Home
News

புது ரூல்ஸ்.. AADHAAR கார்டு.. SIM கார்டு.. இனிமே Jio, Airtel-க்கு இதை பண்ணணும்.. இல்லனா சிரமம்.. என்ன மாறுது?

டிஓடி (DoT) என்று சுருக்கமாக அழைக்கப்படும் தொலைத்தொடர்புத் துறை (Department of Telecommunications) ஆனது சிம் கார்டு விதிகளில் (SIM Card Rules) அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது. இனிமேல் ஜியோ, ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் இதை செய்யாமல், சிம் கார்டு சேவையை வழங்க முடியாது. ஏற்கனவே, இந்திய குடியுரிமையை நிரூபிக்க ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு, ரேஷன் கார்டு செல்லுபடியாகாது என்று அதிரடியாக விதிகள் வந்தது. இப்போது, இந்த புது விதிகள் வந்துள்ளன.

இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவிவரும் பதற்றமான சூழல் காரணமாக மத்திய அரசு பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே, இந்திய குடியுரிமையை நிரூபிக்க என்னென்ன ஆவணங்கள் செல்லுபடியாகும் என்பதை காவல்துறை மூலம் தெரிவித்திருந்தது. இப்போது, தொலைத்தொடர்புத் துறை மூலம் சிம் கார்டு விதிகளில் அதிரடி மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

புது ரூல்ஸ்.. AADHAAR கார்டு.. SIM கார்டு.. இனி Jio, Airtel-க்கு இது?

இந்த விதிகளுக்கு காரணம் என்ன? இந்தியாவின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio) மற்றும் பார்தி ஏர்டெல் (Bharti Airtel) ஆகியவை புதிய சிம் கார்டு கோரும் கஸ்டமர்களுக்கு ஹோம் டெலிவரி (Home Delivery) செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளன. இதில் ஏர்டெல் நிறுவனம் ரூ.49 கட்டணத்துடன் சிம் கார்டு டெலிவரி செய்ய தொடங்கியது.

இந்த சிம் கார்டு வழங்கும் முறை ஆன்லைன் வெரிபிகேஷன் அடிப்படையில் கொடுக்கப்படுவதால், இப்போதைய சூழலில் பாதுகாப்பு கவலைகளை எழுப்பி இருக்கிறது. ஏனென்றால், இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவிவரும் போர் சூழல் காரணமாக, சிம் கார்டுகளை ஹோம் டெலிவரி செய்வதை நிறுத்துமாறு தொலைத்தொடர்புத் துறை டெலிகாம் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால், ரிலையன்ஸ் ஜியோ அதனுடைய சிம் கார்டு ஹோம் டெலிவரி சேவையை நிறுத்தி வைத்துள்ளது. அதேபோல ஏர்டெல் நிறுவனமும் சிம் கார்டுகளை அனுப்பவதை நிறுத்தி இருக்கிறது. புதிய சிம் கார்டுகள் வழங்க வேண்டுமானால், ஆதார் கார்டு பேஸ்டு கேஒய்சி (Aadhaar Card Based KYC) செய்யவும், அதுவும் வாங்கும் கஸ்டமர்களிடம் நேரடியாக செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆகவே, இப்போதைக்கு சிம் கார்டு வாங்க வேண்டுமானால், நேரடியாக ஆதார் கார்டு கேஒய்சி செய்யப்பட்ட பிறகே வழங்கப்பட இருக்கிறது. இருப்பினும், இது போர் பதற்றம் குறைந்த பிறகு இயல்பு நிலைக்கு திரும்ப வாய்ப்புள்ளது. பொதுவாக சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் கார்டு கேஒய்சி கட்டாயமாக இருக்கிறது. ஆனால், ஆன்லைன் ஓடிபி போன்றவற்றின் மூலமும் இதை செய்யலாம்.

இதனடிப்படையிலேயே ஹோம் டெலிவரி திட்டத்தை ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் கையில் எடுத்தன. இதில் ஏர்டெல் சிம் கார்டுகளை வழங்கவே தொடங்கியது. ஆனால், இனிமேல் அப்படி செய்வதை நிறுத்த தொலைத்தொடர்பு துறை உத்தரவிட்டுள்ளது. முன்னதாக, இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டது.

இதனால், இந்திய குடியுரிமை ஆவணங்களாக ஆதார் கார்டு, பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு போன்றவை காண்பிக்கப்பட்டன. ஆனால், மத்திய அரசின் உத்தரவின்படி அவை ஏற்றுக் கொள்ளப்படவில்லை. ஓட்டர் ஐடி (Voter ID) அல்லது பாஸ்போர்ட் (Passport) ஆகிய ஆவணங்கள் மட்டுமே இந்திய குடியுரிமைக்கான ஆவணங்களாக எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இப்படி பல்வேறு மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. புதிய சிம் கார்டு வாங்க திட்டமிடும் கஸ்டமர்கள் நேரடியாக ஸ்டோர்களுக்கு சென்று ஆதார் கார்டு வெரிபிகேஷனை முடித்துவிட்டு வாங்கி கொள்ளுங்கள். ஏற்கனவே, ஆன்லைன் மூலம் சிம் கார்டு வாங்கி இருந்தால், கவலைப்பட வேண்டியது இல்லை. அவர்களுக்கு எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From DoT For SIM Card Delivery Aadhaar Based Self KYC Mandatory Check SIM Card Rules
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X