புது ரூல்ஸ்.. அக்டோபர் 1 முதல் அமல்.. ரூ.500, ரூ.1000-க்கும் சார்ஜ்.. ATM கட்டணம், UPI சார்ஜ்.. என்ன மாறுது?
ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் வருகிற அக்டோபர் மாதத்தில் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. ஏடிஎம் கட்டணம் (ATM Charges), ஃபிக்சட் டெபாசிட் (Fixed Deposit) விதிகள் அக்டோபர் 1ஆம் தேதி முதலும், யுபிஐ கட்டண விதிகள் (UPI Fee Rules) அக்டோபர் 15ஆம் தேதி முதலும் அமல் செய்யப்பட இருக்கின்றன.
இந்த விதிகளால் பேங்க் கஸ்டமர்களிடையே என்னென்ன மாற இருக்கிறது என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம். ஏடிஎம் கட்டண விதிகளை பொறுத்தவரையில், ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் பொருந்தினாலும், குறிப்பிட்ட அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே புதிதாக கட்டணம் விதிக்கப்பட இருக்கிறது.

முதலாவது, பிஎஸ்பிடி (BSBD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் (Basic Savings Bank Deposit) அக்கவுண்ட்களுக்கு இந்த ஏடிஎம் கட்டண விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. எஸ்பிஐ (SBI) பேங்கில் பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் ஏடிஎம் வழியாக மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை எடுக்கலாம்.
இந்த லிமிட்டுக்கு மேல் செல்லும்போது, ஒவ்வொரு ஏடிஎம் பரிவர்த்தனைக்கும் ரூ. 15 மற்றும் ஜிஎஸ்டி (GST) கட்டணம் செலுத்த வேண்டும். ஆனால், டிஜிட்டல் பரிவர்த்தனைகளை எந்த கட்டணமும் இல்லாமல் செய்து கொள்ளலாம். ஏடிஎம் பரிவர்த்தனைக்கு மட்டுமே கட்டணம் இருக்கிறது. வருடாந்திர ஏடிஎம் கட்டணமானது பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் அக்கவுண்டுக்கு கிடையாது.
அதேபோல எஸ்பிஐ பேங்கில் சேலரி அக்கவுண்ட் (Salary Account) வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு ஏடிஎம் வரம்பு குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, மற்ற ஏடிஎம்களில் 10 பரிவர்த்தனைகள் வரையில் செய்து கொள்ள அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், இந்த லிமிட் 5 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த லிமிட்டுக்குள் பரிவர்த்தனை செய்தால் கட்டணம் செலுத்த வேண்டியது கிடையாது.
ஆனால், 5 லிமிட்டை மீற பரிவர்த்தனை செய்தால், ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் ஜிஎஸ்டி கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கிறது. எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்களுக்கே இப்படி லிமிட் விதிக்கப்பட்டு இருப்பதால், மற்ற பேங்குகளிலும் ஏடிஎம் கட்டண விதிகளில் மாற்றங்களை எதிர்பார்க்கலாம். இந்த புதிய விதிகள் அக்டோபர் 1ஆம் தேதி (New Rules From October 1) முதல் அமலுக்கு வர இருக்கின்றன.
இதே தேதியில் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கும் புதிய ஃபிக்சட் டெபாசிட் விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. பேங்குகள் ஒவ்வொரு வேலை நாளிலும் காலை 10:00 மணிக்குள் மொத்த வைப்புத்தொகைகளுக்கு வழங்கப்படும் தினசரி வட்டி விகிதங்களின் பட்டியலை இணையதளத்தில் வெளியிடும். மாற்றங்கள் அல்லது அப்டேட்கள் இருந்தால், 10 நிமிட அவகாசம் கிடைக்கும்.
இது பல்க் டெபாசிட் ஹோல்டர்களுக்கு மட்டுமே பொருந்தும். இந்த விதிகளுக்கு அடுத்து பேங்க் கஸ்டமர்களுக்கு அக்டோபர் 15 ஆம் தேதி முதல் புதிய யுபிஐ கட்டண விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் ஒட்டுமொத்த பேங்க் கஸ்டமர்களுக்கு பொருந்தாது, வணிக ரீதியாக யுபிஐ பரிவர்த்தனையை பயன்படுத்தும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
அக்டோபர் 15ஆம் தேதி முதல் ரூ.2,000 மேல் பரிவர்த்தனையை பெறும் வணிகர்களுக்கு 0.4 சதவீத எம்டிஆர் கட்டணம் (MDR Charges) வசூலிக்கப்பட இருக்கிறது. யுபிஐ பரிவர்த்தனைக்கு ஒரு நாளுக்கு ரூ.1 லட்சம் மட்டுமே லிமிட்டாக இருக்கிறது. ஆனால், ரூ.1 லட்சம் வரையில் இந்த 0.4 சதவீத எம்டிஆர் கட்டணம் பொருந்தாது. ரூ.75,000 வரையில் மட்டுமே பொருந்தும்.
அதாவது, ரூ.75,000 பணத்தை பரிமாற்றம் செய்தால் 0.4 சதவீ கணக்குப்படி ரூ.300 வசூலிக்கப்படும். அதுவே ரூ.80,000 பரிவர்த்தனை செய்தாலும், ரூ.1 லட்சம் பரிவர்த்தனை செய்தாலும் அதே ரூ.300 மட்டுமே எம்டிஆர் கட்டணமாக வசூலிக்கப்படும். ரூ.1 லட்சத்துக்குள் வருமானம் பெறும் வணிகர்களுக்கு இந்த எம்டிஆர் கட்டணத்தில் இருந்து விலக்கு இருக்கிறது.


Click it and Unblock the Notifications
