Home
News

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. இனி ரூ.5000 இல்ல.. மேல ரூ.10000 ஏறிடுச்சு.. வருது பேங்குகளுக்கு நேரடி மாற்றம்!

இந்திய ரிசர்வ் வங்கி - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) கொண்டுவந்த யுபிஐ பரிவர்த்தனை விதிகள் (UPI Transaction Rules) வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அமலுக்கு வருகிறது. அடுத்த வருடம் போல உங்களுக்கு தோன்றலாம், ஆனால் அடுத்த ஒரு மாதத்தில் ஒட்டுமொத்த வங்கிகள் மற்றும் கஸ்டமர்கள் அந்த விதிகளுக்கு உட்பட வேண்டி இருக்கிறது. இநத விதிகளின் முழு விவரங்களை தெரிந்து கொள்வது இப்போது கஸ்டமர்களுக்கு தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

2024ஆம் ஆண்டை அப்படியே மறந்துவிடுங்கள். இனிமேல் 2025ஆம் ஆண்டில் அமலுக்கு வர இருக்கும் மாற்றங்களை பாருங்கள். இது உங்களது டிஜிட்டல் பரிவர்த்தனையில் நேரடி மாற்றங்களை கொண்டு வர போகிறது. முதலாவது, யுபிஐ பரிவர்த்தனை வரம்பில் (UPI Transaction Limit) நடக்கிறது. யுபிஐ இல்லாத பேங்க் கஸ்டமர்களே இப்போது கிடையாது.

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. இனி ரூ.5000 இல்ல.. ரூ.10000 ஏறிடுச்சு!

ஆகவே, புது பரிவர்த்தனை வரம்பை தெரிந்து கொண்டு பணத்தை அனுப்புங்கள். ஜனவரி 1ஆம் தேதி முதல் யுபிஐ 123பே பரிவர்த்தனை (UPI 123PAY Transaction) அதிகரிக்கப்படுகிறது. இப்போது, ரூ.5000ஆக யுபிஐ 123பே பரிவர்த்தனை வரம்பு (UPI 123PAY Transaction Limit) இருக்கிறது. இதை இந்திய ரிசர்வ் வங்கி ரூ.10000ஆக அதிகரித்துவிட்டது.

ஆனால், பேங்குகள் மற்றும் சேவை வழங்குநர்கள் இந்த விதிகளை பின்பற்றி கஸ்டமர்களுக்கு சேவைகளை வழங்க கால அவகாசம் கொடுக்கப்பட்டது. இந்த அவகாசம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிந்து போக இருக்கிறது. இதனால், என்பிசிஐ (NPCI) என்று அழைக்கப்படும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (National Payments Corporation of India) அமல் செய்ய இருக்கிறது.

பேங்குகள் மற்றும் சேவை வழங்குநர்கள் ஜனவரி 1ஆம் தேதி முதல் புது யுபிஐ 123பே பரிவர்த்தனை வரம்பின்படி சேவைகளை வழங்க இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் உத்தரவு கொடுத்திருக்கிறது. ஆகவே, யுபிஐ 123பே பயனர்களுக்கான வரம்பு இனிமேல் ரூ.10000ஆக அதிகரித்துவிட்டது. இப்போது ஜனவரி 1ஆம் தேதிக்கு பிறகு பரிவர்த்தனை நடக்கும்.

இந்த புது பரிவர்த்தனை வரம்புடன் வேறு என்ன விதிகள் அமலுக்கு வருகின்றன. யுபிஐ 123பே மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு சேவை கட்டணம் கேட்கப்படாது. பீச்சர் போன்கள் மூலம் ஐவிஆர் எண் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்ய முடியும். ஆகவே, இதற்கு உங்களிடம் இன்டர்நெட் சேவை கொண்ட மொபைல் இருக்க வேண்டியது இல்லை.

இப்படி பல்வேறு விதிகள் வருகின்றன. இதே ஜனவரி 1ஆம் தேதி முதல் மற்றொரு புது விதியும் அமலுக்கு வர இருக்கிறது. பான் கார்டு (PAN Card) வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த விதிகளின்படி அதில் ஆன்லைனில் சிலவற்றை செய்ய வேண்டி இருக்கிறது. அதாவது, ஆதார் கார்டு (Aadhaar Card) உடன் இணைக்க வேண்டும்.

இதை செய்யவில்லை என்றால், டிசம்பர் 31ஆம் தேதிக்கு பிறகு அதை செயலிழப்பு செய்யப்பட இருக்கிறது. பான் கார்டுக்கு எந்தவித சிக்கலும் இருக்காது. ஆனால், அதன் மூலம் பணப் பரிவர்த்தனைகளை செய்யும்போது, சிக்கல் ஏற்படும். பரிவர்த்தனைகளை செய்ய முடியாமல் போகலாம். ஆகவே, டிசம்பர் 31ஆம் தேதி வரையில் இருக்கும் அவகாசத்தை பயன்படுத்துங்கள்,

சொல்லப்போனால், டிசம்பரில் இருந்தே சில விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. அதாவது, டிசம்பர் 1ஆம் தே முதல் சிம் கார்டுகளுக்கு எஸ்எம்எஸ் விதிகள் வருகின்றன. டிசம்பர் 14ஆம் தேதிக்குள் ஆதார் அப்டேட் அவகாசம் முடிகிறது. ஆகவே, 2 மாதங்களில் என்னென்ன விதிகளை நீங்கள் பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From NPCI UPI Transaction Limit Rise From Rs 5000 To Rs 10000 Effect From January 1 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X