Home
News

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. 3 அதிரடி மாற்றம் வருது.. எதுக்கு விலை மாறுது.. இனி லேப்டாப் மட்டும் இல்லங்க!

2025ஆம் ஆண்டில் எதோட விலை ஏறப்போகுதோ, எதோட விலை குறையப்போகுதோனு இப்பவே பலருக்கு தோன்ற ஆரம்பித்திருக்கும். யுபிஐ லிமிட் (UPI Limit Rules), டெலிகாம் விதிகள் (Telecom Rules), ஆதார் கார்டு விதிகள் (Aadhaar Card Rule) என்று பல வதிகள் 2025ஆம் ஆண்டில் வந்தாலும், இப்போது பார்க்க போகும் விதிகள் நேரடியாக மக்களின் கல்லாப்பெட்டியில் கை வைக்க இருக்கிறது. 3 மாதங்கள் காலக்கெடு கொடுக்கப்பட்ட இந்த விதிகளால் என்னென்ன மாறப்போகிறது? எவற்றுக்கு விலை மாற்றம் இருக்கும்?

மத்திய அரசின் இறக்குமதி மேலாண்மை அமைப்பு விதிகள் (Import Management System Rules) வரும் 2025ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்த விதிகளால் முதலில் லேப்டாப் (Laptops), டேப்லெட் (Tablets) மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர் (Personal Computers) ஆகியவற்றின் இறக்குமதி லிமிட் குறைக்கப்படவும், கட்டுப்படுத்தப்படவும் இருக்கிறது.

புது ரூல்ஸ்.. ஜன.1 முதல் அமல்.. 3 அதிரடி மாற்றம் வருது.. எதுக்கு விலை?

இந்த ஐடி ஹாட்ர்வேட் தயாரிப்புகளால் (IT Hardware Products) மிகப்பெரும் வியாபாரம் நடக்கிறது. பேங்க் சேவைகள் தொடங்கி டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவைகள் வரையில் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் இல்லாமல் வழங்குவதென்பது இப்போது இயலாத காரியம். இவை 2025ஆம் ஆண்டுக்கு மேல் மொத்தமாக மாற வாய்ப்புள்ளது. இந்த விதிகள் செப்டம்பர் 30ஆம் தேதியிலேயே வர இருந்தது.

ஆனால், லேப்டாப், டேப்லெட், பர்சனல் கம்ப்யூட்டர் இறக்குமதியாளர்கள் கால அவகாசம் கேட்டதால், ஜனவரி 1ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. ஆகவே, அந்த தேதிக்கு பிறகு இறக்குமதியாளர்கள் புதிய விதிகளின் அடிப்படையில் இறக்குமதிக்கான அனுமதிகளை அரசிடம் பெற வேண்டி இருக்கும். இல்லையென்றால், அனுமதி கிடைக்காது. இந்த 2025ஆம் ஆண்டு புது விதிகள் (New Rules From 2025) மூலம் 5 சதவீத லிமிட்டை குறைக்கும்.

அதாவது, சீனா, ஹாங் காங், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படும் லேப்டாப், டேப்லெட், பர்சனல் கம்ப்யூட்டர்களின் லிமிட் ஆண்டுக்கு 5 சதவீதம் குறைக்கப்படும். அதே நேரத்தில் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஐடி ஹாட்ர்வேட் தயாரிப்புகள் அதிகரிக்கப்படும். இதனால் பொருட்களின் விலையில் மாற்றம் இருக்குமா?

சீனா, ஹாங் காங், தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து லேப்டாப், டேப்லெட், பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் அதுதொடர்பான ஹாட்வேர் பொருட்கள் அடிமட்ட விலைக்கு வாங்கப்படுகின்றன. அதோடு இந்தியாவிலும் வரிகள் மற்றும் தளர்வுகள் காரணமாக அவை மலிவாக கிடைக்கின்றன. இதை இறக்குமதி மேலாண்மை அமைப்பு விதிகள் மாற்ற அதிக வாய்ப்புள்ளது.

இந்த விதிகளால் லேப்டாப், டேப்லெட், பர்சனல் கம்ப்யூட்டர் ஆகியவற்றின் விலை ஏறுமா? அல்லது குறையுமா? என்பது 2025ஆம் ஆண்டு ஜனவரியில் தெரிந்துவிட போகிறது. ஆனால், விலையில் மாற்றம் ஏற்படுவது உறுதியாகிவிட்டது. ஆகவே, வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதை மத்திய அரசு நேரடியாக கட்டுப்படுத்த இருப்பது தெரிகிறது.

முன்னதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா - ஆர்பிஐ (Reserve Bank of India - RBI) ஆனது 2025ஆம் ஆண்டில் இருந்து பேங்க் சேவைகளுக்கு வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கிளவுட் சேவையை கட்டுப்படுத்தவும், உள்நாட்டு கிளவுட் சேவையை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்க இருப்பதை தெரிவித்தது. இது கூகுள், மைக்ரோசாப்ட் கிளவுட் சேவையை மாற்ற கூடியது.

இதன் மூலம் பேங்க் சேவையில் இருக்கும் கஸ்டமர்களின் தனிப்பட்ட விவரங்கள் உள்நாட்டிலேயே பாதுகாக்கப்படும். அதே நேரத்தில் கிளவுட் சேவைக்கான செலவினங்களும் கட்டுப்படுத்தப்படும். இப்படி பல்வேறு விதிகள் வரும் ஜனவரி 1ஆம் தேதி முதல் வர இருக்கின்றன. இந்த விதிகளால் டிஜிட்டல் இந்தியாவில் மேலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. பொறுத்து இருந்து பார்ப்போம்.

Best Mobiles in India

English summary
New Rules From January 1 2025 For Laptops PC Tablets Imports 5 Percent Annual Imports Reduction
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X