Home
News

புது UPI ரூல்ஸ்.. டிச.31 முதல் அமல்.. 500 ரூபாயோ.. 1000 ரூபாயோ.. பேங்க் பணம் அனுப்புவதில் முக்கிய மாற்றங்கள்!

டிசம்பர் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. ஆனால், டிசம்பர் 31ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் விதிகள் நேரடியாக பேங்க் பணம் அனுப்புதல் முதல் பான் கார்டு செயலிழப்பு வரையில் சம்பந்தப்பட்டுள்ளது. ஆகவே, பேங்க் கஸ்டமர்கள் இதை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

பேங்க் அக்கவுண்ட் இருந்தால் மட்டுமே போன்பே (PhonePe), ஜிபே (Gpay), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ (UPI) ஆப்களில் பணப்பரிவர்த்தனையை செய்து கொள்ள முடிகிறது. இந்த ஆப்களில் ஆட்டோபே (Autopay) தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அதாவது, மாதம் ரூ.1,000 அல்லது ரூ.5,000 என்று எஸ்ஐபி (SIP) செலுத்தல் முதல் ஓடிடி சந்தா செலுத்தல் வரையில் ஆட்டோபே இருக்கிறது.

புது UPI ரூல்ஸ்.. டிச.31 முதல் அமல்.. 500 ரூபாயோ.. 1000 ரூபாயோ!

இருப்பினும், இந்த ஆட்டோபே விருப்பத்தை எந்த யுபிஐ ஆப்பில் பேங்க் கஸ்டமர்கள் பயன்படுத்துகிறார்களோ அந்த ஆப்பில் மட்டுமே பணம் மாதாந்திரம் டெபிட் செய்யப்படுவதை பார்க்க முடியும். ஆனால், டிசம்பர் 31ஆம் தேதி முதல் புதிய ஆட்டோபே விதிகள் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகள் மூலமாக ஆட்டோபே மேன்டேட்ஸ் (UPI Autopay Mandates) ஒரே ஆப் மூலமாக காண்பிக்கப்பட இருக்கிறது.

அதாவது, எஸ்ஐபி செலுத்தல், ஓடிடி சந்தா செலுத்தல் அல்லது ஈஎம்ஐ செலுத்தல் என்று எத்தனை ஆட்டோபே மேன்டேட்ஸ் இருந்தாலும் சரி, அது பல ஆப்களில் ஓப்பன் செய்யப்பட்டு இருந்தாலும் சரி, டிசம்பர் 31ஆம் தேதியில் இருந்து ஒரே ஆப் மூலமாக அதை பார்த்து கொள்ளலாம். ஜிபோ, போன்பே, பேடிஎம் அல்லது பீம் என்று எந்த ஆப்களுக்கும் இது பொருந்துகிறது.

ஆகவே, பேங்க் பணம் டெபிட் செய்யப்படுவதை எந்த யுபிஐ ஆப்களில் இருந்தும் செக் செய்துகொள்ள முடியும். இது பேங்க் கஸ்டமர்களுக்கு முக்கியமான விதிகளாக இருக்கிறது. அதே நேரத்தில் பேங்க் பரிவர்த்தனையை செய்ய முடியாமல் போகும்படி மற்றொரு விதிகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக இருக்கிறது. அதாவது, பான் ஆதார் இணைப்பு அந்த தேதியில் முடிகிறது.

பான் கார்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருந்தால் உடனடியாக அதை டிசம்பர் 31ஆம் தேதிக்குள் செய்து முடித்துவிடுங்கள். அப்படி இல்லையென்றால், பான் கார்டு மூலமாக வழங்கப்படும் சேவைகள் கிடைக்காமல் போகலாம். ஏனென்றால், ஆதார் எண்ணுடன் இணைக்கப்படாமல் இருக்கும் பான் கார்டுகள் செயலிழப்பு செய்யப்பட இருக்கின்றன.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் விதிகளை பொறுத்தவரையில், மத்திய அரசு ஊழியர்கள் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் (UPS) சேருவதற்கான அவகாசம் நவம்பர் 30ஆம் தேதியில் முடிகிறது. தேசிய ஓய்வூதிய அமைப்பிலிருந்து (NPS) மாற விரும்புவோர், சிஆர்ஏ (CRA) போர்டல் வழியாக ஆன்லைனில் மாற்றத்தை முடிக்க வேண்டும்.

அப்படி இல்லையென்கால், காலக்கெடுவிற்கு முன்னதாகவே நோடல் அதிகாரிகளிடம் தேவையான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியதாரர்கள் தடையின்றி ஓய்வூதியம் பெறுவதை உறுதிசெய்ய நவம்பர் 30 ஆம் தேதிக்குள் தங்களது வருடாந்திர வாழ்க்கை சான்றிதழை (Annual Life Certificate) சமர்ப்பிக்க வேண்டும். ஜீவன் பிரமான் டிஜிட்டல் சிஸ்டம் மூலமாக செய்யலாம்.

இல்லையென்றால், பேங்குகள் மற்றும் தபால் நிலையங்கள் மூலமாகவும் சமர்ப்பிக்கலாம். இந்த சான்றிதழை சமர்ப்பிக்க தவறினால், வெரிபிகேஷன் முடியும் வரையில் ஓய்வூதியம் தற்காலிகமாக நிறுத்தப்படும். அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கான டிடிஎஸ் (TDS) விவரங்களை நவம்பர் 30 ஆம் தேதிக்குள் வரி செலுத்துவோர் தாக்கல் செய்ய வேண்டும்.

இதில் 194-IA, 194-IB, 194M மற்றும் 194S பிரிவுகளின் கீழ் அக்டோபரில் செய்யப்பட்ட விலக்குகளுக்கான டிடிஎஸ் (TDS) அறிக்கைகளும் அடங்கும். பிரிவு 92E இன் கீழ் பரிமாற்ற-விலை நிர்ணய கடமைகளை கொண்ட நிறுவனங்களும் இந்த தேதிக்குள் தங்களது அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும். இந்த காலக்கெடுவை தவறவிட்டால் அபராதங்கள் விதிக்கப்படலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules From December 31 2025 UPI Autopay Mandates PAN Card Deactivation Without Aadhaar Card Link
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X