Home
News

புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. இனி 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. பேங்க் அக்கவுண்ட், ATM கட்டணம்.. என்ன மாறுது?

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் மற்றும் ஆதார் கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. இதுபோக எல்ஜிபி இணைப்பை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது.

எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (SBI) ஆனது ஏடிஎம் கட்டணங்களில் புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த விதிகளின்படி ஏடிஎம் வழியாக மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை எடுத்து கொள்ளலாம். இதற்கு மேல் ஒவ்வொரு முறைக்கும் ரூ. 15 மற்றும் ஜிஎஸ்டி (GST) கட்டணமாக வசூலிக்கப்படும்.

புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. இனி 100 ரூபாயோ.. 1000 ரூபாயோ!

இது ஒட்டுமொத்த எஸ்பிஐ அக்கவுண்ட் கஸ்டமர்களுக்கும் பொருந்தாது. பிஎஸ்பிடி (BSBD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் (Basic Savings Bank Deposit) அக்கவுண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு (Digital Transactions) எந்தவித கட்டுப்பாடுகளும் எந்தவித கட்டணமும் கிடையாது.

இந்த விதிகள் வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் (New Rules From October 1) அமலுக்கு வருகின்றன. அதேபோல ஆதார் வைத்திருக்கும் 5 முதல் 15 வயது வரையில் இருக்கும் குழந்தைகளுக்கும் யுஐடிஏஐ (UIDAI) என்று அழைக்கப்படும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது.

அதாவது, ஆதார் வைத்திருக்கும் குழந்தைகளுக்கு கட்டாய பயோமெட்ரிக் புதுப்பிப்பு (Mandatory Biometric Update) செய்ய கொடுக்கப்பட்ட காலஅவகாசம் வருகிற செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் முடிகிறது. இந்த தேதிக்குள் 5 முதல் 15 வயது வரையில் இருக்கும் குழந்தைகள் பயோமெட்ரிக் புதுப்பிப்பை கட்டாயம் செய்ய வேண்டும்.

இதில் கைரேகை (Fingerprint), கருவிழி (Iris), போட்டோ (Photo) உள்ளிட்ட புதுப்பிப்புகள் செய்யப்படும். இதுபோன்ற பயோமெட்ரிக் விவரங்களை புதுப்பிப்பு செய்ய வழக்கமாக ரூ.125 கட்டணம் வசூலிக்கப்படும். ஆனால், செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் செய்தால், கட்டணம் கிடையாது. ஆகவே, அக்டோபர் 1ஆம் தேதி முதல் கட்டணம் இருக்கலாம்.

செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் விதிகளை பார்க்கையில், எல்ஜிபி இணைப்பை வைத்திருக்கும் கஸ்டமர்கள் e-KYC சரிபார்ப்பை முடிக்க வேண்டும். இதற்காக காலஅவகாசம் ஆகஸ்ட் 31ஆம் தேதிக்குள் முடிகிறது. இந்த தேதி நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், e-KYC சரிபார்ப்பை முடித்துவிடுவது சிரமத்தை தவிர்க்கும்.

இது IOCL, BPCL, HPCL ஆகிய நிறுவனங்களுக்கு பொருந்தும். ஏற்கனவே, ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. இப்போது, ஆகஸ்ட் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த தேதிக்குள் e-KYC சரிபார்ப்பை செய்து முடிக்கலாம். ஸ்மார்போன் அல்லது சம்பந்தப்பட்ட கேஸ் ஏஜென்சியின் வலைதளப் பக்கங்களில் e-KYC சரிபார்ப்பை செய்யலாம்.

இதற்காக IOCL, BPCL அல்லது HPCL நிறுவனங்களின் மொபைல் ஆப்களை பயன்படுத்துவது எளிதாக இருக்கும். பாரத் கேஸ் (Bharat Gas) கஸ்டமர்கள் Hello BPCL ஆப்பை டவுன்லோட் செய்து e-KYC சரிபார்ப்பை செய்து முடிக்கலாம். எச்பி கேஸ் (HP Gas) கஸ்டமர்கள் HP Pay ஆப்பை டவுன்லோட் செய்து சரிப்பார்ப்பை செய்து முடிக்க முடியும்.

மேலும், இண்டேன் (Indane) கஸ்டமர்கள் IndianOil ONE ஆப்பை பயன்படுத்தி கொள்ளலாம். இது கட்டாயம் கிடையாது. இருப்பினும், உரிய நேரத்தில் e-KYC சரிபார்ப்பை செய்து முடிக்க வேண்டும். இந்த ஆப்களில் e-KYC விருப்பத்துக்கு சென்று சரிப்பார்ப்பை முடிக்கலாம். ஆதார், கேஸ் இணைப்புடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் இதற்கு கட்டாயம் தேவைப்படும்.

Best Mobiles in India

English summary
New Rules From October 1 Bank Customers Should Know This Transactions Charge Before ATM Withdrawal
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X