Home
News

இனி ரூ.18 கட்டணம்.. அக்.1 முதல் அமல்.. பென்சன், யுபிஐ, ரயில் டிக்கெட் என ஒரே நேரத்தில் 3 முக்கிய மாற்றங்கள்!

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) ஆகிய பேமண்ட் ஆப்களை உள்ளடக்கிய யுபிஐ (UPI) சேவை, ஐஆர்சிடிசி (IRCTC) என்கிற இந்திய ரயில்வே ஆன்லைன் டிக்கெட் புக்கிங் மற்றும் பென்சன் (ஓய்வூதியம்) - ஆகிய 3 சேவைகளிலும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் புதிய விதிகள் (New Rules) மற்றும் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.

நவராத்திரி, ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி, தீபாவளி ஆகிய பல விடுமுறை / பண்டிகை / ஸ்பெஷல் நாட்களை உள்ளடக்கிய 2025 அக்டோபர் மாதம் தொடங்கும் முன் நீங்கள் 3 முக்கியமான மாற்றங்களை பற்றி நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டும்; ஏனென்றால் இந்த 3 மாற்றங்களுமே சாமானிய மக்களின் பணத்தை பாதிக்க வாய்ப்புள்ளது.

அக்.1 முதல்.. பென்சன், யுபிஐ, ரயில் டிக்கெட்.. 3 முக்கிய மாற்றங்கள்!

1. ஆன்லைன் வழியாக ரயில் டிக்கெட்டுகள் கிடைக்கும் தன்மையில் மாற்றம்: ரயில் டிக்கெட் முன்பதிவில் நடக்கும் மோசடிகளை தடுக்க இந்திய ரயில்வே ஆனது அதன் ஆன்லைன் டிக்கெட் முறையை சீர்திருத்த போகிறது. இதன் கீழ் ஆன்லைன் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய விதி அமலுக்கு வருகிறது

அக்டோபர் 1 ஆம் தேதி முதல், ஆதார் சரிபார்ப்பு உள்ளவர்கள் மட்டுமே ரயில் டிக்கெட்களுக்கான முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்குள் ஆன்லைன் வழியாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முடியும். இந்த விதி ஐஆர்சிடிசி வலைத்தளம் மற்றும் ஆப் ஆகிய இரண்டிற்கும் பொருந்தும். தற்போது, ​​இந்த விதி தட்கல் முன்பதிவுகளுக்கு பொருந்தும். இருப்பினும், கணினிமயமாக்கப்பட்ட பிஆர்எஸ் கவுண்டர்களில் இருந்து டிக்கெட்டுகளை வாங்குபவர்களுக்கான நேரமும், செயல்முறையும் பழையபடியே இருக்கும்.

2. கூகுள் பே, போன்பே, பேடிஎம் ஆகியவைகளை உள்ளடக்கிய யுபிஐ சேவையிலும் மாற்றம்: யுபிஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகத்தில் (Unified Payments Interface) அக்டோபர் 1 ஆம் தேதி முதல் சில முக்கிய மாற்றங்கள் அமல்படுத்தப்பட உள்ளன

என்பிசிஐ (NPCI) என்கிற இந்திய தேசிய கட்டணக் கழகத்தால் செயல்படுத்தப்படும் இந்த புதிய மாற்றங்களால் கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் பயனர்கள் பாதிக்கப்படுவார்கள். யுபிஐ சேவையில் பொதுவாக பயன்படுத்தப்படும் அம்சங்களில் ஒன்றான பியர்-டு-பியர் (பி2பி) பரிவர்த்தனைகள் ஆனது அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அணுக கிடைக்காது

பயனர் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், நிதி மோசடியைத் தடுப்பதற்கும் இந்த அம்சம் அக்டோபர் 1, 2025 முதல் யுபிஐ ஆப்களில் இருந்து அகற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் தகவல் ஜூலை 29 தேதியிட்ட சுற்றறிக்கையின் வழியாக பகிரப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

3. பென்ஷன் / ஓய்வூதிய கட்டணங்களில் மாற்றம்: ஓய்வூதிய தாரர்களுக்கான இந்த மாற்றம் - பெரும்பாலும் என்பிஎஸ் (NPS), யுபிஎஸ் (UPS), அடல் ஓய்வூதிய யோஜனா (Atal Pension Yojana) மற்றும் என்பிஎஸ் லைட்டில் (NPS Lite) சேர்ந்தவர்களுக்கான மாற்றம் ஆகும்.

பிஎப்ஆர்டிஏ (PFRDA) என்கிற ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority) ஆனது மத்திய பதிவு பராமரிப்பு முகமைகள் (Central Recordkeeping Agencies - CRA) வசூலிக்கும் கட்டணங்களை திருத்தி உள்ளது.

புதிய பிஆர்ஏஎன்-ஐ (PRAN) திறக்கும்போது அரசு ஊழியர்களிடம் இப்போது இ -பிஆர்ஏஎன் கிட்டுக்கு ரூ.18 மற்றும் பிஸிக்கல் பிஆர்ஏஎன் கார்டுக்கு ரூ.40 வசூலிக்கப்படும். வருடாந்திர பராமரிப்பு கட்டணம் ஒரு கணக்கிற்கு ரூ.100 ஆக இருக்கும். அடல் ஓய்வூதிய யோஜனா மற்றும் என்பிஎஸ் லைட் சந்தாதாரர்களுக்கான கட்டண அமைப்பும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது, பிஆர்ஏஎன் திறப்பு மற்றும் வருடாந்திர பராமரிப்பு கட்டணங்கள் இப்போது ரூ.15 ஆகவும், பரிவர்த்தனை கட்டணங்கள் ரூ.0 ஆகவும் இருக்கும்.

Best Mobiles in India

English summary
New Rules From October 1 P2P UPI Transaction Aadhaar Proof Online Train Ticket New Pension Charges
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X