WhatsApp-க்கு வந்த புதிய கெடுபிடி.. இனிமேல் உங்கள் இஷ்டம் போல Status வைக்க முடியாது!
வாட்ஸ்அப்பில் (WhatsApp) புதிய அம்சம் என்கிற பெயரில் ஒரு புதிய கெடுபிடி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதென்ன கெடுபிடி? ஸ்டேட்டஸ் (Status) வைப்பதற்கும் அதற்கும் என்ன சம்பந்தம்? இதோ விவரங்கள்:

நேற்று வரையிலாக எந்த கெடுபிடியும் இல்லை!
ஸ்டேட்ஸ் (Status) என்கிற பெயரில் வாட்ஸ்அப்பில் "இரயில் விடும்" பழக்கம் உங்களுக்கோ அல்லது உங்களுடைய வாட்ஸ்அப் தொடர்புகளில் உள்ள யாருக்கோ இருந்தால்.. நேற்று வரையிலாக உங்களுக்கு எந்த கெடுபிடியும் இல்லை. ஆனால் இனிமேல் இருக்கும்!
இன்னொரு கொடுமையான விஷயம் என்னவென்றால், வாட்ஸ்அப் நிறுவனம் இந்த "கெடுபிடியை" செக்யூரிட்டி தொடர்பான அம்சம் (Safety Feature) என்கிறது!

அப்படி என்ன அம்சம்?
சமீபத்தில், ஆக்சிடென்டல் டெலிட் (Accidental Delete) என்கிற புதிய அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டது அல்லவா? அதனை தொடர்ந்து ரிப்போர்ட் ஸ்டேட்டஸ் (Report Status) என்கிற ஒரு அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
WABetaInfo வழியாக கிடைத்துள்ள தகவலின்படி, வாட்ஸ்அப்பில் ரிப்போர்ட் ஸ்டேட்டஸ் என்கிற அம்சம் கூடிய விரைவில் அறிமுகம் செய்யப்படும் மற்றும் இந்த அம்சத்தின் பெயர் குறிப்பிடுவது போலவே இது ஸ்டேட்டஸ்களை ரிப்போர்ட் செய்ய உதவும்!

எதற்காக ஒரு ஸ்டேட்டஸை ரிப்போர்ட் செய்ய வேண்டும்?
வாட்ஸ்அப்பில் ரிப்போர்ட் (Report) என்கிற அம்சம் கிடைப்பது ஒன்றும் புதிதல்ல. வாட்ஸ்அப் நிறுவனத்திற்கென்று சில சேவை விதிமுறைகள் உள்ளன.
அதை யாராவது மீறும் பட்சத்தில், அது தொடர்பான புகாரை சக பயனர்களே அளிக்கலாம் என்பது தான் வாட்ஸ்அப் நிறுவனத்தின் அல்டிமேட் ஆன யோசனை ஆகும். அந்த யோசனையின் கீழ் உருவானது தான் - ரிப்போர்ட் என்கிற அம்சம்.
நேற்று வரையிலாக, இந்த ரிப்போர்ட் அம்சம் வாட்ஸ்அப் மெசேஜ், வாட்ஸ்அப் காண்டாக்ட்களில் மட்டுமே அணுக கிடைத்தது. ஆனால் தற்போது டெஸ்கட்டாப் பீட்டா வெர்ஷனின் கீழ் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸிலும் அணுக கிடைக்கிறது!

ரிப்போர்ட் செய்தால் என்ன ஆகும்?
வழக்கமாக நீங்கள் ஒரு வாட்ஸ்அப் காண்டாக்ட்டை பற்றி புகாரளிக்கும்போது, அந்த நம்பரின் கீழ் நடந்த உரையாடலில் உள்ள கடைசி 5 மெசேஜ்கள் ஆனது WhatsApp-க்கு அனுப்பப்படும்; அல்லது நீங்கள் ஒரு குறிப்பிட்ட மெசேஜை கூட ரிப்போர்ட் செய்யலாம்.
இப்படி செய்வதன் மூலம் வாட்ஸ்அப் தனது இயங்குதளத்தை பாதுகாப்பாக வைத்திருப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதே போன்ற செயல்முறை தான் தற்போது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மீதும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி தற்போது வரையிலாக, இந்த அம்சம் வளர்ச்சி நிலையில் தான் உள்ளது. கூடிய விரைவில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் பயனர்களுக்கு வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்அப் வழியாக ஒரு காண்டாக்ட்-ஐ ரிப்போர்ட் செய்வது எப்படி?
- முதலில் நீங்கள் ரிப்போர்ட் செய்ய விரும்பும் நபரின் சாட்-ஐ (Chat) திறக்கவும்.
- பின்னர் மோர் ஆப்ஷன்ஸ்-ஐ கிளிக் செய்யவும்; அதாவது செங்குத்தான மூன்று புள்ளிகளை கிளிக் செய்யவும்.
- அதை தொடர்ந்து மோர் (More) என்பதை கிளிக் செய்து பின்னர் ரிப்போர்ட் (Report) என்கிற விருப்பத்தை தேர்வு செய்யவும்; அவ்வளவு தான்!

ரிப்போர்ட் செய்தால்... நாம் மாட்டிக்கொள்வோமா?
இல்லை! ரிப்போர்ட் செய்வதன் மூலம் புகாரளிக்கப்பட்ட ஒரு பயனர் அல்லது ஒரு க்ரூப்பின் (Group) வழியாக உங்களுக்கு அனுப்பப்பட்ட கடைசி 5 மெசேஜ்கள் ஆனது வாட்ஸ்அப்பிற்கு அனுப்பப்படும். ஆனால் அது தொடர்பான எந்த தகவலுமே அவர்களுக்கு அறிவிக்கப்படாது.
ஒரு வாட்ஸ்அப் அக்கவுண்ட்-ஐ ரிப்போர்ட் செய்ய, அந்த அக்கவுண்ட் வழியாக உங்களுக்கு கிடைத்த ஒரு சிங்கிள் மெஸேஜையும் கூட நீங்கள் பயன்படுத்தலாம். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியதில்லாம், ரிப்போர்ட் என்கிற ஆப்ஷன் கிடைக்கு, குறிப்பிட்ட மெசேஜை லாங் பிரஸ் (Long Press) செய்ய வேண்டும்! அவ்வளவு தான்!


Click it and Unblock the Notifications