புது சிம் கார்டு ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்.. வச்சி செய்ய போகும் டிராய்!
ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய 3 நிறுவனங்களுமே தத்தம் ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை உயர்த்தியுள்ளன. புதிய விலைகள் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதற்கிடையிக் டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது டெலிகம்யூனிகேஷன் மொபைல் நம்பர் போர்ட்டபிலிட்டிக்கான (Telecommunication Mobile Number Portability) புதிய விதிமுறைகள் 2024 ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
சிம் ஸ்வாப் (SIM swap) அதாவது சிம் கார்ட்டை மாற்றுவது அல்லது சிம் கார்ட்டை ரீப்ளேஸ்மென்ட் (SIM replacements) செய்வது தொடர்பாக கொண்டு வரப்பட்டுள்ள இந்த புதிய விதிமுறைகளின் கீழ்.. 2024 ஜூலை 1 ஆம் தேதி முதல் என்னென்ன மாற்றங்கள் கொண்டு வரப்படும்? ஏன் இந்த திடீர் நடவடிக்கை? இதோ விவரங்கள்:

ஜூலை 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய திருத்தங்களின் கீழ், டிராய் ஒரு முக்கியமான விதியை சேர்த்துள்ளது: அது சிம் ஸ்வாப் அல்லது சிம் காரட்டை மாற்றியமைத்த 7 நாட்களுக்குள், யுபிசி (UPC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் யுனிக் போர்டிங் கோட் (Unique Porting Code) வேண்டும் என்று விடுக்கப்படும் கோரிக்கைகள் நிராகரிக்கப்படும்.
இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையானது, அங்கீகரிக்கப்படாத நபர்கள் புதிய சிம் கார்டை மோசடியான வழிகளில் பெறுவதையும். அதை பெற்றவுடன் உடனடியாக போர்டிங் செயல்முறையை செய்வதையும் தடுக்க முயல்கிறது. ஒட்டுமொத்தமாக டிராயின் புதிய சிம் கார்டு விதிமுறைகள் ஆனது சிம் ஸ்வாப் அல்லது சி, ரீபிளேஸ்மென்ட் தொடர்பான மோசடிகளில் இருந்து நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னரே குறிப்பிட்டபடி, இந்திய டெலிகாம் துறை தொடர்பான மற்ற முக்கிய மாற்றங்களை பொறுத்தவரை, ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய 3 தனியார் டெலிகாம் ஆப்ரேட்டர்களுமே தத்தம் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களின் விலைகளை அதிகரித்துள்ளன. ஜியோ நிறுவனம் அனைத்து மொபைல் திட்டங்களுக்கான விலைகளையும் 12% முதல் 25% வரை அதிகரித்துள்ளது.
அதை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது ரீசார்ஜ் திட்டங்களின் விலைகளை 10% முதல் 21% வரை உயர்த்துவதாக அறிவித்தது. பின்னர் மீதமுள்ள வோடாபோன் ஐடியாவும் (Vodafone Idea) தனது ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெயிட் திட்டங்களின் விலைகளை உயர்த்தியுது. ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடாபோன் ஆகிய 3 நிறுவனங்களின் ரீசார்ஜ் விலை உயர்வும் ஜூலை 3 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.

ரிலையன்ஸ் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை, ரூ.179 ரீசார்ஜ் ரூ.199 ஆகவும், ரூ.455 ரீசார்ஜ் ரூ.509 ஆகவும், ரூ.1799 ரீசார்ஜ் ரூ.1999 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
பார்தி ஏர்டெல் ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ் ரூ.449 ஆகவும், ரூ.265 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.359 ரீசார்ஜ் ரூ.409 ஆகவும், ரூ.399 ரீசார்ஜ்ரூ.449 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

இதுதவிர்த்து ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.549 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2999 ரீசார்ஜ் ரூ.3599 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.29 ரீசார்ஜ் ரூ.33 ஆகவும், கடைசியாக ரூ.65 ரீசார்ஜ் ரூ.77 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
வோடாபோன் ஐடியா ப்ரீபெய்ட் திட்டங்கள் மீதான விலை உயர்வை பொறுத்தவரை, ரூ.179 ரீசார்ஜ் ரூ.199 ஆகவும், ரூ.459 ரீசார்ஜ் ரூ.599 ஆகவும், ரூ.1799 ரீசார்ஜ் ரூ.1999 ஆகவும், ரூ.269 ரீசார்ஜ் ரூ.299 ஆகவும், ரூ.299 ரீசார்ஜ் ரூ.349 ஆகவும், ரூ.319 ரீசார்ஜ் ரூ.379 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல ரூ.479 ரீசார்ஜ் ரூ.579 ஆகவும், ரூ.539 ரீசார்ஜ் ரூ.649 ஆகவும், ரூ.719 ரீசார்ஜ் ரூ.859 ஆகவும், ரூ.839 ரீசார்ஜ் ரூ.979 ஆகவும், ரூ.2899 ரீசார்ஜ் ரூ.3499 ஆகவும், ரூ.19 ரீசார்ஜ் ரூ.22 ஆகவும், ரூ.39 ரீசார்ஜ் ரூ.48 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








