Home
News

புது IMPS ரூல்ஸ்.. பணம் அனுப்ப இனி ரூ.15 கட்டணம்.. ஜூலை 1 முதல் அமல்.. எந்த வங்கியில்?

ஐசிஐசிஐ பேங்க் (ICICI Bank) ஆனது ஏடிஎம் பரிவர்த்தனை தொடங்கி ஐஎம்பிஎஸ் (IMPS) வழியிலான பரிவர்த்தனை வரையிலாக, தனது வங்கியின் கீழ் கிடைக்கும் பல வகையான வங்கி சேவை கட்டணங்களை (Banking Charges) மாற்றி அமைத்துள்ளது. மணிகண்ட்ரோல் (Moneycontrol) வழியாக கிடைத்த தகவல்களின்படி இன்று (ஜூலை 1) முதல் அமலுக்கு வந்துள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்:

1. ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்டுள்ளன: ஐசிஐசிஐ வங்கி ஆனது அதன் ஏடிஎம் வழியிலான பணப்பரிவர்த்தனை ஒவ்வொரு மாதமும் முதல் ஐந்து நிதி பரிவர்த்தனைகள் இலவசமாகவே இருக்கும் என்றும்; ஐசிஐசிஐ வங்கியின் கீழ் நடக்கும் நிதி அல்லாத பரிவர்த்தனைகள் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்றும் அறிவித்துள்ளது. ஆனால் அதன் பிறகு நடக்கும் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.23 வசூலிக்கப்படும்.

புது IMPS ரூல்ஸ்.. பணம் அனுப்ப இனி ரூ.15 கட்டணம்.. எந்த வங்கியில்?

2. நான்-ஐசிஐசிஐ ஏடிஎம்கள்: ஐசிஐசிஐ அல்லாத ஏடிஎம்களை பயன்படுத்தும் ஐசிஐசிஐ ​​வாடிக்கையாளர்கள், பெருநகரங்களில் 1 மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே இலவச பரிவர்த்தனைகளையும், பெருநகரங்கள் அல்லாத இடங்களில் ஐந்து முறை மட்டுமே இலவச பரிவர்த்தனைகளை பெறுவார்கள். அதற்கு மேலான நிதி பரிவர்த்தனைக்கு ரூ.23 மற்றும் நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.8.50 வசூலிக்கப்படும்.

3. ஐஎம்பிஎஸ்: ஐசிஐசிஐ வங்கி ஆனது ஐஎம்பிஎஸ் (IMPS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் உடனடி பணம் செலுத்தும் சேவை (Immediate Payment Service) பரிமாற்றங்களுக்கான கட்டணங்களையும் திருத்தி உள்ளது. புதிய ஐஎம்பிஎஸ் கட்டணங்கள் ஆனது பரிமாற்றப்பட்ட தொகையை பொறுத்து ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.2.5 முதல் ரூ.15 வரை இருக்கும்.

4. ஐசிஐசிஐ பிரான்ச்: ஐசிஐசிஐ வங்கியானது அதன் கிளைகள் மற்றும் பண மறுசுழற்சி இயந்திரங்கள் (CRMs) வழியிலான பண பரிவர்த்தனைகளிலும் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் வங்கியில் மாதத்திற்கு மூன்று இலவச பண பரிவர்த்தனைகளை பெறுவார்கள், அதன் பிறகு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 வசூலிக்கப்படும்.

மேலும் ஐசிஐசிஐ வங்கி ஆனது ஒரு மாதத்திற்கு அதன் கிளைகளில் மூன்று முறை இலவசமாக பணம் எடுக்க அனுமதிக்கிறது. அதன் பிறகு, ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.150 கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். மேலும் ஒரு மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கு மேல் பணம் எடுப்பதற்கும் கட்டணம் விதிக்கப்படும். தேர்ட்-பார்ட்டி வித்ட்ராவல்களுக்கு - ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25,000 என்கிற வரம்பையும் ஐசிஐசிஐ வங்கி நிர்ணயித்துள்ளது.

5. ரொக்க வைப்புத்தொகை: ஒரு மாதத்தில் ரூ.1 லட்சத்திற்கு மேல் ரொக்க வைப்புத்தொகைக்கு ரூ.150 அல்லது ரூ.1,000 க்கு ரூ.3.50 (எது அதிகமாக இருக்கிறதோ அது) கட்டணம் விதிக்கப்படும் என்றும் ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. மூன்றாம் தரப்பு ரொக்க வைப்புத்தொகைக்கான வரம்பு ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.25,000 ஆகவே உள்ளது.

ஐசிஐசிஐ வங்கியை போலவே எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி வங்கிகளும் சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது: எஸ்பிஐ வங்கி ஆனது எஸ்பிஐ கார்டு பயன்படுத்தி விமான டிக்கெட்டுகள் வாங்கும்போது இலவச விமான விபத்து காப்பீட்டை வழங்குகிறது. இந்த காப்பீட்டு நன்மை முதன்மை அட்டைதாரருக்கு மட்டுமே பொருந்தும். ஜூலை 15 முதல், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரீமியம் கார்டுகளில் எஸ்பிஐ வங்கி இதை நிறுத்துகிறது.

இதேபோல எச்டிஎப்சி வங்கி அதன் கிரெடிட் கார்டுகளுக்கான கட்டணங்களை திருத்துகிறது. ஜூலை 1 முதல், எச்டிஎப்சி வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளுக்கான கட்டணங்களை திருத்துகிறது. வாடகை பரிவர்த்தனைகள் (பரிவர்த்தனை தொகையில் 1 சதவீதம்); மாதத்திற்கு ரூ.10,000க்கு மேல் ஆன்லைன் திறன் சார்ந்த கேமிங் செலவுகள் (மொத்த மாதாந்திர செலவில் 1 சதவீதம்) என கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும் மாதத்திற்கு ரூ.50,000க்கு மேல் பயன்பாட்டு செலவுகள் (காப்பீட்டு பரிவர்த்தனைகள் தவிர) (மொத்த மாதாந்திர செலவில் 1 சதவீதம்); மாதத்திற்கு ரூ.10,000க்கு மேல் வாலட் ஏற்றுதல் பரிவர்த்தனைகளுக்கு ரூ.4,999 க்கு மேல் 1 சதவீத கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் ஐசிஐசிஐ, எஸ்பிஐ அல்லது எச்டிஎப்சி வங்கிகளில் அக்கவுண்ட் இருந்தால் மேற்கண்ட புதிய விதிகள் மற்றும் மாற்றங்களை கவனத்தில் கொள்ளவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From ICICI Bank on New IMPS Charges ATM transactions Free Limit More Effect From July 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X