Origin Tweets to Mention Branson space travel

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X