Home
News

புது TRAI ரூல்ஸ்.. SIM கார்டுக்கு அமல்.. இனி 10 நம்பருக்கு படாதபாடு.. வாய்ஸ் கால்கள்.. 5 நாட்களில் முடியனும்!

டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது டெலிகாம் விதிகளில் பல்வேறு மாற்றங்களை செய்துள்ளது. இந்த விதிகள் ஒட்டுமொத்த டெலிகாம் கஸ்டமர்களுக்கும் பொருந்தக்கூடியது. வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ்கள் தொடங்கி 10 இலக்க மொபைல் நம்பர் வரையில் விதிகள் வந்துள்ளன. இனிமேல் டெலிகாம் விதிகள் அடியோடு மாற இருப்பதை இது உறுதிப்படுத்தி இருக்கிறது. அப்படி என்ன விதிகள் வந்துள்ளன? இதனால் என்ன மாறப் போகிறது? முழு விவரங்கள் இதோ.

ஸ்பேம் கால்கள், எஸ்எம்எஸ்கள் விதிகள் (Spam Calls SMS Rules): இனிமேல் எந்தவொரு முன் விருப்ப பதிவு இல்லாமலேயே ஸ்பேம் கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களுக்கு எதிராக கஸ்டமர்கள் புகார் செய்ய முடியும். இந்த புகாரை 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும் என்பது விதியாக இருந்தது. ஆனால், இப்போது 7 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆகவே, 7 நாட்களுக்குள் புகார் அளிக்கலாம்.

புது TRAI ரூல்ஸ்.. SIM கார்டுக்கு அமல்.. இனி 10 நம்பருக்கு படாதபாடு!

இதில் புகார் எண், அனுப்புநர் எண், தேதி போன்ற விவரங்கள் இருக்க வேண்டும். இந்த புகார்களை அளிக்க ஏதுவாக சேவை வழங்குநர்கள் அவர்களது மொபைல் ஆப் அல்லது வெப்சைட் மூலம் வழிவகை செய்து கொடுக்க வேண்டும். அதேபோல ஸ்பேம் கால்கள் பதிவு மற்றும் எஸ்எம்எஸ்களை கஸ்டமர்களின் அனுமதியுடன் ஸ்கிரீன்ஷாட் எடுக்கும்படி மொபைல் ஆப்கள் இருக்க வேண்டும்.

இந்த புகார்களை விசாரணை செய்ய வேண்டிய கால அவகாசம் 30 நாட்களாக இருந்தது. இப்போது, 5 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஜியோ, ஏர்டெல், வோடபோன் போன்ற டெலிகாம் ஆப்ரேட்டர்கள் ரியல் டைம் ஸ்பேம் டிடெக்சன் (Real-time Spam Detection) மூலம் ஸ்பேமர்களை கண்டறிய வேண்டும். ஹனிபாட்கள் மூலம் போலி எண்களை பதிவு செய்து கொள்ளலாம்.

டெலிகாம் கஸ்டமர்களுக்கு கால்கள் மற்றும் எஸ்எம்எஸ்களை அனுப்ப விண்ணப்பிக்கும்போது, அந்த அனுப்புநரின் பிசிகல் வெரிபிகேஷன், பயோமெட்ரிக் அங்கீகாரம், டெலிமார்கெட்டர் பதிவு, அனுப்புநரின் மொபைல் நம்பர் லிங்கிங் உள்ளிட்டவற்றை டெலிகாம் ஆப்ரேட்டர்கள் உறுதி செய்ய வேண்டும். மீறுபவர்களை கண்டறிந்து எடுக்கப்பட்ட புகார்களை பதிவு செய்திருக்க வேண்டும்.

ஸ்பேமர்களுக்கு எதிரான விதிகள் (Rules Against Spammers): ஸ்பேம் கால்கள் அல்லது எஸ்எம்எஸ்கள் அனுப்பும் அனுப்புநர்கள் கண்டறியப்பட்டால், முதல் முறை அவர்களது அனுப்புநர் சேவை 15 நாட்களுக்கு தடை செய்யப்படும். இரண்டாவது முறையும் நீடித்தால், அனுப்புநர் ஒரு வருடத்திற்கு அனைத்து சேவைகளில் இருந்தும் துண்டிக்கப்படுவர், மேலும் பிளாக் லிஸ்டில் சேர்க்கப்படுவர்.

10 இலக்க எண்கள் மூலம் டெலிகமார்கெட்டிங் செய்ய தடை விதிக்கப்படுகிறது. ஆகவே, ப்ரோமோஷன் கால்களுக்கு 140 சீரிஸ் நம்பர்களும், பரிவர்த்தனை மற்றும் சேவை கால்களுக்கு 1600 சீரிஸ் நம்பர்களும் பயன்படுத்தப்பட இருக்கின்றன. மேற்கண்ட விதிகளை அடக்கிய யுசிசி விதிமுறைகளை (UCC Regulations) மீறுவோருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரையில் அபராதம் இருக்கிறது.

ஆகவே, இந்த விதிகளின்படி சேவை வழங்குநர்கள் முதல் முறை இந்த விதிகளை மீறினால், அவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். இரண்டாவது முறை மீறினால் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கப்படும். பல முறை மீறினால் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்பட இருக்கிறது. இப்படி பல்வேறு விதிகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கொண்டு வந்துள்ளது.

இந்த விதிகளானது, தொலைத்தொடர்பு வணிக தொடர்பு வாடிக்கையாளர் விருப்ப விதிமுறைகளில் (டிசிசிசிபிஆர்) இருந்து திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆகவே, ஏற்கனவே இருந்த விதிகளில் சில புது விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பழைய விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது ஒட்டுமொத்த டெலிகாம ஆப்ரேட்டர்கள் மற்றும் கஸ்டமர்களுக்கு பொருந்தக்கூடிய விதிகளாக இருக்கிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From TRAI For Spam Calls SMS Check Sender Verification Real Time Spam Detection Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X