Home
News

புது ரூல்ஸ்.. 3G, 4G, 5G யூசர்களுக்கு கட்டாயம்.. Jio, Airtel, Vi, BSNL-னு எல்லா SIM-களுக்கும் பொருந்தும்!

டிராய் (TRAI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது இந்தியாவில் உள்ள அனைத்து டெலிகாம் ஆப்ரேட்டர்களுக்குமான.. அதாவது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vi) மற்றும் பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனங்களுக்கான.. ஒரு கட்டாய விதியை அறிவித்துள்ளது.

அதென்ன விதி? இந்தியாவில் உள்ள மொபைல் கேரியர்கள் தங்கள் இணையதளங்களில் புவிசார் கவரேஜ் வரைபடங்களை (Geospatial coverage maps) காட்டுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த கவரேஜ் மேப்ஸ் ஆனது ஒவ்வொரு டெலிகாம் நிறுவனத்தின் வயர்லெஸ் வாய்ஸ் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளை வழங்கும் புவியியல் பகுதிகளை காட்ட வேண்டும்.

புது ரூல்ஸ்.. Jio, Airtel, Vi, BSNL-னு எல்லா SIM-களுக்கும்!

அதாவது எந்தெந்த பகுதிகளில் 2ஜி கிடைக்கிறது, எந்தெந்த பகுதிகளில் 3ஜி கிடைக்கிறது, எந்தெந்த பகுதிகளில் 4ஜி கிடைக்கிறது மற்றும் எந்தெந்த பகுதிகளில் 5ஜி கிடைக்கிறது என்கிற விவரங்களை கவரேஜ் மேப்ஸ் வழியாக (ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல்) வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

ஒருவேளை, ஏதேனும் ஒரு பகுதியில், 2ஜி, 3ஜி, 4ஜி மற்றும் 5ஜி போன்ற கவரேஜ் தொழில்நுட்பங்கள் இருந்தால், ஒருங்கிணைந்த கவரேஜ் வரைபடத்தில், அது 5ஜி உள்ள பகுதி என்று காட்ட வேண்டும். மேலும் கவரேஜ் மேப்ஸில் அந்தந்த தொழில்நுட்பத்தின் செல் கவரேஜ் (2ஜி/ 3ஜி/ 4ஜி/ 5ஜி) ஆனது பரிந்துரைக்கப்பட்ட வண்ணங்களில் காட்சிப்படுத்தப்பட்ட வேண்டும் என்றும் டிராய் உத்தரவிட்டுள்ளது.

மேலும் பயனர்களுக்குக் கிடைக்க வேண்டிய குறைந்தபட்ச அம்சங்களில் மேப் பேஸ் லேயர் (Map base layer), டெக்னாலஜி டாக்கில் (Technology Toggle), சேர்ச் (Search), நேவிகேஷன்கள் (Navigations) போன்ற அம்சங்கள் இருக்க வேண்டும். கடந்த அக்டோபர் 1, 2024 அன்று செயல்படுத்தப்பட்ட தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களுக்கான டிராய்-ன் திருத்தப்பட்ட சேவைத் தர விதிமுறைகளின் ஒரு பகுதியாக இந்த உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல 2025 முதல் நடைமுறைக்கு வரும் இன்னொரு முக்கிய மாற்றமும், டிராய் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் அனைத்து மாநிலங்களும் ரோ (RoW) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ரைட் ஆஃப் வே (Right of Way) தொடர்பான புதிய விதிகளை நடைமுறைக்கு கொண்டுவர வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

அறியாதோர்க்ளுக்கு ரோ விதி (RoW rule ) என்பது பொது அல்லது தனியார் சொத்தில் மொபைல் டவர்கள் (Mobile Towers) மற்றும் பிற தொலைத்தொடர்பு உள்கட்டமைப்புகளை நிறுவுவதற்கான தரங்களை கட்டாயப்படுத்தும் வழிமுறைகளின் தொகுப்பாகும். பொது பாதுகாப்பு மற்றும் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிப்பதால், சொத்து உரிமையாளர்கள் மற்றும் தொலைத்தொடர்பு வழங்குநர்கள் இருவருமே ரோ விதியை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

டிராய்-ன் புதிய ரோ விதிகளானது மேற்கூறப்பட்ட இன்ஸ்டாலஷன்களுக்கான அனுமதிகளை பெறுவதற்கான செயல்முறையை எளிதாக்குகிறது. மேலும் இந்த புதிய ரோ விதிகள் ஆனது ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், விஐ மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்த புதிய விதிகள் அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் வளர்ச்சியையும் சாதகமாக பாதிக்கும் (Positively affect) என்றும் எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் புதிய ரோ விதிகள் ஆனது நாட்டில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பை (Telecom infrastructure) மேம்படுத்தும் என்றும், இந்தியா முழுவதும் 5ஜி தொழில்நுட்பத்தை (5G Technology) வேகமாக வெளியிடுவதற்கும் உதவும் என்றும் தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications - DoT) செயலாளர் ஆன நீரஜ் மிட்டல் கூறியுள்ளார்.

இதேபோல ஒடிபி (OTP) உட்பட, கமர்சியல் மெசேஜ்களை 'ட்ரேஸ்' செய்யும் மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) நடைமுறையும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. இதுவும் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடாபோன் ஐடியா மற்றும் பிஎஸ்என்எல் ஆகிய அனைத்து டெலிகாம் நிறுவனங்களுக்கும் பொருந்தும்!

Best Mobiles in India

English summary
New Rules From TRAI Mandatory Change in Jio airtel Vodafone BSNL to Show 3G 4G 5G Coverage Maps
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X