Home
News

புது ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்.. இனி ஒவ்வொரு 3 மாதங்களுக்கும் இதுதான் விதிமுறை.. HDFC பேங்க் அறிவிப்பு!

ஜூலை 1, 2026 முதல், எச்டிஎப்சி கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் ஒரு காலண்டர் காலாண்டிற்குள் (calendar quarter) மூன்று முறை உள்நாட்டு விமான நிலைய ஓய்வறைகளை (lounge) இலவசமாக பயன்படுத்திக்கொள்ளத் தகுதி பெறுவார்கள்; ஆனால், அதற்கு முந்தைய காலாண்டில் அவர்கள் குறைந்தபட்சம் ரூ. 60,000 செலவு செய்திருக்க வேண்டும்.

உதாரணமாக, ஜூலை-செப்டம்பர் 2026 காலாண்டில் விமான நிலைய ஓய்வறை (lounge) வசதியை பெற, அட்டைதாரர் ஏப்ரல் மற்றும் ஜூன் 2026-க்கு இடைப்பட்ட காலத்தில் ரூ.60,000 அல்லது அதற்கு மேல் செலவு செய்திருக்க வேண்டும். செலவு அடிப்படையிலான இந்த தகுதி விதிமுறை, அதனை தொடர்ந்து வரும் ஒவ்வொரு காலண்டர் காலாண்டிற்கும் பொருந்தும். இதேபோல முன்னதாக அமலுக்கு வந்த கிரெடிட் கார்டு விதிகள் ஒரு பார்வை:

புது ரூல்ஸ்.. ஜூலை 1 முதல் அமல்.. இனி ஒவ்வொரு 3 மாதங்களுக்கும்!

1. திறன் சார்ந்த ஆன்லைன் கேமிங் பரிவர்த்தனைகள் (Online skill-based gaming transactions): ட்ரீம்11 (Dream11), ரம்மி கல்ச்சர் (Rummy Culture), ஜங்லி கேம்ஸ் (Junglee Games), எம்பிஎல் (MPL) அல்லது இதுபோன்ற திறன் சார்ந்த ஆன்லைன் கேமிங் தளங்களில் நீங்கள் மாதத்திற்கு ரூ.10,000-க்கு மேல் செலவிட்டால், அந்த பிரிவில் செய்யப்படும் மொத்த செலவின் மீது 1% கட்டணம் விதிக்கப்படும்.

இந்த கட்டணம் மாதத்திற்கு அதிகபட்சம் ரூ.4,999 வரை மட்டுமே வசூலிக்கப்படும் என்பதையும் எச்டிஎப்சி பேங்க் உறுதிப்படுத்தி உள்ளது. மேலும், திறன் சார்ந்த ஆன்லைன் கேமிங் தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு எந்தவிதமான ரிவார்டு புள்ளிகளும் (Reward Points) வழங்கப்படாது என்றும் எச்டிஎப்சி பேங்க் கூறியுள்ளது.

2. வாலட் ரீசார்ஜ் பரிவர்த்தனைகள் (Wallet loading transactions): பேடிஎம் (Paytm), மொபிக்விக் (Mobikwik), ப்ரீசார்ஜ் (Freecharge) அல்லது ஓலா மணி (Ola Money) போன்ற மூன்றாம் தரப்பு டிஜிட்டல் வாலட்களில் உங்கள் எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டை பயன்படுத்தி மாதத்திற்கு ரூ.10,000-க்கு மேல் பணம் ஏற்றினால் (லோட் செய்தால்), அந்த மொத்தத் தொகையின் மீது 1% கட்டணம் விதிக்கப்படும். இந்த கட்டணம் மாதத்திற்கு ரூ.4,999-க்கு மிகாமல் இருக்கும்.

3. பயன்பாட்டு கட்டண பரிவர்த்தனைகள் (Utility transactions): எச்டிஎப்சி வங்கி கிரெடிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் மாத செலவு, தனிநபர் கார்டுகளுக்கு (consumer cards) ரூ.50,000-ஐயும், வணிக கார்டுகளுக்கு (business cards) ரூ.75,000-ஐயும் தாண்டினால், அக்கார்டுகள் மூலம் செய்யப்படும் பயன்பாட்டு கட்டண செலுத்துதல்களுக்கு 1% கட்டணம் விதிக்கப்படும்.

இந்த கட்டணம் அதிகபட்சம் ரூ. 4,999 வரை மட்டுமே இருக்கும் மற்றும் மாதத்தின் மொத்த பயன்பாட்டு கட்டண செலவுக்கும் பொருந்தும் என்றும் எச்டிஎப்சி வங்கி கூறியுள்ளது. இருப்பினும், காப்பீட்டு பரிவர்த்தனைகள் ஆனது பயன்பாட்டு கட்டண செலுத்துதல்களாக கருதப்படாததால், அவற்றுக்கு எந்த கட்டணமும் விதிக்கப்படாது என்பதையும் எச்டிஎப்சி வங்கிதெளிவுபடுத்தியுள்ளது.

4. கட்டண உச்சவரம்பு மாற்றம் (Charges upper cap revision): வாடகை, எரிபொருள் மற்றும் கல்வி ஆகிய பிரிவுகளுக்கான ஒரு பரிவர்த்தனைக்கான அதிகபட்ச கட்டணம் ரூ.4,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அனைத்து வாடகை செலுத்துதல்களுக்கும் தற்போதுள்ள 1% பரிவர்த்தனை கட்டணம் தொடர்ந்து பொருந்தும்.

எரிபொருள் பரிவர்த்தனைகளை பொறுத்தவரை, குறிப்பிட்ட பரிவர்த்தனை வரம்பை பொறுத்து, பரிவர்த்தனைத் தொகை ரூ.15,000 அல்லது ரூ.30,000-ஐத் தாண்டினால் மட்டுமே கட்டணம் விதிக்கப்படும். கல்வி தொடர்பான கட்டண செலுத்துதல்களை பொறுத்தவரை, மூன்றாம் தரப்பு செயலிகள் மூலம் பணம் செலுத்தப்படும்போது மட்டுமே 1% கட்டணம் பொருந்தும். இருப்பினும், கல்லூரி அல்லது பள்ளி இணையதளங்கள் அல்லது அவற்றின் விற்பனை முனைய (POS) இயந்திரங்கள் மூலம் நேரடியாக பணம் செலுத்தினால், எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படாது.

5. காப்பீடு தொடர்பான பரிவர்த்தனைகள் (Insurance transactions): காப்பீடு தொடர்பான பரிவர்த்தனைகளுக்கு 'ரிவார்டு புள்ளிகள்' (Reward Points) வழங்கப்படும். எனினும், குறிப்பிட்ட கிரெடிட் கார்டு வகையை பொறுத்து, இப்புள்ளிகளுக்கு மாதாந்திர உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் என்றும் எச்டிஎப்சி பேங்க் ஆனது புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது.


Article Corrections

Title and intro changed.
Best Mobiles in India

English summary
New Rules From HDFC Bank For Credit Card Users Come to Effect From July 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X