புது ரூல்ஸ்.. அக்.1 முதல் அமல்.. Aadhaar - PAN, போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்னு.. பல திடீர் மாற்றங்கள்!
Aadhaar New Rules October 1: 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல், அதாவது நாளை முதல்.. பான் ஒதுக்கீடு தொடர்பான ஆதார் அட்டை விதி (Aadhaar Card rule related to PAN allotment), போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் (Post Office Schemes) தொடர்பான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளில் (Rules and regulations) புதிய மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன. அது என்ன மாற்றங்கள்? அக்டோபர் முதல் என்னென்ன மாறும்? என்கிற விவரங்கள் இதோ:
பான் ஒதுக்கீடு தொடர்பான ஆதார் அட்டை விதி: மத்திய அரசாங்கம் ஆனது, ஆதார் எண்ணுக்கு (Aadhaar number) பதிலாக ஆதார் பதிவு ஐடியை (Aadhaar enrollment ID) பயன்படுத்துவதற்கான விருப்பத்தை நிறுத்துவதற்கான முடிவை அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருகிறது.

ஆக இனி வரும் மாதங்களில், தனிநபர்கள் பான் ஒதுக்கீட்டு ஆவணங்களில் (PAN allotment documents) அல்லது வருமான வரி தாக்கல் (filing income tax returns) செய்யும் போது தங்கள் ஆதார் பதிவு ஐடியை வழங்க வேண்டியதில்லை. இந்த மாற்றம் 2024 அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.
தபால் அலுவலக சிறு சேமிப்பு திட்டங்கள் தொடர்பான விதிகளில் மாற்றம்: அக்டோபர் 1 ஆம் தேதி முதல், ஒழுங்கற்ற முறையில் செயல்படும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) கணக்கு, சுகன்யா சம்ரித்தி யோஜனா (Sukanya Samriddhi Yojana) மற்றும் தபால் அலுவலகங்கள் மூலம் செயல்படும் பிற சிறு சேமிப்பு திட்டங்களை முறைப்படுத்துவதற்கான புதிய விதிகளும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன.
நிதி அமைச்சகத்தால் ( Ministry of Finance) அறிவிக்கப்பட்டு உள்ள இந்த புதிய விதிகள் ஆனது சிறார்களின் பெயரில் திறக்கப்பட்ட கணக்குகள், பல பிபிஎஃப் கணக்குகள் மற்றும் என்ஆர்ஐ-களின் பிபிஎஃப் கணக்குகளை நீட்டித்தல் போன்ற பல விஷயங்களை முறைப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் ஆதார் மற்றும் பான் கார்டு தொடர்பான விவரங்கள் உட்பட மில்லியன் கணக்கான குடிமக்களின் தனிப்பட்ட தகவல்களை சட்டவிரோதமாக அம்பலப்படுத்தும் பல வலைத்தளங்களை இந்திய அரசாங்கம் முடக்கியதும் இங்கே குறிப்பிடத்தக்கது. செர்ட்-இன் (CERT-In) என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்பு குழுவால் (Indian Computer Emergency Response Team) அடையாளம் காணப்பட்ட பாதுகாப்பு மீறலுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) வெளியிட்டுள்ள அறிக்கையில், சில இணையதளங்கள் இந்திய குடிமக்களின் ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்கள் உட்பட முக்கியமான, தனிப்பட்ட தகவல்களை அம்பலப்படுத்துவது இந்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு வந்துள்ளது. அரசாங்கமானது பாதுகாப்பான இணைய பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அதிக முன்னுரிமை அளிப்பதால் இது தீவிரமான விஷயமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. தனிப்பட்ட தரவுகளின் பாதுகாப்புக்கு இணங்க, குறிப்பிட்ட வலைத்தளங்களை தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட இணையதளங்கள் ஆனது ஆதார் சட்டம் 2016ன் பிரிவு 29(4) ஐ மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த பிரிவு ஆதார் எண்கள் மற்றும் ஆதார் தொடர்புடைய தகவல்களை பொது வெளியில் காட்டுவதை வெளிப்படையாக தடை செய்கிறது. இத்தகைய முக்கியத் தரவுகளின் அம்பலமானது குடிமக்களின் தனிப்பட்ட விவரங்களின் பாதுகாப்பில் கடுமையான விளைவுகளை உண்டாக்கும். எனவே தான் குறிப்பிட்ட வலைத்தளங்கள் உடனடியாக தடை செய்யப்பட்டுள்ளன.
இதோடு சேர்த்து செர்ட்-இன் ஆனது, தகவல் தொழில்நுட்ப (ஐடி) சட்டம் 2000 இன் கீழ் சில வழிகாட்டுதல்களையும் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதல்கள் ஆனது பாதுகாப்பு நடைமுறைகள், சைபர் தாக்குதல் சம்பவங்களை தடுப்பதற்கான நடைமுறைகள் மற்றும் தரவு மீறல்களை சந்திக்கும் நிறுவனங்களுக்கான தேவைகளை விவரிக்கிறது.


Click it and Unblock the Notifications








