Home
News

ஆட்டம் முடிஞ்சது.. சரியான நேரத்தில் அமலுக்கு வந்த புதிய வாக்காளர் அட்டை விதிகள்.. தேர்தல் வாரியம் அதிரடி!

இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India) ஆனது வாக்காளர் அடையாள அட்டை (Voter ID Card) தொடர்பான புதிய விதிகளை அறிவித்துள்ளது. இனிமேல் ஆன்லைன் விண்ணப்பங்கள் (Online applications) மூலம் வாக்காளர் அட்டையில் மாற்றங்களை செய்ய விரும்பும் எவருக்கும் ஆதார் அடிப்படையிலான அங்கீகாரத்தை (Aadhaar-based authentication) கட்டாயமாக்கப்பட்டுள்ளது

தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை மூலம் படிவம் 6 மூலம் புதிய சேர்க்கைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள், படிவம் 7 மூலம் வாக்காளர்களை சேர்ப்பது அல்லது விலக்குவது குறித்து ஆட்சேபனைகளை எழுப்புவது அல்லது படிவம் 8 மூலம் திருத்தங்களைக் கோருவது ஆகியவைகளை செய்யும் போது அவர்களின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட ஒடிபி-அடிப்படையிலான இ-சைன் ஐ (OTP-based e-sign) நிரப்ப வேண்டும்.

சரியான நேரத்தில் அமலுக்கு வந்த புதிய வாக்காளர் அட்டை விதிகள்!

விண்ணப்பதாரரின் பெயர், வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை (EPIC - Electoral Photo Identity Card) எண் மற்றும் மொபைல் நம்பர் உள்ளிட்ட ஆன்லைனில் வழங்கப்படும் விவரங்கள், ஆதார் தரவுத்தளத்தில் உள்ள பதிவுகளுடன் சரியாக பொருந்துவதை இந்த முயற்சி உறுதி செய்கிறது.

ஆதார் எண் இல்லாதவர்கள் - கவலைப்படத் தேவையில்லை. பிஸிக்கல் படிவங்களை (Physical Forms) நிரப்பி, அதை நேரடியாக வாக்காளர் பதிவு அதிகாரி (ERO - Electoral Registration Officer) அல்லது பூத் நிலை அதிகாரியிடம் (BLO - Booth Level Officer) சமர்ப்பிக்கலாம்; அதனை தொடர்ந்து நீங்கள் கோரிய மாற்றங்கள் செய்யப்படும், மேற்கண்ட புதிய விதிகள் ஆனது ஆன்லைன் வழியாக மாற்றங்களை செய்ய விரும்புவோருக்கானது.

இந்த புதிய விதிகள் கடந்த 2025 ஆகஸ்ட் மாதத்தில் கருத்தியல் செய்யப்பட்டு, செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அமைதியாக அறிமுகப்படுத்தப்பட்டதாக தேர்தல் ஆணையத்தின் வட்டாரங்கள் டைம்ஸ் ஆப் இந்தியாவிடம் (TOI) தெரிவித்துள்ளன. குறிப்பிடத்தக்க வகையில், செப்டம்பர் 18 அன்று காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி செய்தியாளர் சந்திப்பிற்கு சற்று முன்பு இந்த சீர்திருத்தம் வந்தது.

குறிப்பிட்ட சந்திப்பில், டிசம்பர் 2022 இல் கர்நாடகாவின் ஆலந்து சட்டமன்றத் தொகுதியில் 6,000 க்கும் மேற்பட்ட வாக்காளர்களின் அங்கீகரிக்கப்படாத நீக்கம் குறித்து அவர் கவலைகளை எழுப்பி இருந்தார். ராகுல் காந்தியின் பத்திரிகையாளர் சந்திப்பை தொடர்ந்து, தேர்தல் ஆணையம் ஆலந்து வழக்கை விசாரித்து, 6018 நீக்குதல் விண்ணப்பங்களில் 24 மட்டுமே உண்மையானவை என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. அதாவது மீதமுள்ள 5,994 விண்ணப்பங்கள் தவறானவை என கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டுள்ளன.

சமீபத்தில் யுஐடிஏஐ (UIDAI) என்கிற இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India) ஆனது நாடு முழுவதும் 1.4 கோடிக்கும் மேற்பட்ட தனிநபர்களின் ஆதார் எண்களை செயலிழக்க செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. நீக்கப்பட்ட ஆதார் எண்கள் ஆனது இறந்துபோன நபர்களுக்கு சொந்தமான ஆதார் எண்கள் ஆகும்.

இந்திய அரசாங்கம் வழங்கும் நலத்திட்டங்களின் பலன்கள் சரியான பெறுநர்களை சென்றடைவதை உறுதி செய்வதற்கும், இறந்தவர்களின் அடையாளங்களை பயன்படுத்தி எந்த தவறான வேலைகளும் செய்யப்படாமல் இருப்பதற்கும் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட அரசாங்கத்தால் நடத்தப்பட்ட தூய்மைப்படுத்தும் இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை உள்ளது.

தற்போது ​3300 க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளது. இறந்து போனவர்களின் ஆதார் எண்களை செயலிழக்க வைக்கும் இந்த நாடு தழுவிய முயிற்சியின் ஒரு பகுதியாக, வருகிற டிசம்பர் 2025 க்குள் மேலும் பல இறந்தபோன நபர்களின் ஆதார் எண்களை செயலிழக்க வைக்க வேண்டும் என்கிற இலக்கையும் யுஐடிஏஐ நிர்ணயித்துள்ளது.

இந்த செயல்பாட்டில் உள்ள மிகப்பெரிய சவால் என்னவென்றால், இறப்பு பதிவுக்கு ஆதார் கட்டாயமில்லை, இதன் விளைவாக தரவுகளில் குறிப்பிடத்தக்க இடைவெளிகள் உள்ளன என்று யுஐடிஏஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். பல சந்தர்ப்பங்களில், இறப்பு பதிவுகளில் இருந்து ஆதார் எண்கள் காணாமல் போகின்றன அல்லது தவறாகவோ அல்லது முழுமையடையாமல் உள்ளிடப்படுகின்றன. எனவே மைஆதார் (MyAadhaar) போர்ட்டலில் இறப்புகளை புகாரளிக்கும்படியும் குடிமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From Election Commission Aadhaar OTP Mandatory For Voter ID Card Changes Via Online
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X