ஆதார் முதல் ரேஷன் கார்டு வரை.. அமலுக்கு வரும் புதிய விதிமுறைகள்.. மறக்காம நோட் பண்ணிக்கோங்க மக்களே..
2025-ம் ஆண்டின் கடைசி மாதமான டிசம்பரில் (இன்று முதல்) நாடு முழுவதும் பல முக்கிய விதிமுறைகளில் மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அதன்படி ஆதார், பான் கார்டு மற்றும் ரேஷன் கார்டு ஆகியவற்றில் முக்கிய மாற்றங்கள் வரவுள்ள நிலையில் அது குறித்து அறிந்து கொள்ளலாம்.
பான் கார்டு
பான்கார்டு மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதுவும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் உங்கள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பது கட்டாயம் ஆகும். குறிப்பாக இந்த காலக்கெடுவிற்குள் இணைக்கவிட்டால், ஜனவரி 1 2026, முதல் உங்கள் பான் எண் செயலிழந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

அதுவும் பான் எண் செயலிழந்தால் சம்பளக் கிரெடிட், எஸ்பிஐயில் முதலீடு, வரி செலுத்துதல் போன்ற பல நிதி நடவடிக்கைகளைச் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
ஆதார் அப்டேட்
டிசம்பர் மாதத்தில் ஆதார் அட்டையில் பல மாற்றங்கள் வர உள்ளன. அதாவது ஆதார் அட்டை புதிய வடிவில், புகைப்படம் மற்றும் ஞசு குறியீட்டுடன் மட்டும் வரலாம் எனவும், முகவரி விவரங்கள் நீக்கப்படலாம் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஆதார் ஆதார் அட்டை 'புகைப்படம் + QR கோடு' வடிவத்தில் மட்டுமே வழங்கும் திட்டத்தை UIDAI பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஆதார் அட்டையில் வரும் இந்த மாற்றம் குறித்த தகவலை இந்திய தனித்துவ அடையாள அமைப்பின் தலைமை செயல் அதிகாரியான புவனேஷ் குமார் வெளியிட்டு இருக்கிறார். பொதுவாக நாம் சிம் கார்டு வாங்கு போதும். ஹோட்டலில் சென்று தங்கும் போதும், போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் போதும் நமது ஆதார் அட்டையை அங்கே கொடுத்துச் சரிபார்ப்பு செய்து கொள்வது கட்டாயமாக இருக்கிறது.
இவ்வாறு நமது ஆதார் அட்டை நகல்களைச் சமர்ப்பிக்கும் போது சில மோசடியாளர்கள் கைகளில் அவை சிக்கி தவறான நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. எனவே தான் டிசம்பர் மாதத்திலிருந்து ஆதார் அட்டை "புகைப்படம் + QR கோடு" வடிவத்தில் மட்டுமே வழங்கும் திட்டத்தை UIDAI பரிசீலித்து வருகிறது. எனவே ஆதாரை அச்சிட்டுக் கொடுப்பது முற்றிலும் தவறு. அட்டையில் படம், QR கோடு கோடு மட்டும் இருந்தால் போதும் என புவனேஷ் குமார் வலியுறுத்தினார்.

ரேஷன் கார்டு சரிபார்ப்பு
ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவருக்கும் ஆதார் மறு சரிபார்ப்பை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. அதன்படி ரேஷன் கார்டு பயனர்களுக்கும் கட்டாய ஆதார் சரிபார்ப்புக்கான காலக்கெடு டிசம்பர் 31 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தேதிக்குள் ரேஷன் கார்டில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்கள் கைரேகைகளைப் பதிவு செய்து e-KYC-ஐ முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுவும் மாவட்டங்கள் முழுவதும் நகல் அல்லது தகுதியற்ற ரேஷன் கார்டுகளை கண்டறிந்து, அவைகளை அகற்றுவதற்காக இன்று (டிசம்பர் 1) முதல் தானியங்கி தணிக்கையைத் தொடங்கும். ஆதார் அங்கீகாரம் மூலம், முகவரி தரவு மற்றும் வீட்டு விவரங்களைப் பயன்படுத்தி ஒன்றுக்கு மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வைத்திருப்பது அல்லது பல இடங்களில் சலுகைகள் பெறும் ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








