புது OTP ரூல்ஸ்.. நவ.1 முதல் அமல்.. ஆன்லைன் பண பரிமாற்றம், பார்சல் டெலிவரியில் புது சிக்கல்.. TRAI போட்ட இடி!
டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது ஒடிபி (OTP) தொடர்பான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. மேலும் இந்த புதிய விதிகள் 2024 நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
டிராய் அறிவித்துள்ள புதிய வழிகாட்டுதல்களின்படி, முதன்மை நிறுவனங்களிலிருந்து (Principal Entitie - PEs) வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களை கண்காணிக்க முடியும் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் (Telecom Operators) உறுதி செய்ய வேண்டும். மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான இந்த புதிய விதிகள் வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகைகளுக்கும் பொருந்தும்.

அதாவது இனிமேல் பொருந்தாத அனுப்புநர் விவரங்கள் (Mismatched sender details) அல்லது தெளிவான அனுப்புநரின் அடையாளம் (Clear sender identity) இல்லாத எந்தவொரு மெசேஜ்களுமே பிளாக் செய்யப்படும்.
டிராய் அறிவித்துள்ள இந்த புதிய விதிகளானது வாடிக்கையாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்த கூடும் இந்திய டெலிகாம் நிறுவனங்கள் கவலை எழுப்பியுள்ளன.
ஏனென்றால் ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவது முதல் பார்சல்களை டெலிவரி செய்வது வரையிலாக.. பல்வேறு சேவைகளுடன் ஒடிபி மெசேஜ்கள் (OTP Messages) இணைக்கப்பட்டுள்ளது. அதில் மெசேஜ் டிரேசிபிலிட்டியை கொண்டுவருவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல வகையான சேவைகளின் போது சிரமத்தை சந்திக்க நேரிடும்.
அதுமட்டுமின்றி, எகனாமிக் டைம்ஸ் அறிக்கையின்படி, இந்திய டெலிகாம் நிறுவனங்கள் டிராய்-ன் புதிய வழிகாட்டுதல்களை செயல்படுத்துவதில் இன்னொரு சிக்கலையும் கொண்டுள்ளது. டெலிமார்க்கெட்டுகள் மற்றும் முதன்மை நிறுவனங்கள் ஆனது இந்த புதிய விதியை பின்பற்ற தேவையான தொழில்நுட்பத்தை கொண்டிருக்கவில்லை. எனவே இதற்கான காலக்கெடுவை குறைந்தபட்சம் 2 மாதங்களுக்கு நீட்டிக்குமாறு தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராய்-யிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
நவம்பர் 1 என்கிற காலக்கெடுவிற்குள், டெலிகாம் ஆபரேட்டர்களால் தங்கள் அமைப்புகளை தயார் செய்ய முடியும். ஆனால் டெலிமார்க்கெட்டர்கள் மற்றும் பிஇ-களின் தரப்பில் தாமதம் ஏற்படலாம். எனவே, பிஇ-கள் மற்றும் டெலிமார்க்கெட்டர்களுக்கு ஏதேனும் இடையூறு ஏற்படுவதை குறைக்க, மெசேஜிங் டிராஃபிக்கை சரியான முறையில் ஸ்க்ரப்பிங் செய்வதை உறுதிசெய்ய கூடுதல் நேரம் தேவைப்படுகிறது.
சாத்தியமான சிக்கல்களைத் தணிக்க, டெலிகாம் ஆபரேட்டர்கள் டெலிமார்க்கெட்டர்கள் மற்றும் பிஇ-களுக்கு தினசரி அறிக்கைகளை அனுப்ப உறுதிபூண்டுள்ளனர். இப்படியாக 2024 டிசம்பர் 1 ஆம் தேதிக்குள் இந்த விதி முழுமையாக அமல்படுத்தப்படும் என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
டிராய்-ன் இந்த பிஸ்னஸ் மெசேஜ் ஆணையை கடைப்பிடிக்க, தொலைத்தொடர்புத் துறை ஒரு மாத கால நீட்டிப்பை கோருவது இது இரண்டாவது முறையாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. தேவையான அமைப்புகளை அமைக்க கூடுதல் கால அவகாசம் கோரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கோரிக்கைக்கு பதிலளிக்கும் விதமாக, யூஆர்எல்-கள் (URL), ஒடிபி லிங்குகள் (OTT links) மற்றும் பிற தொடர்புடைய தகவல்கள் உள்ளிட்ட மெசேஜ்களுக்கான அனுமதிப்பட்டியலுக்கான காலக்கெடுவை அக்டோபர் 1 வரை நீட்டித்தது. தற்போது மீண்டும் காலக்கெடுவை நீடிக்குமாறு கேட்டுகொள்ளப்பட்டுள்ளது
ஆன்லைன் பரிவர்த்தனைகளை பாதுகாப்பதில் ஒடிபி-க்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, அங்கீகரிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இந்த செயல்முறைகளை முடிக்க முடியும் என்பதை ஒடிபி-க்கள் உறுதிப்படுத்துகிறது. இருப்பினும், பண ஆன்லைன் மோசடியை தடுக்கும் நோக்கத்தின் கீழ் ஓடிபி இல்லாமல், மாற்று பாதுகாப்பு முறையை அறிமுகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டே வருகின்றன. அதனொரு பகுதியாகவே - டிராய் கொண்டுவதுள்ள புதிய மெசேஜ் டிரேசிபிலிட்டி விதிகளை நாம் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








