Home
News

புது IRCTC ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. இனி அவ்ளோ ஈஸியா தட்கல் டிக்கெட் புக்கிங் பண்ண முடியாது!

ரயில் டிக்கெட் மற்றும் ஆதார் தொடர்பான முக்கிய மாற்றம் இன்று (ஜூலை 15 ஆம் தேதி முதல்) அமலுக்கு வந்துள்ளது. இனிமேல் ஐஆர்சிடிசி (IRCTC) வழியாக தட்கல் டிக்கெட் முன்பதிவுகளுக்கு ஆதார் (Aadhaar) அடிப்படையிலான ஒடிபி (OTP) சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்த தேவை அனைத்து முன்பதிவு முறைகளுக்கும் பொருந்தும் - நீங்கள் ஐஆர்சிடிசி போர்டல் வழியாக ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தாலும், பிஆர்எஸ் (PRS) எனப்படும் பயணிகள் முன்பதிவு அமைப்பு கவுண்டர்களில், ஆஃப்லைன் வழியாக முன்பதிவு செய்தலும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலமாக செய்தாலும் சரி.. ஆதார் ஒடிபி அவசியம்!

புது IRCTC ரூல்ஸ் அமல்.. தட்கல் டிக்கெட் புக்கிங்கில் மாற்றம்!

ஐஆர்சிடிசி ஆனது முன்பதிவில் அமல்படுத்தியுள்ள இந்த மாற்றம் வெளிப்படைத்தன்மையை கொண்டுவருதல், பயணிகள் அங்கீகாரத்தை மேம்படுத்துவது மட்டுமின்றி.. பல முகவர்கள் மொத்தமாக முன்பதிவு செய்வதன் மூலம் தட்கல் ஒதுக்கீட்டை தவறாக பயன்படுத்துவதும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது.

ஆக இனிமேல் ஆதார் அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள் மட்டுமே தட்கல் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய ஐஆர்சிடிசி அனுமதிக்கும். சரிபார்ப்புக்கான ஒன் டைம் பாஸ்வேர்ட் (ஒடிபி) உங்கள் ஆதாருடன் தொடர்புடைய மொபைல் எண்ணுக்கு மட்டுமே அனுப்பப்படும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். குறுகிய தட்கல் முன்பதிவு காலக்கெடுவின் போது, ஒரு சுமூகமான அனுபவத்தை உறுதிசெய்யவும், கடைசி நேர சிக்கல்களைத் தவிர்க்கவும், உங்கள் ஆதார் அங்கீகாரத்தை முன்கூட்டியே முடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

தட்கல் முன்பதிவுகளுக்காக உங்கள் ஆதாரை உங்கள் ஐஆர்சிடிசி அக்கவுண்ட் உ டன் இணைப்பது எப்படி?
1. அதிகாரப்பூர்வ ஐஆர்சிடிசி வலைத்தளத்திற்கு செல்லவும். பதிவு செய்யப்பட்ட உங்கள் யூசர் நேம் (பயனர் பெயர்) மற்றும் பாஸ்வேர்ட் (கடவுச்சொல்) ஆகியவற்றை பயன்படுத்தி லாக்-இன் செய்யவும்

2. ப்ரொபைல் (Profile) பகுதிக்கு சென்று, கீழ்தோன்றும் பட்டியலில் இருந்து லிங்க் ஆதார் (Link Aadhaar) என்கிற விருப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
3. உங்கள் ஆதார் அட்டையில் தோன்றுவது போலவே உங்கள் முழுப்பெயரையும் உள்ளிடவும், அதை தொடர்ந்து உங்கள் 12 இலக்க ஆதார் எண்ணை உள்ளிடவும்.

4. செக்பாக்ஸை டிக் செய்து சென்ட் ஒடிபி (Send OTP) என்பதைக் கிளிக் செய்யவும். ஆதாருடன் இணைக்கப்பட்ட உங்கள் மொபைல் எண்ணில் ஒடிபி வரும்
5. அதை கொடுக்கப்பட்ட இதில் உள்ளிட்டு வெரிஃபை ஒடிபி (Verify OTP) என்பதை கிளிக் செய்து, பின்னர் அப்டேட் (Update) என்கிற பட்டனை அழுத்தி செயல்முறையை முடிக்கவும். இணைப்பு வெற்றிகரமாக முடிந்ததும் கன்ஃபிர்மேஷன் பாப்-அப் தோன்றும்.

சமீபத்தில் நாடு முழுவதும் உள்ள தபால் நிலையங்களில், இனிமேல் வாடிக்கையாளர்கள் ஆதார் அடிப்படையிலான பயோமெட்ரிக் இ-கேஒய்சி செயல்முறையை பயன்படுத்தி ஆர்டி (RD) எனப்படும் ரெக்கரிங் டெபாசிட் (Recurring deposit) மற்றும் பிபிஎப் (PPF) எப்படி பப்ளிக் ப்ரொவிடென்ட் ஃபண்ட (Public provident fund) அக்கவுண்ட்களை திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய செயல்முறை ஆனது ஆர்டி மற்றும் பிபிஎப் அக்கவுண்ட் ஓப்பனிங்கை விரைவாகவும் காகிதமில்லாமலும் செய்ய வழிவகுக்கிறது. ஏற்கனவே இந்த வசதி - மாதாந்திர வருமான திட்டம் (Monthly Income Scheme), டைம் வைப்புத்தொகை (Time Deposit), கிசான் விகாஸ் பத்ரா (Kisan Vikas Patra) மற்றும் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (National Savings Certificate) ஆகியவற்றுக்கு கிடைத்தது.

தற்போது இந்த வசதி இந்தியர்களிடையே மிகவும் பிரபலமான இரண்டு சிறிய சேமிப்பு கணக்குகளான ஆர்டி மற்றும் பிபிஎப்-க்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய செயல்முறையின் கீழ் வாடிக்கையாளர்கள்: ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை பயன்படுத்தி புதிய ஆர்டி மற்றும் பிபிஎப் அக்கவுண்ட்களை திறக்கலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From IRCTC Effect From July 15 Aadhaar OTP Mandatory for Tatkal Ticket booking How to link
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X