Home
News

புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. ரூ.300 மானிய விலை கேஸ் புக்கிங்.. இதை கட்டாயம் செய்யனும்.. என்னென்ன மாறுது?

வருகிற அக்டோபர் 1ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த எல்பிஜி (LPG) கஸ்டமர்களுக்கும் புதிய விதிகள் அமலாகின்றன. இந்த விதிகளால் என்னென்ன மாற இருக்கிறது, இப்போது கஸ்டமர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம். ஒவ்வொரு கஸ்டமரும் தங்களது ஆதார் (Aaadhaar) பயோமெட்ரிக் அங்கீகாரத்தை விரைவாக முடிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அரசாங்கம் வழங்கும் எல்ஜிபி சப்சிடி (LPG Subsidy) சரியான நபர்களுக்குச் சென்று சேர்வதை உறுதி செய்வதற்காகவே இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போலியான இணைப்புகளைக் கண்டறிந்து ரத்து செய்வதற்கும், வீட்டு உபயோக சிலிண்டர்கள் வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும் இந்த ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முறை மிகவும் அவசியமாகும்.

புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. ரூ.300 மானிய விலை கேஸ் புக்கிங்!

வாடிக்கையாளர்கள் தங்கள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பல வழிகளில் மிகவும் எளிமையாக செய்து முடிக்கலாம். சமையல் எரிவாயு சிலிண்டரை விநியோகம் செய்யும் நபரிடமே மொபைல் செயலி மூலமாக இதை மிக விரைவாகவும், பாதுகாப்பாகவும், எவ்வித சிரமமும் இன்றியும் வாடிக்கையாளர்கள் உடனடியாக முடித்துக்கொள்ள முடியும்.

சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரிடம் இதைச் செய்ய முடியாதவர்கள், தங்கள் பகுதியிலுள்ள எரிவாயு விநியோகஸ்தர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்றும் ஆதார் அங்கீகாரத்தை நிறைவு செய்யலாம். அங்குள்ள ஊழியர்கள் கைரேகை அல்லது முக அங்கீகாரத்தைப் பயன்படுத்தி இந்த முக்கியமான செயல்முறையை எளிதாகச் செய்து கொடுத்துவிடுவார்கள்.

வீட்டிலிருந்தபடியே இதைச் செய்ய நினைக்கும் வாடிக்கையாளர்கள், அந்தந்த நிறுவனங்களின் அதிகாரப்பூர்வ மொபைல் செயலிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தியன் ஆயில் வாடிக்கையாளர்கள் IndianOil ONE செயலியையும், பாரத் கேஸ் வாடிக்கையாளர்கள் ஹேலோபிபிசிஎல் (HelloBPCL) செயலியையும் பயன்படுத்தி தங்களது ஆதார் அங்கீகாரத்தை செய்து முடிக்கலாம்.

ஹெச்பி கேஸ் வாடிக்கையாளர்கள் ஹெச்பி பே (HP PAY) மொபைல் செயலியைப் பதிவிறக்கம் செய்து இந்த வேலையை முடிக்கலாம். அக்டோபர் 1ஆம் தேதிக்குள் இதைச் செய்யாவிட்டால் என்ன நடக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழலாம். அங்கீகாரம் செய்யத் தவறியவர்களுக்கு வழக்கமான விலையில் எல்பிஜி சிலிண்டர்கள் தடையின்றி வழங்கப்படும்.

ஆனால், அப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் எதிர்காலத்தில் எந்தவிதமான மானியத்தையும் அரசிலிருந்து பெற முடியாது. முழுவதும் சந்தை விலையிலேயே சிலிண்டர்களை வாங்க வேண்டியிருக்கும். எனவே மானியத்தை இழக்காமல் இருக்க எல்ஜிபி சப்சிடி (LPG Subsidy) பெறும் இந்த புதிய விதிமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டியது மிகவும் கட்டாயமாகும்.

ஏற்கெனவே தங்கள் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை வெற்றிகரமாக முடித்த வாடிக்கையாளர்கள், மீண்டும் ஒருமுறை இதைச் செய்ய வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அவர்கள் வழக்கம் போல் சலுகைகளைத் தொடர்ந்து பெறலாம். ஆதார் அங்கீகாரம் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு ஐந்து கிலோ அளவிலான சிலிண்டர்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

அல்லது பத்து கிலோ அளவிலான சிலிண்டர்கள் மட்டுமே கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. அதுவும் அந்தந்த பகுதிகளில் உள்ள எல்பிஜி விநியோகஸ்தர்களிடம் இருக்கும் இருப்பைப் பொறுத்தே அவற்றுக்கான விநியோகம் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும். எனவே முன்கூட்டியே பயோமெட்ரிக் அங்கீகாரத்தை முடிப்பது எதிர்கால சிரமங்களைத் தவிர்க்க பெரிதும் உதவும்.

இந்த முழு செயல்முறையும் டிஜிட்டல் முறையில் நடைபெறுவதால், எல்ஜிபி சப்சிடி சரியான பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் சென்று சேருவது எளிதாகிறது. இது அரசிற்கும், உண்மையான வாடிக்கையாளர்களுக்கும் மிகப்பெரிய பயனை அளிக்கும் ஒரு மிகச்சிறந்த தொழில்நுட்ப முன்னெடுப்பாகும். இதன் மூலம் முறைகேடுகள் தவிர்க்கப்படும்.

உங்களுடைய எல்பிஜி இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பதை மட்டும் வைத்து நீங்கள் மானியத்தைப் பெற முடியாது. அதற்கான பயோமெட்ரிக் அங்கீகாரத்தை அதாவது கைரேகை அல்லது முகப்பதிவை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்பதை அனைவரும் கண்டிப்பாக நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த விதியின் மூலம் எல்ஜிபி சப்சிடி பெறும் தகுதியுள்ள நுகர்வோர்களைப் எளிதாகப் பிரித்தறிய முடியும். வரவிருக்கும் அக்டோபர் மாதத்திற்குள் இந்த முக்கியமான வேலையை அனைவரும் விரைவாக செய்து முடித்து, எரிவாயு மானியத்தை எந்தவித தடையுமின்றித் தொடர்ந்து பெற்றுக்கொள்ளுமாறு நிறுவனங்கள் சார்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
New Rules From October 1 Aadhaar Authentication For LPG Subsidy Consumers Need To Know This Process
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X