Home
News

புது ரூல்ஸ்.. நவ.1 முதல் அமலானது! Call, SMS-ல் முக்கிய மாற்றம்.. Airtel, Jio-னு எல்லா கஸ்டமர்களும் பொருந்தும்!

டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது போன் காலிங் (Phone Calling) தொடர்பான புதிய விதி ஒன்றை அமலுக்கு கொண்டு வந்துள்ளது. 2024 நவம்பர் 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய விதியானது ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடாபோன் ஐடியா (Vodafone Idea) என அனைத்து டெலிகாம் நிறுவனங்களின் கஸ்டர்மார்களுக்கும் பொருந்தும்.

அது என்ன விதி? ஜியோ, ஏர்டெல், விஐ வாடிக்கையாளர்களுக்கு அடிக்கடி வரும் போலி அழைப்புகள் மற்றும் போலியான மெசேஜ்களை (Fake Calls and Messages) நிறுத்துவதற்கான முயற்சிகளை இன்று முதல் (நவம்பர் 1 ஆம் தேதி முதல்) தொடங்க வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது. இதனை கண்டிப்பாக அமல்படுத்துமாறும், அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களையும் டிராய் கேட்டு கொண்டுள்ளது.

புது ரூல்ஸ்.. நவ.1 முதல் அமலானது.. Call, SMS-ல் முக்கிய மாற்றம்!

நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகும் ஸ்பேம் அழைப்புகள் (Spam Calls) ஆனது பயனர்களை எரிச்சலடைய செய்வது மட்டுமல்லாமல், வங்கி மோசடிகள் மற்றும் பிற தவறான செயல்களிலும் சிக்க வைப்பதை கண்ட பிறகு டிராய் இந்த அறிவிப்பை வெளியிட்டது. இந்த முயற்சியானது கோரப்படாத தகவல்தொடர்புகளால் ஏற்படும் பரவலான தொல்லைகள் மற்றும் சாத்தியமான தீங்குகளை நிவர்த்தி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற போலியான அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ்கள் ஆனது வாடிக்கையாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்குகிறது மற்றும் ஆபத்தில் ஆழ்த்துகிறது. இதன்விளைவாக டிராய், அனைத்து தொலைத்தொடர்பு ஆபரேட்டர்களையும் போலியான போன் கால் மாற்று எஸ்எம்எஸ்-க்கு எதிரான நடவடிக்கைகளை செயல்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இந்த புதிய விதிகள் ஆனது தகவல் திருட்டு, ஹேக்கிங், பண மோசடி போன்ற செயல்களை தடுக்கும் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய போன் காலிங் மற்றும் எஸ்எம்எஸ் விதிகளுடன் சேர்த்து புதிய யுபிஐ விதிகளும் இன்று முதல் அமலுக்கு வந்தன. ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது யுபிஐ டிரான்ஸாக்ஷன் லைட் (UPI Lite Transaction Limit) தொடர்பான முக்கிய மாற்றங்களை அமலுக்கு கொண்டு வந்தது.

முக்கிய மாற்றமாக யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு (UPI Lite Transaction Limit) அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரையிலாக யுபிஐ லைட் சேவையின் கீழ் ஒவ்வொரு பயனரும் ரூ.500 வரை பரிவர்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கி ஆனது யுபிஐ லைட்டின் அதிகபட்ச பரிவர்த்தனை வரம்பை ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்படும்.

அடுத்ததாக யுபிஐ லைட் வாலட் வரம்மானது (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கடைசியாக யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால், புதிய ஆட்டோ டாப்-அப் அம்சம் (Auto top-up feature) வழியாக யுபிஐ லைட்-ல் மீண்டும் பணம் சேர்க்கப்படும். அதாவது இனிமேல் மேனுவல் டாப்-அப் (Manual top-up) செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று அர்த்தம்!

நினைவூட்டும் வண்ணம் யுபிஐ லைட் என்பது யுபிஐ பின்-ஐ பயன்படுத்தாமலேயே சிறிய அளவிலான பரிவர்த்தனைகளை செய்ய அனுமதிக்கும் ஒரு சேவையாகும். குறைந்த தொகையை மட்டுமே சேர்க்க முடியும் என்பதால் யுபிஐ லைட் வாலட்டை அடிக்கடி நிரப்ப வேண்டி இருக்கும். இதற்காக ஒவ்வொரு முறையும் பயனர்கள் தங்கள் பேங்க் அக்கவுண்ட்டிலிருந்து கைமுறையாக வாலட் பேலன்ஸ்-ஐ நிரப்ப வேண்டும். புதிய ஆட்டோ-டாப்-அப் அம்சத்தின் மூலம் இந்த செயல்முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Rules From TRAI Jio Airtel Vodafone to Stop Fake Calls SMS Effects From 2024 November 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X