புது ரூல்ஸ்.. நவ.1 முதல் அமல்.. இனி டிக்கெட் புக்கிங் படாதபாடு.. 60 நாட்களில் முடிக்கனும்.. என்னென்ன மாறுது?
ஏசி பஸ், காரு, பிளைட்னு இருந்தாலும் ஏதாவது ஒரு ஊருக்கு போக முடிவு எடுத்தா போதும் கோடிக்கணக்கான மக்களுக்கு ரயில்தான் நினைவுக்கு வரும். இந்த நினைவை தூக்கி சாப்பிடும்படி புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. தீபாவளி, பொங்கல்னு பண்டிகை வந்துவிட்டால் டிக்கெட் முன்பதிவு செய்வது குதிரைக்கொம்பாகவே இருக்கும். இதை மேலும் படாதபாடாக மாற்றும்படி இந்த விதிகள் இருக்கப் போகின்றன. நவம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் இந்த விதிகளால் என்னென்ன மாற்றங்கள் வரப் போகிறது.
இப்போதெல்லாம் யாரும் ரயில் நிலையங்களுக்கு சென்று டிக்கெட் எடுப்பது கிடையாது. வீட்டில் இருந்தே மொபைல் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். ஆகவே, ஆன்லைனில் எப்போது வேண்டுமானாலும் புக்கிங் செய்ய முடிவதால், செல்ல வேண்டிய ஊருக்கு முன்கூட்டியே திட்டமிட்டு குறிப்பிட்ட தேதியில் டிக்கெட்டை முன்பதிவு செய்து வைக்கின்றனர்.

இதை பல வாரங்களுக்கு முன்னதாகவே செய்கின்றனர். அதிலும், பல பயணிகள் 3 அல்லது 4 மாதங்களுக்கு முன்பே புக்கிங் செய்துவிட்டு காத்திருக்கின்றனர். இதனால், ஒரு மாதத்துக்கு பிறகு ரயில் டிக்கெட்டை புக்கிங் செய்ய போனால் கூட ரிசர்வேஷன் செய்யப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இது திட்டமிட்டு பயணம் செய்வோர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுக்கிறது.
இவர்களுக்கே ஐஆர்சிடிசி டிக்கெட் முன்பதிவு (IRCTC Ticket Reservation) விதிகள் மாற்றத்தை கொண்டுவர போகின்றன. அதாவது, ஐஆர்சிடிசி விதிகளின்படி டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளில் அதிகபட்சமாக 120 நாட்களுக்கு முன்பாக டிக்கெட்டை முன்பதிவு செய்து வைத்து கொள்ளலாம். எந்த தேதியில் பயணம் இருக்கிறதோ அதற்கு முன்பு 120 நாட்களுக்கு இந்த லிமிட் கிடைக்கிறது.
இந்த ஐஆர்சிடிசி அட்வான்ஸ் ரிசர்வேஷன் லிமிட் (IRCTC Advance Reservation Limit) இப்போது 60 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆகவே, இனிமேல் 2 மாதங்களுக்குள் டிக்கெட் முன்பதிவை செய்து கொள்ள வேண்டும். இது டிக்கெட் முன்பதிவை மேலும் சிரமாக்கும். ஏனென்றால், குறைப்பிட்ட காலக்கெடுவுக்குள் டிக்கெட் முன்பதிவு செய்யவதில் பயணிகளிடையே போட்டி ஏற்பட வாய்ப்புள்ளது.
இது ஒருபுறம் இருக்க, டிக்கெட் முன்பதிவு (Ticket Booking) செய்துவிட்டு கேன்சல் செய்யும் நபர்களை குறைக்கவும் செய்ய போகிறது. ஏனென்னறால், 4 மாத இடைவெளியில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டால், கடைசி நேரத்தில் டிக்கெட்டை கேன்சல் செய்வது அதிகரித்து வருகிறது. ஆனால், அந்த தேதியில் வேறு யாராவது டிக்கெட் தேடிக்கொண்டிருக்கும் போது, அவர்களுக்கு அது கிடைக்காமல் போகிறது.
இதுவே 2 மாதங்கள் என்றால், பயணத்தில் மாற்றம் ஏற்படுவதும், அதே நேரத்தில் டிக்கெட் கேன்சல் செய்யப்படுவதும் குறையும் வாய்ப்புள்ளது. ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்வதில் இருக்கும் போட்டியை இது சற்று அதிகரிக்கும். டிக்கெட்டுகள் சில நாட்களிலேயே முடியவும் வாய்ப்புள்ளது. இதனால், ஸ்லீப்பர் கோச் கிடைக்கவில்லை என்று ஏசி கோச்சுக்கு பயணிகள் மாறுவார்கள்.
ஆகவே, இது ஐஆர்சிடிசிக்கு லாபத்தை கொடுக்கக்கூடிய விதிகளாக இருக்கிறது. நவம்பர் 1ஆம் தேதிக்கு பிறகு டிக்கெட் புக்கிங் செய்ய திட்டமிட்டால், உடனடியாக முடித்துவிடுங்கள். சில நாட்கள் தள்ளிப் போட்டாலும், உரிய தேதியில் உங்களுக்கு புக்கிங் கிடைக்காமல் போகலாம். மேலும், நவம்பர் 1ஆம் தேதிக்கு முன்பாக டிக்கெட் புக்கிங் செய்த பயணிகளுக்கு எந்தவித மாற்றமும் இல்லை.
அவர்கள் வழக்கம்போக டிக்கெட் முன்பதிவு செய்த தேதியில் பயணம் செய்யலாம். அதேபோல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான முன்பதிவு செய்யும் கால அவகாசத்திலும் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆகவே, அவர்கள் 365 நாட்களுக்கு முன்பாகவே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதை ஐஆர்சிடிசி உறுதிப்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








