புது YouTube ரூல்ஸ்.. ஜூலை 15 முதல் அமல்.. யாருடைய சேனல்கள் எல்லாம் காலி ஆகும்? யாருடையது தப்பிக்கும்?
2025 ஜூலை 15 ஆம் தேதி முதல் யூட்யூப் சேவையில் புதிய பணமாக்குதல் கொள்கை (YouTube New Monetization Policy) அமலுக்கு வருகிறது. யூட்யூப் வழியாக பணம் சம்பாதிக்க விரும்புவோர் இனிமேல் இந்த புதிய விதிகளை அறிந்திருக்க வேண்டும். பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
யூட்யூப் அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் ஆனது ஒய்பிபி (YPP) என்று சுருக்கமாக அழைக்கப்டும் யூடியூப் பார்ட்னர் புரோகிராம் (YouTube Partner Program) என்பதில் செயல்படுத்தும் அதே நேரத்தில், யூட்யூப் மானிடைசேஷனுக்கான மையக்கரு (Core) அப்படியே இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எதெல்லாம் மாறுகிறது? எதெல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ஜூலை 15 முதல் யூட்யூப்பில் எதெல்லாம் மாறுகிறது? ஜூலை 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவிருக்கும் புதிய பணமாக்குதல் கொள்கை ஆனது நம்பகத்தன்மையற்ற கன்டென்ட் களை சிறப்பாக கண்டறிவதை நோக்கமாக கொண்டவை என்றும், ரியாக்ஷன் வீடியோக்கள் அல்லது கிளிப் தொகுப்புகளை ஒடுக்குவதை நோக்கமாக கொண்டவை அல்ல என்பதை யூட்யூப் நிறுவனம் தெளிவுபடுத்தி உள்ளது
யூட்யூப் நிறுவனத்தின் கிரியேட்டர் இணைப்பாளரான ரினீ ரிச்சி, ஒரு விளக்க வீடியோவில் இதுகுறித்த குழப்பத்தை தெளிவுபடுத்தினார். யூட்யூப் பார்ட்னர் புரோகிராமின் பணமாக்குதல் கொள்கைகளுக்கான ஜூலை 2025 அப்டேட் பற்றிய போஸ்ட்களை நீங்கள் பார்த்தால், அது உங்கள் ரியாக்ஷன் அல்லது கிளிப்புகள் அல்லது பிற வகை சேனலை பாதிக்கும் என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த் அப்டேட் ஆனது கன்டென்ட் பெருமளவில் தயாரிக்கப்படும்போது அல்லது அது மீண்டும் மீண்டும் செய்யப்படும்போது, அவைகளை சிறப்பாக அடையாளம் காண உதவும் வகையில் யூட்யூப்பின் நீண்டகால ஒய்பிபி கொள்கைகளுக்கான ஒரு சிறிய அப்டேட் தான் என்றும் விளக்கம் அளித்து உள்ளார்.
இந்த அப்டேட்டால் குறிவைக்கப்பட்ட கன்டென்ட் டைப் ஆனது - பெருமளவில் தயாரிக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் வரும் கன்டென்ட் ஆகும். இது நிறுவனத்தின் யூட்யூப் ஒய்பிபி-யின் கீழ் பணமாக்குதலுக்கு ஏற்கனவே தகுதியற்றது என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார். இதன் பொருள் - ரியாக்ஷன் அல்லது தொகுப்புகளை போஸ்ட் செய்யும் சேனல்கள் ஆனது ஏற்கனவே உள்ள கன்டென்ட்டிற்கு அவற்றின் சொந்த அர்த்தமுள்ள மதிப்பை சேர்க்க வேண்டும்.
கூடுதலாக, பயிற்சிகள் மற்றும் வீடியோ பதிவுகளை உருவாக்குபவர்கள் ஏற்கனவே உள்ள கிளிப்புகள் மற்றும் டெக்ஸ்ட் டூ ஸ்பீச் விவரிப்புகளை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். எல்லாவற்றை விட முக்கியமாக இந்த புதிய விதிகளின் கீழ் - ஏஐ மூலம் உருவாக்கிய வீடியோக்களை நம்பியிருப்பவர்கள் தங்கள் பணமாக்குதல் சலுகைகளை இழக்க நேரிடும்.
யூட்யூபில் எதெல்லாம் மாறாமல் அப்படியே இருக்கும்? யூட்யூப்பில் உள்ள முக்கிய தகுதி வரம்புகளில் எந்த மாற்றமும் இருக்காது. பணமாக்கப்படுவதற்கு, ஒரு சேனலுக்கு 1,000 சந்தாதாரர்கள் மற்றும் கடந்த 12 மாதங்களில் 4,000 மணிநேர வாட்ச் ஹவர்ஸ் அல்லது கடந்த 90 நாட்களில் 10 மில்லியன் ஷார்ட்ஸ் வாட்ச் ஹவர்ஸ் ஆகிய வரம்புகள் அப்படியே இருக்கும்
ரியாக்ஷன், தொகுப்பு மற்றும் கிளிப் சேனல்கள் முற்றிலும் தடைசெய்யப்படவில்லை, ஆனால் கிரியேட்டர்கள் இனி சோர்ஸ்களிலிருந்து கிளிப்களை தேர்ந்தெடுத்து அவற்றை மீண்டும் பயன்படுத்துவதையோ அல்லது ஏஐ வீடியோக்களையோ நம்பியிருக்க முடியாது. நீங்கள் உங்கள் வீடியோக்களில் சொந்தமாக ஏதாவது சேர்க்க வேண்டும்.
எக்கசக்கமான பேஸ்லெஸ் வீடியோ, ஏஐ அடிப்படையிலான சேனல்களின் எழுச்சிக்குப் பிறகு யூட்யூப்பின் இந்த புதிய விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஜூலை 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே, புதிய மாற்றங்கள் உண்மையான, நம்பகமான மற்றும் ஆர்வத்தால் இயக்கப்படும் படைப்பாளிகளின் சகாப்தத்தை மீண்டும் கொண்டு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








