Home
News

2 போன், 3 ஸ்மார்ட் வாட்ச் உட்பட.. ஜூலை 26ல் Samsung அறிமுகம் செய்யப்போகும் 8 புதிய தயாரிப்புகள்!

சாம்சங்கின் (Samsung) அதன் அடுத்த கேலக்ஸி அன்பேக்டு (Galaxy Unpacked) வெளியீட்டு நிகழ்வானது எப்போது நடக்கும் என்கிற தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நிகழ்வின் போது 2 ஸ்மார்ட்போன்கள், 3 ஸ்மார்ட்வாட்ச்கள் உட்பட மொத்தம் 7க்கும் மேற்பட்ட புதிய தயாரிப்புகள் அறிமுகமாகுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு வெளியீட்டு நிகழ்வானது வருகிற ஜூலை 26 ஆம் தேதியன்று நடக்குமென்றும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல இந்நிகழ்விலும், சாம்சங் அதன் பிரீமியம் கேலக்ஸி தயாரிப்புகளை அறிமுகம் செய்யும் என்பதில் சந்தேகமே வேண்டாம். அப்படியாக என்னென்ன அறிமுகமாகும் என்கிற பட்டியல் இதோ:

ஜூலை 26ல் Samsung அறிமுகம் செய்யப்போகும் 8 புதிய தயாரிப்புகள்!

2 புதிய ஸ்மார்ட்போன்கள்: ஜூலை 26ல் நடக்கும் நிகழ்வின் போது (கட்டாயமாக) சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 (Samsung Galaxy Z Flip 5) மற்றும் சாம்சங் கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 (Samsung Galaxy Z Fold 5) ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்படும்.

அம்சங்களை பொறுத்தவரை, அதிகாரப்பூர்வ போஸ்டர் ஆனது கேலக்ஸி இஸட் ஃபிளிப் 5 ஸ்மார்ட்போனில் ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரை வெளிப்படுத்துகிறது. இதுதவிர்த்து, இந்த இரண்டு புதிய ஃபோல்டிங் டிவைஸ்களுமே ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 சிப்செட் அல்லது இன்னும் அறிவிக்கப்படாத ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 2 சிப்செட் மூலம் இயக்கப்படலாம்.

இவ்விரு ஸ்மார்ட்போன்களின் கேமராக்களும் கூட நல்ல முன்னேற்றங்களை காணும். கேலக்ஸி இஸட் ஃபோல்ட் 5 ஆனது சக்திவாய்ந்த 200-மெகாபிக்சல் 1/1.3-இன்ச் ஐசோசெல் எச்பி2 கேமரா சென்சார் உடன் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நினைவூட்டும் இதே சென்சார் தான் கேலக்ஸி எஸ்23 அல்ட்ராவிலும் உள்ளது.

3 புதிய ஸ்மார்ட்வாட்சுகள்: சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு வெளியீட்டு நிகழ்வில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடல்களும் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிகழ்வில் சாம்சங் வாட்ச் 6 சீரீஸின் கீழ் வாட்ச் 6 மற்றும் வாட்ச் 6 கிளாசிக் ஸ்மார்ட்வாட்ச்கள் அறிமுகம் செய்யப்படலாம்.

கூடுதலாக, கேலக்ஸி வாட்ச் ப்ரோ மாடலும் இந்த ஆண்டு அறிமுகமாகலாம். அம்சங்களை பொறுத்தவரை, வாட்ச் 6 மற்றும் வாட்ச் 6 கிளாசிக் ஆகிய இரண்டும் முந்தைய வாட்ச் சீரிஸை போலவே வெவ்வேறு அளவுகளில் வெளியாகும். அளவுகளில் மாறுபாடுகள் இருக்கலாம் என்றாலும் கூட, அம்சங்கள் எல்லாமே ஒரே மாதிரியாகவே இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

3 புதிய டேப்லெட்கள்: புதிய ஸ்மார்ட்போன்கள், புதிய ஸ்மார்ட் வாட்சுகளுடன் சேர்த்து சாம்சங் கேலக்ஸி அன்பேக்டு வெளியீட்டு நிகழ்வில் கேலக்ஸி டேப் எஸ் 9 சீரிஸின் கீழ் புதிய சாம்சங் டேப்லெட்களும் அறிமுகம் செய்யப்படலாம். இந்த சீரீஸின் கீழ் மூன்று வெவ்வேறு அளவுகளில் டேப்லெட்கள் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவைகள் மேம்படுத்தப்பட்ட செயல்திறன்களை வழங்கும் சமீபத்திய குவால்காம் சிப்செட்களுடன் அறிமுகம் செய்யப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Samsung Products Will Launch in Unpacked Event on July 26 Including Galaxy Z Flip 5 and Fold 5
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X