Home
News

புது ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்.. இனி ரூ.75 கட்டண கதை முடிந்தது.. பேங்க் அக்கவுண்ட், ஆதாருக்கு வருது மாற்றம்!

ஆதார் கார்டு வைத்து இருக்கும் ஒட்டுமொத்த பேருக்கும் யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவர இருக்கிறது. இந்த விதிகள் ஜூலை 1ஆம் தேதி முதல் அமல் செய்யப்பட இருக்கின்றன.

ஆதார் கார்டில் மொபைல் நம்பர் அப்டேட், முகவரி அப்டேட் மற்றும் ஈமெயில் அப்டேட் முக்கியமாக இருக்கிறது. இந்த சேவைகள் ஆதார் சென்டரில் மட்டுமே கிடைத்தன. இதில் மொபைல் நம்பர் மற்றும் ஈமெயின் அப்டேட் செய்ய ரூ.75 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஜூலை 1ஆம் தேதி முதல் கட்டணத்தில் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன.

புது ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்.. இனி ரூ.75 கட்டண கதை முடிந்தது!

ஆதார் ஆப் (Aadhaar App) வழியாக ஈமெயில் அப்டேட் (Email Update) செய்தால், ரூ.75 கட்டணம் வசூலிக்கப்படாது. இலவமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆதார் ஆப் பயன்படுத்தப்படுவதை ஊக்குவிக்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆனது இந்த விதிகளை கொண்டுவந்துள்ளது. இதே ஆதார் ஆப் வழியாக மொபைல் நம்பர் அப்டேட் செய்து கொள்ளலாம்.

ஆனால், அதற்கு கட்டணமாக ரூ.75 செலுத்த வேண்டும். இப்போது, ஆதார் ஆப்பில் மொபைல் நம்பர் மற்றும் முகவரி அப்டேட் மட்டுமே செய்ய முடியும். ஈமெயில் அப்டேட் செய்வதற்காக வசதி கொண்டுவரப்படவில்லை. ஜூலை 1ஆம் தேதி இந்த விதிகள் அமலுக்கு வருவதால், அன்றைய தேதியில் இருந்து ஈமெயின் அப்டேட் வசதி கொண்டுவரப்பட இருக்கிறது.

ஆகவே, இப்போது ஆதார் ஆப்புக்கு சென்று ஈமெயில் அப்டேட் செய்ய முடியாது. ஆதார் எண்ணுடன் மொபைல் நம்பர் இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே இந்த ஈமெயில் அப்டேட்டை செய்ய முடியும். இதனால், மொபைல் நம்பரை முதலில் ஆதாருடன் அப்டேட் செய்து கொள்ளுங்கள். ஏனென்றால், ஓடிபி வெரிபிகேஷன் செய்யப்பட்டு, இது முடிக்கப்படும்.

அதே நேரத்தில் பேஸ் ஆதன்டிகேஷனும் இதற்கு கேட்கப்படும். ஆகவே, ஆதார் கார்டுடன் மொபைல் நம்பரை இணைக்காமல் இருந்தால், ஜூலை 1ஆம் தேதிக்கு முன்னதாகவே இணைத்துவிடுங்கள். பிறகு ஆதார் ஆப் வழியாக ஈமெயில் அப்டேட் செய்தால், ரூ.75 கட்டணம் செலுத்த வேண்டியது இருக்காது. அதேபோல பழைய நம்பருக்கு பதிலாக மட்டுமே புதிய நம்பரை அப்டேட் செய்ய முடியும்.

அதாவது, ஏற்கனவே ஆதாரில் இணைக்கப்பட்ட நம்பருக்கு பதிலாக புதிதாக ஒரு நம்பரை இணைக்க மட்டுமே ஆதார் ஆப்பை பயன்படுத்த முடியும். இதில் ஓடிபி வெரிபிகேஷன் இருக்கிறது. எந்த நம்பரும் ஆதாருடன் இணைக்கப்படாமல் இருந்தால், இதை செய்து முடிக்க முடியாது. இதற்கு மட்டும் ஆதார் சென்டருக்கு நேரடியாக செல்ல வேண்டி இருக்கும்.

மேலும், ஜூலை 1ஆம் தேதி முதல் எஸ்பிஐ (SBI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) ஆனது, போன்பே எஸ்பிஐ கார்டு செலக்ட் பிளாக் (PhonePe SBI Card SELECT BLACK) மற்றும் போன்பே எஸ்பிஐ கார்டு பர்பிள் (PhonePe SBI Card PURPLE) ஆகிய கிரெடிட் கார்டுகளில் புதிய விதிகளை அமலுக்கு கொண்டுவருகிறது.

இதில் ரிவார்டு பாயின்ட்களுக்கு (Reward Points) மாதாந்திர வரம்புகள் அமலாகின்றன. ஜூலையில் இருந்து எச்டிஎப்சி பேங்கின் ரெகலியா கோல்டு கிரெடிட் கார்டு (Regalia Gold Credit Card) கஸ்டமர்கள் உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளை (Lounge) பயன்படுத்த முந்தைய காலாண்டில் குறைந்தபட்சம் ரூ.60,000 செலவு செய்திருக்க வேண்டும் என்ற விதிகள் அமலுக்கு வருகின்றன. கேஸ் சிலிண்டர், பிஎப் பணம் எடுப்பது உள்ளிட்டவற்றிலும் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இந்த விதிகள் நேரடியாக மாற்றங்களை கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
New Rules From July 1 2026 For Aadhaar Card Holders Email Update in Aadhaar Free Instead of Rs 75
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X