புது ரூல்ஸ் போட்ட அரசு.. 90 நாட்கள் கெடு.. இனி புது ஸ்மார்ட்போன்களுக்கு இது கட்டாயம்.. என்னென்ன வரப் போகுது?
இந்திய அரசானது ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும்படி புதிய விதிகளை கொண்டுவந்துள்ளது. இனிமேல் புதிய ஸ்மார்ட்போன்களில் சஞ்சார் சாதி ஆப் (Sanchar Saathi App) கட்டாயமாக ப்ரீ-லோட் செய்யப்பட்டிருக்கும். அடுத்த 90 நாட்களுக்கு ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுக்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதுகுறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.
தகவல் தொடர்பு அமைச்சகம் ஆனது ஆப்பிள், சாம்சங், விவோ, ஒப்போ, ரியல்மி, ரெட்மி மற்றும் சியோமி உள்ளிட்ட இந்தியாவில் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்யும் ஒட்டுமொத்த ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் அதனுடைய புதிய ஸ்மார்ட்போன்களை கஸ்டமர்களுக்கு கொடுக்கும் முன்பு அதில் சஞ்சார் சாதி ஆப்பை ப்ரீ-லோட் செய்ய உத்தரவிட்டுள்ளது. இதற்கு 90 நாட்கள் அவகாசம் கொடுத்துள்ளது.

இந்த உத்தரவின்படி ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் சஞ்சார் சாதி ஆப்பை ப்ரீ-லோட் செய்தால், அதை ஸ்மார்ட்போன் வாங்குபவர்கள் வைத்து கொள்ளலாம் அல்லது நீக்கி கொள்ளலாம். இந்த சஞ்சார் சாதி ஆப் ஆனது இந்திய அரசுக்கு சொந்தமானதாகும். இதில் ஸ்மார்ட்போன்களுக்கு கேஒய்எம் (KYM) என்று அழைக்கப்படும் உங்கள் மொபைல் அறிதல் (Know Your Mobile) செயல்முறையை செய்து கொள்ள முடியும்.
ஆகவே, ஸ்மார்ட்போனின் ஐஎம்இஐ (IMEI) விவரங்களை கொடுத்து வெரிபிகேஷன் செய்து கொள்ளலாம். இப்படி வெரிபிகேஷன் செய்த பிறகு ஸ்மார்ட்போன் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ அதை டிராக் செய்யவும், பிளாக் செய்யவும் முடியும். இதுபோல பல்வேறு அம்சங்களை அந்த ஆப் கொண்டுள்ளது. இப்போது, பிளே ஸ்டோர், ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
ஜனவரியில் கொண்டுவரப்பட்ட இந்த சஞ்சார் சாதி ஆப் உதவியுடன் கடந்த அக்டோபரில் மட்டும் 50,000 ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 7 லட்சத்துக்கும் மேலாக தொலைந்து போன ஸ்மார்ட்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனாலேயே புதிய ஸ்மார்ட்போன்களில் கட்டாயமாக இந்த சஞ்சார் சாதி ஆப்பை ப்ரீ-லோட் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆகவே, 90 நாட்கள் காலஅவகாசத்துக்கு பிறகு புதிய ஸ்மார்ட்போன்கள் வாங்கினால், அதில் சஞ்சார் சாதி ஆப் இருக்கும். அதேபோல கேஒய்எம் வெரிபிகேஷன் செய்ய வேண்டி இருக்கும். இது ஸ்மார்ட்போன் பாதுகாப்புக்கு தவிர்க்க முடியாததாக இருப்பதால், இதனால் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் மற்றும் ஸ்மார்ட்போன் வாங்குவோருக்கு எந்தவித சிக்கலும் இருக்கப்போதில்லை.
இதேபோல 90 நாட்கள் காலஅவகாசத்துடன் மற்றொரு விதிகளும் கொண்டுவரப்பட இருக்கிறது. ஆனால், இது ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு கிடையாது. சாட்டிங் சேவையை கொடுக்கும் வாட்ஸ்அப் (WhatsApp), அரட்டை (Arattai), டெலிகிராம் (Telegram), சிக்னல் (Signal) உள்ளிட்ட ஆப்களுக்கு அமலுக்கு வர இருக்கிறது. இந்த ஆப்களில் சிம் பைண்டிங் செய்யப்பட இருக்கிறது.
அதாவது, அந்தந்த ஆப்களில் சிம் கார்டு நம்பரை கொடுத்து ரிஜிஸ்டர் செய்ய வேண்டும். இந்த ரிஜிஸ்டர் அந்த ஒரு மொபைல் நம்பருடன் மட்டுமே வெரிபிகேஷன் செய்யப்பட்டு இருக்கும். ஆகவே, புதிய நம்பருடன் அதே வாட்ஸ்அப், அரட்டை உள்ளிட்ட ஐடியை பயன்படுத்த முடியாது. ரீ-வெரிபிகேஷன் இருக்கும். இது சிம்முடன் இணைக்கப்படுவதால், சிம் இல்லையென்றால் சேவை கிடைக்காது.
இது தற்காலிகமாக வாட்ஸ்அப், அரட்டை உள்ளிட்ட சேவையை பயன்படுத்த முடியாத நிலையை ஏற்படுத்தலாம். ஆனால், அது புதிய சிம் கார்டு வழியாக பயன்படுத்தும்போது மட்டும்தான் அது பொருந்தும். அதேபோல வெப் மூலமாக இந்த சாட்டிங் ஆப்களை பயன்படுத்தினால், 6 மணி நேரம் மட்டுமே லாகினில் இருக்கும். அதற்கு பிறகு லாக்-அவுட் செய்யப்படும். இந்த விதிகளை அமல்படுத்த 90 நாட்கள் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








