போச்சு.. டிச.1 முதல் இந்தியா முழுவதும் இதெல்லாம் மாறுது.. இரவோடு இரவாக புது ரூல்ஸ் அமல்.. ரெடியா இருங்க!
டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 14 ஆம் தேதி முதல் இந்தியா முழுவதும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன, இந்த மாற்றங்கள் எல்லாமே சாதாரண குடிமக்களின் வாழ்க்கையில் நேரடியாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றங்களாக உள்ளன. அப்படியாக என்னென்ன புதிய விதிகள் (New Rules) மற்றும் புதிய ஒழுங்குமுறைகள் டிசம்பர் 2024 முதல் அமலுக்கு வரவுள்ளன. இதோ விவரங்கள்:
01. டிராய்-ன் புதிய டெலிகாம் விதிகள்: ரிலையன்ஸ் ஜியோ (Jio), பார்தி ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) என இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய புதிய டெலிகாம் விதிகள் (New Telecom Rules) டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது, டிசம்பர் 1 ஆம் தேதி முதல், ஒடிபி (OTP) மெசேஜ்கள் உட்பட, அனைத்து கமர்சியல் மெசேஜ்களையும் 'ட்ரேஸ்' செய்யும் நடைமுறையை அமலுக்கு கொண்டுவர வேண்டும் என்று டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
அதாவது டிசம்பர் 1 ஆம் தேதி முதல் கமர்ஷியல் மெசேஜ்களை கண்காணிக்க முடியும் என்பதை ஜியோ தொடங்கி பிஎஸ்என்எல் வரையிலாக அனைத்து டெலிகாம் நிறுவனங்களும் உறுதி செய்ய வேண்டும். மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான ட்ராயின் இந்த புதிய விதி ஆனது வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்துக்கும் பொருந்தும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இப்படி செய்வதன் மூலம் ஸ்பேம் மெசேஜ்களை (Spam Messages) கட்டுப்படுத்தலாம் என்றும், மெசேஜிங் சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கலாம் என்றும் டிராய் நம்புகிறது. இதற்கு இணங்க தவறினால் 2024 டிசம்பர் 1 ஆம் தேதி முதல், வரையறுக்கப்படாத அல்லது பொருந்தாத டெலிமார்கெட்டர் செயின்களை கொண்ட மெசேஜ்கள் நிராகரிக்கப்படும் என்றும் டிராய் எச்சரிக்கை விடுத்துள்ளது.
02. வங்கிகளின் புதிய கிரெடிட் கார்டு விதிகள்: பல வங்கிகள் தங்கள் கிரெடிட் கார்டு பலன்கள் மற்றும் வெகுமதி முறைகளை டிசம்பர் 1 ஆம் தேதியில் இருந்து மாற்ற திட்டமிட்டுள்ளன. யெஸ் பேங்க்கின் கீழ் இனிமேல் விமானங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கான வெகுமதிகளை பெறுவதற்கு வரம்பு இருக்கும்
இதேபோல எச்டிஎப்சி பேங்க்கின் கீழ் ரெகலியா கார்டு வைத்து இருப்பவர்கள் ஒரு காலாண்டுக்கு கட்டாயமாக ரூ.1 லட்சம் செலவழிக்க வேண்டும். கடைசியாக எஸ்பிஐ மற்றும் ஆக்சிஸ் பேங்க் ஆகிய இரண்டும் தொழில்துறை போக்குகளுக்கு ஏற்ப ரிவார்டு பாயின்ட் அமைப்பு மற்றும் கிரெடிட் கார்டு கட்டணங்களை திருத்துகின்றன.
03. யுஐடிஏஐ-யின் புதிய ஆதார் அப்டேட் விதிகள்: இது டிசம்பர் 1 அல்ல, டிசம்பர் 14 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும். யுஐடிஏஐ (UIDAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை.. அதாவது பெயர், விலாசம் போன்ற விவரங்களை இலவசமாக அப்டேட் செய்வதற்கான கடைசி தேதியாக டிசம்பர் 14-ஐ அறிவித்துள்ளது.
டிசம்பர் 14 ஆம் தேகிக்குள் தங்கள் ஆதார் அட்டையில் உள்ள விவரங்களை மாற்ற அல்லது திருத்த விரும்பும் இந்திய குடிமக்கள் அதை முற்றிலும் இலவசமாக செய்துகொள்ளலாம். குறிப்பாக 10 ஆண்டுகளுக்கு முன்பு ஆதார் அட்டைகளை பெற்று, அதில் எந்தவிதமான மாற்றங்களையும் / அப்டேட்களையும் செய்யாதவர்கள் இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் இந்த இலவச சேவை மைஆதார் போர்ட்டலில் (myAadhaar Portal) மட்டுமே கிடைக்கும். ஆதார் மையங்களில் (Aadhaar Center) செய்தால் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications