Home
News

புது EPFO ரூல்ஸ்.. டிஜிட்டல் கையெழுத்து, E-Sign இனி கட்டாயம்! ஆன்லைன் வழியாக 15 நாட்களில்.. தப்பிக்க முடியாது!

இபிஎப்ஓ (EPFO) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (Employees Provident Fund Organization) ஆனது டிஜிட்டல் சிக்னேச்சர் சான்றிதழ் (Digital Signature Certificate - DSC) மற்றும் இ-சைன் கோரிக்கைகளை (E-Sign requests) செயலாக்குவதற்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது.

இபிஎப்ஓ-வின் புதிய விதிகளின்படி, டிஎஸ்சி (DSC) என்று சுருக்கமாக அழைக்கப்படும் டிஜிட்டல் சிக்னேச்சர் சர்ட்டிஃபிகேட்டின் பயன்பாடு ஆனது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. எம்பிளாயரிடம் (Employer) இருந்து குறைந்தபட்சம் ஒரு டிஎஸ்சி அல்லது அங்கீகரிக்கப்பட்ட கையொப்பம் (Authorized signatory) இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட வேண்டும்.

புது EPFO ரூல்ஸ்.. டிஜிட்டல் கையெழுத்து, E-Sign இனி கட்டாயம்!

டிஜிட்டல் சிக்னேச்சர் சர்ட்டிஃபிகேட் / இ-சைன் கோரிக்கையை ஆன்லைன் வழியாக சமர்ப்பிப்பது எப்படி? வேலை வழங்குபவர்கள் ஒரு ஆன்லைன் கோரிக்கை கடிதத்தை யுனிஃபைட் போர்ட்டல் (Unified Porta) மூலம் சமர்ப்பிக்க வேண்டும், இதில் கையொப்பமிட விரும்புபவரின் 3 மாதிரி கையொப்பங்களும் (Specimen signatures) அடங்கும்.

இந்த கோரிக்கைகளை செயல்படுத்த, உரிமையை விவரிக்கும் புதுப்பித்த படிவம் 5ஏ (Up-to-date Form 5A) இன்றியமையாததாகும். கையொப்பமிடுபவர்களின் பெயர் மற்றும் மொபைல் எண்ணையும் சேர்க்க வேண்டும். மேலும் டிஎஸ்இ / இ-சைன் கோரிக்கை கடிதமானது, நிறுவனத்தின் லெட்டர்ஹெட்டில் இருக்க வேண்டும்; எதிர் கையொப்பமிடப்பட்டு (Countersigned) இருக்க வேண்டும், எம்பிளாயரால் முத்திரையிடப்பட்டும் இருக்க வேண்டும்.

கூடுதலாக, செல்லுபடியாகும் அடையாளச் சான்றுகளும் - ஆதார் அட்டை (Aadhaar Card) அல்லது யுஏஏன் (UAN Card) போன்றவைகளும் டிஎஸ்இ / இ-சைன் கோரிக்கையுடன் இருக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் ஆதார் விவரங்களின் நம்பகத்தன்மை ஆனது ஆன்லைன் டூல்களை பயன்படுத்தி கள அலுவலகங்களால் சரிபார்க்கப்படும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இப்படியாக வரும் கோரிக்கைகள் 15 வேலை நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் இபிஎப்ஓ கூறியுள்ளது.

இந்த புதிய வழிகாட்டுதல்களுடன் இணங்குவதற்கான தீவிரத்தன்மையை அடிக்கோடிட்டு காட்டும் வகையில், டிஎஸ்இ அல்லது இ-சைன் ஐ தவறாக பயன்படுத்தினால், எம்பிளாயரக்ளும் மற்றும் அவர்களது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் (Employers and their authorized representatives) ஆகிய இருவரும் தான் கூட்டாக பொறுப்பாவார்கள் என்றும் இபிஎப்ஓ கூறியுள்ளது.

இபிஎப்ஓ-வின் இந்த புதிய வழிகாட்டுதல்கள் இணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் அதே வேளையில் எஸ்டாபிளிஷ்மென்ட் தொடர்பான ஆவணங்களுக்கான (Establishment-related documents) அங்கீகார செயல்முறையை நெறிப்படுத்துவதையும் நோக்கமாக கொண்டுள்ளன. இபிஎப்ஓ-வின் இ-சைன் பயன்பாடானது, இ-கவர்னென்ஸ் முன்முயற்சியின் (E-governance initiative) ஒரு பகுதியாகும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

இதேபோல டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் ஒடிபி (OTP) தொடர்பான புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இந்த புதிய விதிகள் 2024 நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளன. இதன்கீழ் முதன்மை நிறுவனங்களிலிருந்து (Principal Entitie - PEs) வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களை கண்காணிக்க முடியும் என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

மெசேஜ் டிரேசிபிலிட்டி (Message traceability) தொடர்பான இந்த புதிய விதிகள் வங்கிகள், இ-காமர்ஸ் தளங்கள் மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட அனைத்து வகைகளுக்கும் பொருந்தும். அதாவது இனிமேல் பொருந்தாத அனுப்புநர் விவரங்கள் (Mismatched sender details) அல்லது தெளிவான அனுப்புநரின் அடையாளம் (Clear sender identity) இல்லாத எந்தவொரு மெசேஜ்களுமே பிளாக் செய்யப்படும்.

ஆன்லைன் வழியாக பணம் செலுத்துவது முதல் பார்சல்களை டெலிவரி செய்வது வரையிலாக.. பல்வேறு சேவைகளுடன் ஒடிபி மெசேஜ்கள் (OTP Messages) இணைக்கப்பட்டுள்ளதால். இதில் மெசேஜ் டிரேசிபிலிட்டியை கொண்டுவருவதன் மூலம் வாடிக்கையாளர்கள் பல வகையான சேவைகளின் போது சிரமத்தை சந்திக்க நேரிடும் என்று டெலிகாம் நிறுவனங்கள் கவலை எழுப்பியுள்ளன; மேலும் இந்த புதிய விதிக்கான காலக்கெடுவை நீட்டிக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From EPFO Digital Signature E Sign Mandatory For Employers Can Submit Online Request
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X