Home
News

சாம்சங் வரிசையில் இப்படியொரு மிரட்டலான போன்-ஆ! கெத்து காட்டும் Samsung Galaxy S21 FE 5G (2023)!

சாம்சங் நிறுவனம் புதிதாக சாம்சங் கேலக்ஸி S21 FE 5ஜி (Samsung Galaxy S21 FE 5G) என்ற ஸ்மார்ட்போன் மாடலை அட்டகாசமான அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆண்டின் புதிய மாடல் FE சீரிஸ் போனாக அறிமுகம் செய்யப்படுகிறது.

Samsung Galaxy S21 FE 5G (2023) ஸ்மார்ட்போனில் புதிய சிப்செட் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட Samsung Galaxy S21 FE 5G சாதனத்தின் அசல் மாடலில் உள்ள அதே விவரக்குறிப்புகள் இதிலும் பின்பற்றப்பட்டுள்ளது. இது குவால்காமில் இருந்து ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் வருகிறது.

சாம்சங் வரிசையில் இப்படியொரு மிரட்டலான போன்-ஆ! கெத்து காட்டுதே!

இது 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த சாதனம் புதிய வண்ணத்தில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்புடன் 6.4' இன்ச் முழு HD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும். இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 240Hz டச் சாம்பிளிங் வீதம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

அசல் Samsung Galaxy S21 FE 5G மாடலைப் போலவே, புதிய Samsung Galaxy S21 FE 5G (2023) ஆனது 12MP பிரைமரி கேமரா, 12MP அல்ட்ரா-வைட் கேமரா மற்றும் 8MP டெலிஃபோட்டோ கேமரா ஆகியவற்றைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில் இது 32MP கேமராவைக் கொண்டுள்ளது. Samsung Galaxy S21 FE (2023) ஒற்றை 256ஜிபி ஸ்டோரேஜ் உடன் கிடைக்கும்.

இணைப்பு விருப்பங்களை பொறுத்தவரை, இது 5G, 4G LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5, NFC, GPS/ A-GPS, வயர்லெஸ் DeX மற்றும் யுஎச்பி டைப் C ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக, Samsung Galaxy S21 FE (2023) இன்-டிஸ்ப்ளே கைரேகை ஸ்கேனருடன் பொருத்தப்பட்டுள்ளது. இது ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.

கூடுதலாக இதில் 25W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவுகளை நிறுவனம் வழங்கியுள்ளது. இது 4,500mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இது வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் பாதுகாப்பிற்கான IP68 மதிப்பீட்டைக் கொண்டுள்ளது. இந்த சாதனத்தின் விலை பற்றி பேசுகையில், இது இந்தியாவில் ரூ. 49,999 விலையில் வெளிவரும்.

சாம்சங் வரிசையில் இப்படியொரு மிரட்டலான போன்-ஆ! கெத்து காட்டுதே!

இந்த போன் ஒற்றை 8ஜிபி + 256ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் கொண்ட மாடலாக வாங்க கிடைக்கும். இது கிராஃபைட், லாவெண்டர், ஆலிவ் மற்றும் ஒயிட் மற்றும் புதிய நேவி போன்ற வண்ண விருப்பங்களில் வாங்க கிடைக்கும். அசத்தலான டிஸ்பிளே, மிரட்டலான கேமரா அம்சம் மற்றும் சூப்பர் பெர்பார்மென்ஸ் உடன் வருகிறது. இந்த போனை வாங்க தயக்கமே தேவையில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Samsung Galaxy S21 FE 5G (2023) Mobile Launched In India With Snapdragon 888 Chipset
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X