புது ரூல்ஸ்.. டிச.1 முதல் அமல்.. இனி வங்கி பணம் அனுப்புறது குதிரைக்கொம்பு.. ஓடிபி படாதபாடு.. என்ன மாற்றங்கள்!
டிராய் (TRAI) என்று அழைக்கப்படும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (Telecom Regulatory Authority of India) ஆனது பேங்க் ஓடிபி (Bank OTP) தொடர்பான புதிய விதிகளை 2024ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டு வருகிறது. இந்த விதிகளால் பேங்க் மூலம் பணம் அனுப்புவதில் மாற்றம் வரப்போகிறது. விவரங்கள் இதோ.
கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை ஆப்கள் அல்லாமல் பேங்க் மூலம் பணம் பரிவர்த்தனைகள் (Bank Transactions) செய்யும்போது ஓடிபி (OTP) கட்டாயம் கேட்கப்படும். இந்த ஓடிபி இருந்தால் மட்டுமே பரிவர்த்தனையை எளிதாக முடிக்க முடியும். ஆனால், டிசம்பர் 1ஆம் தேதியில் (New Rules From December 1) அமலுக்கு வர இருக்கும் புதிய ஓடிபி விதிகள் அதை முற்றிலுமாக மாற்ற இருக்கின்றன.

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமானது, எஸ்எம்எஸ் விதிகளை (SMS Rules) மாற்றி இருக்கிறது. இந்த எஸ்எம்எஸ் விதிகளால் பேங்குகள், ஈ-காமர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கஸ்டமர்களுக்கு அனுப்பப்படும் ஓடிபிகளில் நேரடியாக மாற்றங்கள் வர இருக்கின்றன. சொல்லப்போனால், இந்த விதிகள் நவம்பர் 1ஆம் தேதியிலே அமலுக்கு வர இருந்தது.
ஆனால், இப்போது டிசம்பர் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஏனென்றால், மொபைல் மூலம் ஓடிபி அனுப்பி சேவைகளை கொடுக்கும் டெலிகாம்மார்கெட்டர் நிறுவனங்கள், இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் அவகாசம் கேட்டன. இதனால், தேதி மாற்றப்பட்டது. ஆகவே, டிசம்பர் மாதத்தில் இருந்து பேங்க் ஓடிபி வருவதில் மாற்றம் இருக்கும்.
இந்த விதிகள் பேங்குகள், ஈ-காமர்ஸ் மற்றும் நிதி நிறுவனங்கள் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த எஸ்எம்எஸ்களுக்கும் வருகிறது. அதாவது, டெலிகாம் நிறுவனங்கள் மூலம் கஸ்டமர்களுக்கு அனுப்பப்படும் எஸ்எம்எஸ்களில், அனுப்புநர் விவரங்களில் தெளிவின்மை அல்லது அனுப்புநரின் அடையாளம் இல்லாமல் இருந்தால், அவை தடுக்கப்பட இருக்கிறது.
இதனால் பேங்க் கஸ்டமர்களுக்கு ஆன்லைன் பரிவர்த்தனைகளின்போது ஓடிபி வருவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், டெலிகாம்மார்கெட்டர் நிறுவனங்கள் கால அவகாசம் கேட்டிருக்கின்றன. இதனாலேயே எஸ்எம்எஸ் தடுக்கும் விதிகள் டிசம்பர் 1ஆம் தேதிக்கு ஒத்தி வைக்ப்பட்டிருக்கிறது. ஆனால், நவம்பர் 1 முதல் லாகர் மோட் (Logger Mode) அமலுக்கு வந்துவிட்டது.
அதாவது, புதிய விதிகளை பின்பற்றாமல் எஸ்எம்எஸ்கள் அனுப்பப்பட்டாலும், அவை கஸ்டமர்களுக்கு தடையில்லாமல் சென்று சேரும். ஆனால், அதுதொடர்பான விவரங்களை ஜியோ (Jio), ஏர்டெல் (Airtel) மற்றும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் டிராயிடம் அனுப்ப ஒப்புக்கொண்டுள்ளன. ஆகவே, டிசம்பர் 1ம் தேதியில் முழுமையாக அமலாகும்.
முன்னதாக, நவம்பர் 1ஆம் தேதி முதல் பல்வேறு விதிகள் அமலுக்கு வந்தன. இதில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியாவின் - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) விதிகளும் முந்தைய விதிகளை போலவே பேங்க் கஸ்டமர்களிடையே கவனம் பெற்றிருக்கிறது. அதாவது, உள்நாட்டு பணப் பரிமாற்றத்தில் (Domestic Money Transfer) இந்த விதிகள் அமலுக்கு வந்து இருக்கின்றன.
பேங்குகள் மூலம் கஸ்டமர்கள் பணம் அனுப்பினால், அவர்களுக்கு ஓடிபி கேட்கப்படும். அதன் பிறகே அந்த பரிவர்த்தனை முடிக்கப்படும். ஆனால், இனிமேல் கூடுதல் காரணி அங்கீகாரம் - ஏஎப்ஏ (Additional Factor of Authentication) சேர்க்கப்பட இருக்கிறது. ஆகவே, ஓடிபி மட்டுமல்லாமல், கூடுதலாக ஃபிங்கர்பிரிண்ட், ஆதார் ஆதன்டிகேஷன் போன்றவை வர வாய்ப்புள்ளது.
இப்படி ஏகப்பட்ட விதிகள் இந்த மாதத்திலும் அடுத்த மாதத்திலும் அமலுக்கு வருகின்றன. இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளதால், அவற்றை பாதுகாப்பாக செய்வதறாக இந்திய அரசு இதுபோன்ற விதிகளை அமலுக்கு கொண்டு வருகின்றன. ஆகவே, பேங்க் கஸ்டமர்கள் இதுபோன்ற விதிகளுக்கு உட்பட வேண்டி இருக்கும்.


Click it and Unblock the Notifications