Home
News

ஆதார் அட்டை + டிரைவிங் லைசன்ஸ் எடுத்து வச்சுக்கோங்க.. அடுத்த புது ரூல்ஸ்.. சாலை விதிகளை மீறினால் நேரடி வசூல்..

இந்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் (Ministry of Road Transport of India), இந்திய வாகன ஓட்டுனர்களுக்கான புதிய விதிமுறையை நடைமுறைக்கு கொண்டு வரப் பரிசீலித்து வருகிறது. சாலை விதிமுறைகளை மீறித் தண்டனைகளைத் தவிர்க்கும் நபர்களை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஆதார் அட்டையில் (Aadhaar) உள்ள அப்டேட் செய்யப்பட்ட தகவல்களுடன் டிரைவிங் லைசன்ஸ் (Driving License) தகவலை இணைப்பதற்கான நடவடிக்கைள் விரைவில் எடுக்கப்படவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள ரூ. 12,000 கோடி e-சலான்கள் வசூலிக்கப்படாமல் இருப்பதும், மோசமான வாகன ஓட்டுனர்களின் அலட்சியத்தை கட்டுப்படுத்தும் முயற்சியாக புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவை பொறுத்தவரையில் 100-க்கு 2 சதவீதம் மக்கள் மட்டுமே சாலை விதிமுறைகளை (road rules) ஒழுங்காக பின்பற்றி கடைபிடிக்கின்றனர் என்று கூறப்படுகிறது. மீதம் உள்ள 98% மக்கள் கூட்டம் சாலை விதிமுறைகளை சரிவர கடைபிடிக்காமல், ஒருமுறையாவது மீறிவிடும் அலட்சிய போக்கை கொண்டுள்ளனர். இது நீண்ட காலமாக நடைபெறும் ஒரு அலட்சிய போக்காக இருக்கிறது.

ஆதார் அட்டை + டிரைவிங் லைசன்ஸ் எடுத்து வச்சுக்கோங்க.. அடுத்த புது ரூல்

என்ன தான் சாலை போக்குவரத்து விதிமுறைகளை (Road traffic rules and regulations) அரசாங்கம் கடுமைப்படுத்தினாலும், தொடர்ந்து தவறிழைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வருகிறது. என்ன தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும், தொடர்ந்து அபத்தங்கள் (fine amount) விதிக்கப்பட்டாலும், சாலை போக்குவரத்துக்கு விதிமீறல்கள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது என்கிறார் வாகனப் போக்குவரத்துச் செயலாளர் வி. உமாசங்கர் (union road transport secretary V Umashankar). இந்த போக்கை தடுத்து நிறுத்த புதிய விதிமுறைகளை (new rules) சாலைப் போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

வாகன உரிமையாளர்கள் அல்லது ஓட்டுநர் உரிமம் பெற்ற அனைவரும் அவர்களுடைய தொடர்பு விவரங்கள் (contact details), முகவரி (address) மற்றும் மொபைல் எண் (mobile number) போன்றவற்றை புதுப்பித்த நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று புதிய விதிமுறை நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இதில் டிரைவிங் லைசன்ஸ் (Driving license - DL) தகவலில் குறிப்பிடப்பட வேண்டிய முகவரி மற்றும் மொபைல் எண் விபரங்கள் ஆதார் தகவலுடன் (Aadhaar card details) ஒத்துப்போக வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

மோட்டார் வாகனச் சட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட உள்ள இந்த மாற்றங்கள் மூலம் அதிகாரிகள் சாலை விதிமுறை மீறல்களுக்கு காரணமான நபர்களை எளிதாக அடையாளம் கனவும், அவர்களை தொடர்பு கொள்ள எளிதான வழிமுறையை உருவாக்கும் என்றும் அவர் கூறியிருக்கிறார். இந்த புதிய விதிமுறையை நடைமுறைக்கு கொண்டு வர ஒரு முக்கிய காரணம், ரூ. 12,000 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கப்படாத e-சலான்கள் (e-challan) அரசாங்கத்திடம் இன்னும் நிலுவையில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த தொகை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். e-சலான் அபாரதங்கள் (traffic e-challan fine amount) விதிக்கப்பட்டும், சரியான பயனர் தகவல் இல்லாத காரணத்தினால், இவை வசூலிக்கப்படாமல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதேபோல், இந்த விதிமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால், சாலை போக்குவரத்துக்கு சேவை இன்னும் கூடுதல் பாதுகாப்பானதாக மேம்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த விதிமுறை நடைமுறைக்கு கொண்டுவரப்பட்ட பின், வாகன ஓட்டுனர்கள் அவர்களின் தகவல்களை அப்டேட் செய்ய தவறினால், அவர்களின் ஓட்டுநர் உரிமம், வாகனத்தின் உரிமம் (vehicle registration), அதிக காப்பீட்டு பிரீமியம் (insurance premium) தொகை வசூல், காப்பீடு நிராகரிப்பு, காப்பீடு ரத்து போன்ற முக்கியமான உரிமங்கள் தடை செய்யப்படும் என்றும், அதேபோல், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் இனி சாலை விதிமுறைகளை பொதுமக்கள் அனைவரும் சரியாக பின்பற்றுவார்கள் என்று நம்பப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules For Vehicle Owners and Driving License Holders To Update Address Mobile Number As Per Aadhaar Card Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X