Home
News

ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் UPI சேவைகளில் முக்கியமான மாற்றங்கள்.. இதோ முழு விவரம்..

நவம்பர் 1ஆம் தேதி முதல் ரயில் டிக்கெட் புக்கிங் (train ticket booking) மற்றும் யுபிஐ (UPI) சேவைகளில் ஒரு முக்கியமான மாற்றங்கள் வந்துள்ளது. இதுகுறித்து விரவான தகவல்களை இங்கே பார்க்கலாம். அதாவது சென்னை, பெங்களூர், கோவை உள்ளிட்ட பெரு நகரங்களில் தங்கியிருக்கும் பெரும்பாலானோர் தீபாவளி, பொங்கல், உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்களுக்கு தங்கள் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள்.

அவ்வாறு சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் முதலில் பயணிக்க விரும்புவது ரயிலில் தான். இதற்கு வேண்டி ரயிலில் முன்பதிவு செய்துவிடுவார்கள். குறிப்பாக இப்படி ஊருக்குச் செல்வதற்கு ரயிலில் முன்பு செய்ய வேண்டும் என்றால் 120 நாட்களுக்கு முன்பே அதாவது 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்திருக்க வேண்டும். குறிப்பாக இப்படிச் செய்தால் தான் பயணிக்க முடியும் என்ற நிலை இருந்தது. பயணிகளும் நான்கு மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்து பயணத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் UPI சேவைகளில் வரும் மாற்றங்கள்..

ரயில் டிக்கெட் புக்கிங் (train ticket booking) புது விதிகள்: இந்நிலையில் தான் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக குறைக்கப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இந்த நடைமுறை நவம்பர் 1-ம் தேதியான இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. குறிப்பாக ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.

குறிப்பாக 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் கடைசி நேரத்தில் தங்களது டிக்கெட்டை ரத்து செய்வதுவழக்கமாக நடக்கிறது. இதனால் மற்ற பயணிகள் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே தான் ரயில்களின் முன்பதிவு வசதியை 120 நாட்களில் இருந்து 60 நாட்களாக ரயில்வே துறை குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது, டிக்கெட்டை கேன்சல் செய்வது, ரயில் எங்கே இருக்கிறது என்பதைக் கண்காணிக்கும் லைவ் ட்ரெயின் ட்ராக்கிங் (Live train tracking) மற்றும் இரயில் பயணத்தின் போது உணவுகளை புக்கிங் (Food bookings onboard) செய்வது போன்ற அனைத்து சேவைகளையும் வழங்கும் ஒரு விரிவான சூப்பர் ஆப்பை (Super App) இந்திய ரயில்வே துறை வெளியிட உள்ளது.. குறிப்பாக இந்த சூப்பர் ஆப் அறிமுகமாக இன்னும் சில மாதங்கள் ஆகும்.

யுபிஐ சேவையை நாடு முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர். அதாவது ஒருவருக்கொருவர் பணம் பரிமாற்றம் செய்வது, கடைக்குச் சென்று வாங்கும் சிறிய ரக பொருட்களுக்கும் ஸ்கேன் செய்து பணம் வழங்கும் முறை இப்போது அதிகரித்து வருகிறது என்பது தான் உண்மை. குறிப்பாக யுபிஐ சேவை ஆனது மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. இந்நிலையில் யுபிஐ லைட் சேவையில் ஒரு முக்கிய மாற்றம் இன்று வந்துள்ளது.

ரயில் டிக்கெட் புக்கிங் மற்றும் UPI சேவைகளில் வரும் மாற்றங்கள்..

யுபிஐ (upi) புது விதிகள்: அதாவது நவம்பர் 1-ம் தேதி (இன்று) முதல் யுபிஐ லைட்டின் பரிவர்த்தனை வரம்பு (UPI Lite Transaction Limit) அதிகரிக்கப்படும். அதாவது தற்போது யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ரூ.500 இல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்த முன்மொழிந்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.

அதேபோல் யுபிஐ லைட் வாலெட்-களில் (UPI Lite Wallet) சேமிக்கப்படும் அதிகபட்ச தொகையை 2000 ரூபாயில் இருந்து ரூ.5000-ஆக உயர்த்தியுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இதுதவிர ஆட்டோ டாப் அப் என்ற ஒரு புதிய அம்சம் யுபிஐ லைட்டில் (UPI LITE) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக யுபிஐ சேவையில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த புதிய வசதிகள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
New rules from November 1 on train ticket booking and UPI service: check details here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X