Home
News

புது ரூல்ஸ்.. நவ.1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் இருக்கா.. இனி பணம் அனுப்ப படாதபாடு.. என்னென்ன வருது?

உங்க பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து மற்றொரு பேங்க் அக்கவுண்ட்டுக்கு எளிதாக பணம் அனுப்புவது இனிமேல் அவ்வளவு எளிதாக இருக்காது. ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) கொண்டுவந்துள்ள புதிய பணப் பரிமாற்ற விதிகள் (New Money Transfer Rules) நேரடியாக அதில் மாற்றங்களை கொண்டுவர இருக்கின்றன. நவம்பர் 1ஆம் தேதி முதல் பேங்க் பணம் அனுப்புவதில் பல்வேறு கட்டங்களை கஸ்டமர்கள் பார்க்க வேண்டி இருக்கும். இதுகுறித்த முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

பணத்தை ஒருவருக்கு கொடுத்தாலும் சரி, மற்றொருவரிடம் இருந்து வாங்கினாலும் சரி பேங்க் அக்கவுண்ட் இருந்தால் மட்டுமே பாதுகாப்பாக பரிவர்த்தனை செய்து கொள்ள முடிகிறது. இப்படி கோடிக்கணக்கான பணம் பேங்க் அக்கவுண்ட்கள் மூலம் பரிவர்த்தை செய்யப்படுவதால், அதில் வரும் கட்டுப்பாடுகளுக்கு ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களும் கட்டுப்பட வேண்டி இருக்கிறது.

புது ரூல்ஸ்.. நவ.1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட்டில் பணம் அனுப்ப?

இந்த கட்டுப்பாடுகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அடிக்கடி மாற்றி வருகிறது. இப்போது, புதிய பணப் பரிமாற்ற விதிகளை கொண்டு வந்திருக்கிறது. இந்த விதிகள் வரும் நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தாலும், இப்போதே தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் பேங்க் கஸ்டமர்கள் இருக்கின்றனர். ஏனென்றால், பணம் அனுப்புவது எளிதாக இருக்கப் போவதில்லை.

இந்த தேதிக்கு மேல் பேங்க் மூலம் பணம் அனுப்பினால், ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின், கேஒய்சி விதிகளை (KYC Rules) கூடுதலாக பின்பற்ற வேண்டி இருக்கும். இது ஓடிபி (OTP), பின் நம்பருக்கு (PIN Number) அடுத்தபடியாக இருக்கும். அதாவது, கூடுதலாக கேஒய்சி வெரிபிகேஷன்களை (KYC Verifications) செய்த பிறகே, பேங்க் அக்கவுண்ட்கள் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்து முடிக்க முடியும்.

புதிய பணப் பரிமாற்ற விதிகள்: இந்த விதிகள் மூலம் பேங்க் அக்கவுண்ட் (Bank Account), மொபைல் நம்பர் (Mobile Number) மற்றும் பேங்க் கிளை (Bank Branch) விவரங்கள் மட்டுல்லாமல் கூடுதல் விவரங்கள் சேகரிக்கப்பட இருக்கிறது. அதாவது, மேற்கண்ட விவரங்களுக்கு பிறகு கஸ்டமர்களின் பெயர் மற்றும் முகவரி விவரங்கள் அந்தந்த வங்கிகளால் சேகரிக்கப்பட இருக்கிறது.

இது பணம் அனுப்பும் போது ஆதாரத்துக்காக கேட்கப்பட வாய்ப்புள்ளது. இது பெரிய விஷயமல்ல. ஆனால், பணம் அனுப்பும் போது கூடுதல் காரணி அங்கீகாரம் - ஏஎப்ஏ (Additional Factor of Authentication - AFA) கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த அங்கீகாரத்துக்கு வழக்கமாக பேங்குகள் மூலம் அனுப்பப்படும் ஓடிபி மட்டும் போதாது. கூடுதலாக அங்கீகாரம் இருக்கும்.

அதாவது, ஆதார் வெரிபிகேஷன் (Aadhaar Verification) அல்லது ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprint) போன்ற கூடுதல் அங்கீகாரம் வர அதிக வாய்ப்புள்ளது. ஆகவே, பேங்க் மூலம் பணம் அனுப்பும் போது, உங்களது ஃபிங்கர்பிரிண்ட் அல்லது ஆதார் வெரிபிகேஷன் விவரங்களும் கேட்கப்படலாம். இதில் பயோமெட்ரிங் விவரங்கள் இடம்பெறுவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது.

ஆகவே, ஆதார் விவரங்களை பேங்கில் கொடுக்கும்போது அதில் பிழையில்லாமல் பார்த்து கொள்ளுங்கள். ஏனென்றால், மொபைல் நம்பர் மற்றும் அதிகாரப்பூர்வமாக செல்லுபடியாகும் ஆவணம் - ஓவிடி (Officially Valid Document- OVD) ஆகியவை நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு பேங்க் அக்கவுண்ட்களுடன் உங்களது ஆதார் விவரங்கள் சரியாக ஒத்து போனால் மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும்.

ஆகவே, அதை கட்டாயம் அப்டேட் செய்து கொள்ளுங்கள். இந்த புதிய விதிகள் (New Rules) ஐஎம்பிஎஸ் (IMPS) மற்றும் என்இஎப்டி (NEFT) பரிவர்த்தனைகளின் போது விதிக்கப்படும். அதேபோல உள்நாட்டு பணப் பரிமாற்றம் - டிஎம்டி (Domestic Money Transfer - DMT) செய்யும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தக்கூடியாது. ஆகவே, இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பொருந்தும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules November 1 2024 For Domestic Money Transfer Check Reserve Bank of India KYC Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X