புது ரூல்ஸ்.. ஜனவரி 1, 2025 முதல் 1..2..3.. விதி.. LPG, UPI, EPFO, GST மாற்றங்கள்.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..
புதிய வருடம் (New Year 2025) பிறப்பதற்கு தோராயமாக இன்னும் 48 மணி நேரம் மட்டுமே மிஞ்சியுள்ள நிலையில், ஜனவரி 1, 2025 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் புதிய ரூல்ஸ்களை (New rules பிரேம் January 1, 2025) பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இந்திய பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் அறிந்துகொள்ள வேண்டிய, புதிய விதிமுறைகளை பற்றி தெரிந்துகொள்ளலாம். உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டில் துவங்கி, வீட்டில் பயன்படுத்தும் LPG கேஸ் சிலிண்டர், புதிய GST என்று பல விஷயங்கள் 2025 ஆரம்பம் முதல் மாறப்போகிறது.

1. EPFO பயனர்கள் கவனத்திற்கு.. புதிய EPS பென்ஷன் ரூல்ஸ்:
ஜனவரி 1, 2025 ஆம் தேதி முதல் EPFO பயனர்களுக்கு ஒரு புதிய விதி நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய விதியின் மூலம் EPS பென்ஷன் தொகையை பயனர்கள் வித்ட்ராவல் (EPS Pension Withdrawal) செய்யும் முறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு முதல் இனி EPFO பென்ஷன் பயனர்கள் (EPFO pension) அவர்களுக்கு விருப்பமான எந்தவொரு வங்கியில் இருந்து வேண்டுமானாலும் பணத்தை எடுத்துக்கொள்ளும் சேவை நடைமுறைக்கு வருகிறது.
2. Gpay, PhonePe, UPI பயனர்கள் கவனத்திற்கு.. புதிய UPI 123 பே பரிவர்த்தனை ரூல்ஸ்:
ஜனவரி 1, 2025 ஆம் தேதி முதல், UPI ஆப்ஸ் பயன்படுத்தும் பயனர்களுக்கு புதிய விதி நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த புதிய UPI 123Pay டிரான்ஸாக்ஷன் (UPI 123Pay Transaction) விதிப்படி, இனி ஃபீச்சர் ஃபோன்களைப் பயன்படுத்தி ஆன்லைனில் பணம் செலுத்த முயலும் பயனர்களுக்கான அடிப்படை பரிவர்த்தனை வரம்பு ரூ.5,000 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.இது ஃபீச்சர் போன்களில் UPI மூலம் பெரிய பரிவர்த்தனைகளை நடத்துவதை எளிதாக்குகிறது.
3. விவசாயிகளின் கவனத்திற்கு.. விவசாயிகளுக்கான புதிய கடன் வரம்பு ரூல்ஸ்:
விவசாயத் துறைக்கு ஆதரவளிக்கும் நடவடிக்கையாக, விவசாயிகள் இப்போது எந்தவித உத்தரவாதமும் இன்றி ரூ. 2 லட்சம் வரை கடன் பெற (Increased Loan Limit for Farmers) முடியும். ஜனவரி 1, 2025 ஆம் தேதி முதல் இந்த ரூல்ஸ் நடைமுறைக்கு வருகிறது. இதற்கு முன்பு, ரூ.1.6 லட்சம் வரம்பிலிருந்த இந்த வரம்பு, தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு விவசாயத்திற்கான கூடுதல் நிதி கிடைக்கப்போகிறது.
புதிய GST மாற்றங்கள்.. LPG விலை மாற்றங்கள்:
ஜனவரி 2025 முதல் ஜிஎஸ்டி (New GST Changes) போர்ட்டலை அணுகுவதற்கு வணிகங்கள் பல காரணி அங்கீகாரத்தை (Multi Factor Authentication - MFA) பின்பற்ற வேண்டும். இந்த கூடுதல் பாதுகாப்பு அடுக்குக்கு OTPகள் போன்ற கூடுதல் சரிபார்ப்பு படிகள் தேவைப்படும். கூடுதலாக,சமையல் எரிவாயு சிலிண்டர்களின் (LPG gas cylinder) விலை அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








