Home
News

புது SIM கார்டு ரூல்ஸ்.. நவ.30 முதல் அமல்.. Jio, Airtel, Vi-ஐ வச்சி செய்ய போகும் இந்திய அரசு.. இதுதான் லிமிட்!

இந்தியாவில் சிம் கார்டு பயன்படுத்தும் ஸ்மார்ட்போன் கஸ்டமர்களுக்கு நவம்பர் 30ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel), வோடபோன் ஐடியா (Vodafone Idea) அல்லது பிஎஸ்என்எல் (BSNL) சிம் கார்டுகளை வைத்திருக்கும் ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

ஒருவரது பெயரில் அனுமதிக்கப்பட்ட லிமிட்டை விட அதிகமான சிம் கார்டுகளை பெறுவதை தடுக்கும் வகையில் தொலைத்தொடர்பு துறை (DoT) ஆனது இந்த விதிகளை கொண்டுவந்துள்ளது. இந்த விதிகள் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் சிம் கார்டு வாங்கிய பிறகு சரிபார்ப்பு செய்யும்படி நடைமுறைக்கு வந்துள்ளது. நவம்பர் 30ஆம் தேதி முதல் ரியல்-டைமில் நடைமுறை செய்யப்பட இருக்கிறது.

புது SIM கார்டு ரூல்ஸ்.. நவ.30 முதல் அமல்.. Jio, Airtel, Vi-ஐ வச்சி?

அதாவது, ஒருவர் புதிய சிம் கார்டு வாங்குவதற்கு முன்பே, அவரது பெயரில் ஏற்கனவே எத்தனை சிம் கார்டு இணைப்புகள் செயல்பாட்டில் உள்ளன என்பது சரிபார்க்கப்படும். அனுமதிக்கப்பட்ட லிமிட்டை அந்த நபர் ஏற்கனவே எட்டியிருந்தால், புதிய சிம் கார்டு இணைப்பு பெறுவதற்கு தகுதி இருக்காது. ஆகவே, லிமிட்டை மீறி சிம் கார்டை வாங்கிவிட்டு பின்னர் சரிபார்ப்பு நடைபெறும் நிலை மாறிவிடும்.

புதிய சிம் கார்டு வழங்கப்படும் நேரத்திலேயே இந்த சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும். இந்தியாவில் பொதுவாக ஒரு தனிநபரின் பெயரில் அதிகபட்சமாக 9 சிம் கார்டு இணைப்புகளை வைத்திருக்க அனுமதி உள்ளது. அதே நேரத்தில் ஜம்மு காஷ்மீர், அசாம் மற்றும் வடகிழக்கு உரிமம் பெற்ற பகுதிகளில் இந்த லிமிட் 6 ஆக மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த லிமிட்டை ஏற்கனவே அடைந்துள்ளவர்கள் தங்களது பெயரில் மேலும் ஒரு புதிய சிம் கார்டை பெற முடியாது. இந்த விதிகளின் முக்கிய நோக்கமானது, ஒரே நபரின் அடையாள ஆவணங்களை பயன்படுத்தி அதிக எண்ணிக்கையிலான சிம் கார்டுகள் வாங்கப்படுவதை தடுப்பதாகும். மேலும், டெலிகாம் கஸ்டமர்கள் தங்களிடம் எத்தனை சிம் கார்டு இணைப்புகள் உள்ளன என்பதையும் அவ்வப்போது சரிபார்க்க வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள் அல்லது நண்பர்களுக்காக தங்களது அடையாள ஆவணங்களை பயன்படுத்தி புதிய சிம் கார்டு வாங்கிக் கொடுத்திருந்தால், அந்த இணைப்புகள் இன்னும் தங்களது பெயரில் இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். பயன்படுத்தப்படாத பழைய சிம் கார்டு இணைப்புகள் இருந்தால் அவற்றை தொடர்ந்து செயல்பாட்டில் வைத்திருப்பதற்கு பதிலாக சரண்டர் செய்வது நல்லதாகும்.

ஆகவே, நவம்பர் 30ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த ரியல்-டைம் சிம் சரிபார்ப்பு நடைமுறை, இந்தியாவில் மொபைல் இணைப்புகளை வழங்கும் முறையில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்த இருக்கிறது. இதேபோல ஏடிஎம் வழியாக பணத்தை எடுக்கும் பேங்க் கஸ்டமர்களுக்கும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. ஆனால், ஒட்டுமொத்த கஸ்டமர்களுக்கும் பொருந்தாது.

பிஎஸ்பிடி (BSBD) என்று சுருக்கமாக அழைக்கப்படும் பேசிக் சேவிங் பேங்க் டெபாசிட் (Basic Savings Bank Deposit) அக்கவுண்ட்களுக்கு மட்டுமே பொருந்தும். அதிலும் எஸ்பிஐ பேங்க் கஸ்டமர்களில் பிஎஸ்பிடி அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஆகவே, இந்த அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் ஏடிஎம் வழியாக மாதத்துக்கு 4 முறை இலவசமாக பணத்தை எடுத்து கொள்ளலாம்.

இதற்கு மேல் ஒவ்வொரு முறை எடுக்கும் பண பரிவர்த்தனைக்கும் ரூ.15 மற்றும் ஜிஎஸ்டி (GST) கட்டணம் வசூலிக்கப்படும். மற்றபடி டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்த லிமிட்டும் கிடையாது. அதேபோல மற்ற அக்கவுண்ட்களை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வழக்கம்போல இருக்கும் லிமிட்டே தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும். பிஎஸ்பிடி அக்கவுண்ட் இந்திய அரசின் திட்டத்தின் கீழ் வரும் சேவையாகும்.

Best Mobiles in India

English summary
New Rules From November 30 Every SIM Card Customers Should This Process Before Buying New SIM Cards
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X