புது UPI ரூல்ஸ்.. திடீரென அமல்.. இனி ரூ.5,000 இல்ல ரூ.10,000.. ஒரே நேரத்தில் வந்த 5 முக்கிய மாற்றங்கள்!
ஆர்பிஐ (RBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ஆனது யுபிஐ (UPI) சேவையில் மேலும் சில முக்கிய மாற்றங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது. நினைவூட்டும் வண்ணம் இம்மாத தொடக்கத்தில் தான் யுபிஐ லைட் (UPI Lite) சேவை தொடர்பான 3 முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்தன.
அதனை தெடர்ந்து தற்போது யுபிஐ 123பே (UPI 123Pay) சேவையில் 5 முக்கிய மாற்றங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன. முதல் மற்றும் முக்கிய மாற்றம் யுபிஐ 123பே சேவைக்கான பரிவர்த்தனை வரம்பானது இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் இந்தியாவில் உள்ள 400 மில்லியன் ஃபீச்சர் போன் பயனர்கள் (Feature Phone Users) தத்தம் போன்களில் உள்ள யுபிஐ 123பே ஆப் வழியாக ரூ.10,000 வரை பணப்பரிமாற்றம் செய்ய முடியும். இதுதவிர்த்து யுபிஐ 123பே சேவையில் மேலும் 4 முக்கிய மாற்றங்களும் செய்யப்பட்டு உள்ளன.
யுபிஐ 123பே சேவையில் தற்போது ஆதார் அட்டை அடிப்படையிலான ஒடிபி அங்கீகாரம் (Aadhaar-based OTP authentication) சேர்க்கப்பட்டுள்ளது. இது யுபிஐ 123பே சேவைக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்கும். அடுத்ததாக யுபிஐ 123பே சேவையின் டேக்கிங் தரப்படுத்ப்பட்டுள்ளது. இதன்கீழ் ட்ராக்கிங் மற்றும் ரிப்போர்ட்டிங்காக (tracking and reporting) புதிய (86) பர்போஸ் கோட் (Purpose code) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் யுபிஐ 123பே சேவையின் இனிஷியேஷன் மோட்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. தற்போது ஐவிஆர் (IVR), மிஸ்டு கால்கள் (Missed calls), ஃபீச்சர் போன் ஆப்கள் (Feature phone apps) மற்றும் சவுண்ட்-பேஸ்டு டெக்னாலஜி (Sound-based technology) ஆகியவைகளின் கீழ் பணபரிமாற்ற செயல்முறையை தொடங்கலாம். கடைசியாக பணம் செலுத்துவதை இன்னும் எளிதாக்கும் வண்ணம் யுபிஐ நியூமெரிக் ஐடி மேப்பர் (UPI numeric ID mapper) ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது
முன்னரே குறிப்பிட்டபடி, மேற்கண்ட அனைத்து மாற்றங்களும் யுபிஐ 123பே சேவையில் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. அறியாதோர்களுக்கு யுபிஐ 123பே என்பது ஃபீச்சர் மொபை போன் பயனர்களுக்கு இணைய இணைப்பு இல்லாமல் யுபிஐ பரிவர்த்தனைகளை செய்ய உதவும் ஒரு சேவையாகும். அதாவது சிறிய அளவிலான தொகைகளை பின் நம்பர் இல்லாமல் அனுப்ப உதவும் யுபிஐ லைட் சேவையையோ போல இது ஃபீச்சர் போன் பயனர்களுக்கான சேவையாகும்
இம்மாத தொடக்கத்தில் (நவம்பர் 1 ஆம் தேதி) யுபிஐ லைட் சேவையில் அமலுக்கு வந்த முக்கிய மாற்றங்களை பொறுத்தவரை.. யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு (UPI Lite Transaction Limit) ரூ.500 இல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கூடவே யுபிஐ லைட் வாலட் வரம்பும் (UPI Lite Wallet Limit) ரூ.2,000 இல் இருந்து ரூ.5,000 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது.
கடைசியாக யுபிஐ லைட் சேவையில் ஆட்டோ டாப்-அப் அம்சம் (Auto top-up feature) என்கிற புதிய அம்சமும் அறிமுகமானது இது யுபிஐ லைட் பேலன்ஸ் (UPI Lite Balance) ஆனது ஒரு குறிப்பிட்ட வரம்பிற்கு கீழே சென்றால், ஆட்டோமேட்டிக் ஆக அதை டாப்-அப் செய்யும். அதாவது ஒவ்வொரு முறையும் கைமுறையாக யுபிஐ லைட் வாலட்டை நிரப்ப வேண்டிய அவசியம் இனி இல்லை என்று அர்த்தம்.
இதெல்லாம் ஒருபக்கம் இருக்க சிறிய அளவிலான தொகையை பணப்பரிமாற்றம் செய்யும் செயல்முறையான லோ-டிக்கெட் பேமண்ட்ஸ் (Low-ticket payments) பயனர்களை யுபிஐ லைட்டிற்கு மாற்றுவதற்கான வேலைகளையும் என்பிசிஐ செய்து வருகிறது. இப்படி செய்வதன் மூலம் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் சுற்றுச்சூழல் அமைப்பானது (Unified Payments Interface ecosystem) இன்னும் திறம்பட செயல்படும் என்றும், யுபிஐ சேவையில் ஏற்படும் தொழில் நுட்ப கோளாறுகள் மற்றும் பரிவர்த்தனை தோல்விகள் குறையும் என்றும் என்பிசிஐ நம்புகிறது.


Click it and Unblock the Notifications