அக்டோபர் 1 முதல் புதிய விதிகள்.. LPG கேஸ் சிலிண்டர் முதல் யுபிஐ வரை.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
அக்டோபர் மாதம் தொடங்கும் நிலையில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் நிதி நடவடிக்கைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சில புதிய விதிமுறைகளும் (New Rules) மாற்றங்களும் அமலுக்கு வர உள்ளன. வீட்டு உபயோக LPG சிலிண்டர் மானியம் முதல் UPI பரிவர்த்தனைகள் வரையிலான பல்வேறு அம்சங்களில் மாற்றங்கள் ஏற்பட இருக்கின்றன.
இந்த புதிய விதிமுறைகள் என்னென்ன, அவை பொதுமக்களின் செலவுகள் மற்றும் நிதிநிலையில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை இந்த பதிவில் சற்று விரிவாகப் பார்க்கலாம்.

கேஸ் சிலிண்டர் E-KYC அப்டேட்: அக்டோபர் 1 முதல், வீட்டு உபயோக LPG சிலிண்டர்களுக்கான மானியத்தைப் பெற பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரம் (BAA) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெட்ரோலிய அமைச்சகத்தின் தரவுகளின்படி, 27.43 கோடி செயலில் உள்ள வீட்டு LPG வாடிக்கையாளர்களில் சுமார் 89.9% பேர் ஏற்கனவே இந்த KYC நடைமுறையை முடித்துள்ளனர். இதன் மூலம் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் புதிய விதிமுறைக்கு இணங்கியுள்ளனர்.
ஏற்கனவே KYC செயல்முறையை நிறைவு செய்த LPG வாடிக்கையாளர்கள் மீண்டும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டியதில்லை. ஆனால், இதுவரை KYC செய்யாதவர்கள் அக்டோபர் 1-ஆம் தேதிக்கு முன்பாக பயோமெட்ரிக் ஆதார் அங்கீகாரத்தை முடித்திருக்க வேண்டும். இல்லையெனில், விதிமுறைகளின்படி அவர்களுக்கு கிடைக்க வேண்டிய LPG மானியப் பலன் கிடைக்காது
யுபிஐ கட்டணம்: அக்டோபர் 15 முதல் UPI பரிவர்த்தனைகளில் புதிய மாற்றம் அமலுக்கு வர உள்ளது. ரூ.2,000-க்கு மேல் வாடிக்கையாளர்கள் வணிகர்களுக்கு செய்யும் UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு 0.4% MDR கட்டணம் விதிக்கப்படும். இந்தக் கட்டணம் வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
ரூ.75,000 அல்லது அதற்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு இந்தக் கட்டணம் அதிகபட்சமாக ரூ.300 வரை மட்டுமே இருக்கும். முக்கியமாக, சாதாரண வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டணத்தை செலுத்த வேண்டியதில்லை. UPI மூலம் பணம் பெறும் வணிகர்களே இந்தக் கட்டணத்தை ஏற்க வேண்டும்.
அக்டோபர் 1 முதல் மாறும் FD விதிகள்: அக்டோபர் 1 முதல் நிலையான வைப்புத்தொகை (FD) தொடர்பாக புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. இதன்படி, வங்கிகள் தங்களது அனைத்து கிளைகளிலும் ஒரே மாதிரியான FD வட்டி விகிதங்களை வழங்க வேண்டும். ஒரே தொகையை FD-யில் முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, அவர்கள் எந்த கிளையில் முதலீடு செய்தாலும் வட்டி விகிதத்தில் வேறுபாடு இருக்கக்கூடாது. இதன் மூலம் வட்டி வழங்குவதில் வாடிக்கையாளர்கள் மற்றும் கிளைகளுக்கு இடையே பாகுபாடு காட்டுவதைத் தவிர்க்க RBI நடவடிக்கை எடுத்துள்ளது.

டிராய் புதிய விதிகள்: TRAI-ன் புதிய விதிகளின்படி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இனி 30 நாட்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை கட்டாயம் வழங்க வேண்டும். தற்போது பல நிறுவனங்கள் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்ட திட்டங்களை வழங்கி வருவதால், வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு 13 முறை ரீசார்ஜ் செய்ய வேண்டிய நிலை உள்ளது. 30 நாள் திட்டங்கள் கிடைப்பதன் மூலம், ஆண்டுக்கு 12 முறை மட்டுமே ரீசார்ஜ் செய்யும் வாய்ப்பு ஏற்படும். மேலும், ஒவ்வொரு மாதமும் ஒரே தேதியில் ரீசார்ஜ் செய்து கொள்ளவும் வாடிக்கையாளர்களுக்கு வசதியாக இருக்கும்.
அதேபோல், டேட்டா வசதி தேவையில்லாத வாடிக்கையாளர்களுக்காக குறைந்த கட்டணத்தில் குரல் அழைப்பு மற்றும் SMS மட்டும் கொண்ட சிறப்பு திட்டங்களை வழங்கவும் TRAI அறிவுறுத்தியுள்ளது. குறிப்பாக, முதியவர்கள், குறைந்த வருமானம் கொண்டவர்கள் மற்றும் சாதாரண மொபைல் போன் பயன்படுத்துபவர்களுக்கு இந்த திட்டங்கள் உதவியாக இருக்கும். இதன் மூலம் தங்களது தேவைக்கு ஏற்ப குறைந்த செலவில் மொபைல் ரீசார்ஜ் திட்டத்தை தேர்வு செய்யும் வாய்ப்பு வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications
