Home
News

உலகத்தில எங்க இருந்தாலும் இடத்தை துல்லியமாக காட்டும் புது Samsung சாதனம்! Apple-க்கு போட்டியா?

சாம்சங் (Samsung) நிறுவனம் அதன் தயாரிப்பு போர்ட்போலியோ வரிசையில் ஒரு புதிய சாதனத்தைச் சேர்க்கவுள்ளது. இரண்டு ஆண்டு இடைவேளைக்கு பிறகு, நிறுவனம் இப்போது அதன் புதிய சாம்சங் ஸ்மார்ட் டேக் (Samsung SmartTag) சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட் டேக் என்று சொன்னதும் பலரின் நினைவிற்கு, ஆப்பிள் (Apple) நிறுவனத்தின் ஏர் டேக் (Air Tag) கட்டாயம் நினைவிற்கு வந்திருக்கும். சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட் டேக் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர் டேக் போன்ற சாதனங்கள் ஜிபிஎஸ் டிராக்கர் கருவிகளாக உலகளவில் பயன்படுத்தப்படுகிறது. பல காரணங்களுக்காக, பல விதமான பயன்பாட்டிற்காக இதை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

உலகத்தில எங்க இருந்தாலும் இடத்தை துல்லியமா காட்டும் Samsung சாதனம்!

சாம்சங் ஸ்மார்ட் டேக் என்றால் என்ன? இது என்ன செய்யும்?

சாம்சங் நிறுவனம் இதற்கு முன், அதாவது 2 வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்த ஸ்மார்ட் டேக் அம்சத்துடன் ஒப்பிடுகையில் அதன் புதிய ஸ்மார்ட் டேக் சாதனத்தில் என்னென்ன முன்னேற்றங்களையும், மேம்படுத்தல்களையும் நிறுவனம் கொண்டுவந்துள்ளது என்று பார்க்கலாம் வாங்க. சாம்சங் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை கேலக்ஸி ஸ்மார்ட் டேக் சாதனத்தை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகப்படுத்த உள்ளது.

தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஒரு ஸ்மார்ட் டேக் சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது. சாம்சங்கின் முதல் கேலக்ஸி ஸ்மார்ட் டேக் எனப்படும் முதல் ஆப்ஜெக்ட் டிராக்கர் சாதனம், முதன்முதலில் அதிகாரப்பூர்வமாக 2021 இல் வெளியிடப்பட்டது. SamMobile இன் கூற்றுப்படி, தொழில்நுட்ப நிறுவனமானது உலகளவில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட சாதனத்தைத் தொடர்ந்து, இப்போது மீண்டும் ஒரு புதிய சாதனத்தை அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த Samsung Galaxy SmartTag எப்போது அறிமுகமாகும்?

இந்த புதிய சாம்சங் ஸ்மார்ட் டேக் சாதனத்தை சாம்சங் நிறுவனம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில், இரண்டாம் தலைமுறை கேலக்ஸி ஸ்மார்ட் டேக் என்ற பெயருடன் அறிமுகம் செய்யுமென்று தகவல்கள் வெளியாகியுள்ளது. வரவிருக்கும் ஆப்ஜெக்ட் டிராக்கர் மேம்படுத்தப்பட்ட வயர்லெஸ் வரம்பு, பீப்பர் சவுண்ட் மற்றும் அங்கீகரிக்கப்படாத கண்காணிப்பைத் தடுக்க உதவும் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகத்தில எங்க இருந்தாலும் இடத்தை துல்லியமா காட்டும் Samsung சாதனம்!

இத்துடன் Samsung நிறுவனம் என்னென்ன சாதனங்களை அறிமுகம் செய்யவுள்ளது தெரியுமா?

சாம்சங் அதன் புதிய Samsung Galaxy SmartTag உடன் அதன் அடுத்த தலைமுறை அணியக்கூடிய சாதனங்களான Samsung Galaxy Watch 6 மற்றும் Samsung Galaxy Buds 3 ஆகியவற்றை வெளியிட வாய்ப்புள்ளது. மேலும், நிறுவனம் தனது அடுத்த தலைமுறை போல்டபில் ஸ்மார்ட்போன்களை அதே நிகழ்வில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மடிக்கக்கூடிய சாதனங்கள் Samsung Galaxy Z தொடரின் கீழ் வருமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

சாம்சங் ஸ்மார்ட் டேக் விலை என்ன?

இதில் Samsung Galaxy Z Flip 5 மற்றும் Samsung Galaxy Z Fold 5 என இரண்டு சாதனங்கள் எதிர்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப நிறுவனமான சாம்சங் தற்போது விற்பனையில் வைத்திருக்கும் Samsung Galaxy SmartTag டிவைஸை 2021 இல் $29.99-க்கு அறிமுகப்படுத்தியது. இது இந்திய மத்தியில் சுமார் ரூ.2,460 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. மறுபுறம் ஆப்பிள் நிறுவனத்தின் ஏர் டேக் இந்தியாவில் ரூ. 3,350 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட் டேக் சாதனத்தை மக்கள் ஸ்மார்ட் டேக் சாவிகளாக பயன்படுத்தலாம், லக்கேஜ் உடன் இணைக்க, செல்லப்பிராணிகளின் காலர் பெட் உடன் இணைத்து ட்ராக் செய்ய, மற்றும் மதிப்புமிக்க பொருட்களுடன் இணைக்கப்பட்டு அதன் இடத்தை தொடர்ந்து கண்காணிக்க உதவும் அம்சத்துடன் வருகிறது. மொபைல் பயன்பாட்டின் மூலம் இவற்றின் இடத்தை நாம் கண்காணிக்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Samsung Galaxy SmartTag Device That Accurately Shows The Location Anywhere In The World
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X