Home
News

புது விதிகள்.. ஜூன் 25 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட்ல ரூ.100-க்கு கம்மியா பணம்.. அதுக்கு மேல இருக்கனும்!

பேங்க் கஸ்டமர்கள் (Bank Customers) ரூ.100-க்கும் கீழ் பரிவர்த்தனை செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். யுபிஐ ஆப்கள் வந்துவிட்டதால் சில்லறைகளை எடுத்து செல்வது குறைந்துவிட்டது. ரூ.10 கொடுத்து டீ வாங்கினாலும் அதற்கும் கூகுள் பே, போன்பே போன்ற யுபிஐ ஆப்களையே பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு (UPI Transactions) ஜூன் 25ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகிறது. இந்த விதிகள் என்ன சொல்கிறது? பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் பொருந்துமா? உள்ளிட்ட விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இப்போதெல்லாம், பேங்க் கஸ்டமர்கள் தங்களது பெரும்பாலான பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற யுபிஐ ஆப்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அந்தந்த பேங்க் ஆப்கள் இருந்தாலும், சில்லறை பரிவர்த்தனைகளுக்கு மேற்கூறிய ஆப்கள் மட்டுமே தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. டீ கடைகள், பொட்டிக் கடைகளில் கூட யுபிஐ மூலம் பணம் பரிமாற்றம் செய்யலாம்.

புது விதிகள்.. ஜூன் 25 முதல் அமல்.. பேங்க்ல ரூ.100-க்கு கம்மியா பணம்?

இதனால், 10 ரூபாய்க்கு செலவு செய்தாலும் யுபிஐ ஆப்களை பயன்படுத்துகின்றனர். இப்படிப்பட்ட பரிவர்த்தனைகளில் பணம் அனுப்பட்டதா அல்லது பெறப்பட்டதா என்பதை யுபிஐ ஆப் மூலமே தெரிந்து கொள்ளலாம் என்றாலும், இன்றளவும் பலர் பேங்க் தரப்பில் இருந்து அனுப்பி வைக்கப்படும் எஸ்எம்எஸ்களை பார்த்தே அதை உறுதி செய்து வருகின்றனர்.

இப்படி பேங்க்கில் இருந்து வரும் எஸ்எம்எஸ் மூலம் பரிவர்த்தனைகளை பார்த்து கொள்ளும் கஸ்டமர்களுக்குத்தான் இந்த புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. அதாவது, பேங்க் அக்கவுண்ட்டில் இருந்து யுபிஐ ஆப்கள் மூலம் ரூ.100-க்கும் கீழ் பணம் அனுப்பினாலோ அல்லது ரூ.500-க்கும் கீழ் பணம் பெற்றாலோ எஸ்எம்எஸ் மூலம் பரிவர்த்தனை விவரங்கள் வழங்கப்படாது. ஜூன் 25ஆம் தேதிக்கு பிறகு இது அமலாகிறது.

இந்த எந்த பேங்க் கஸ்டமர்களுக்கு பொருந்தும்? இந்த புதிய விதிகளானது, எச்டிஎப்சி பேங்க் கஸ்டமர்களுக்கு அமலுக்கு வருகிறது. ஆகவே, அவர்கள் ஜூன் 25ஆம் தேதிக்கு பிறகு ரூ.100-க்கும் கீழ் பணம் அனுப்பினாலோ அல்லது ரூ.500-க்கும் கீழ் பணம் பெற்றாலோ எஸ்எம்எஸ் வரவில்லை என்று பதற்றமடைய வேண்டாம். உங்களது யுபிஐ ஆப் மூலமே சரிபார்த்து கொள்ளுங்கள்.

புது விதிகள்.. ஜூன் 25 முதல் அமல்.. பேங்க்ல ரூ.100-க்கு கம்மியா பணம்?

அதேபோல ரூ.100-க்கும் மேல் அனுப்பும் தொகைக்கும், ரூ.500-க்கும் மேல் பெறும் தொகைக்கும் வழக்கமாக எச்டிஎப்சி பேங்க் தரப்பில் இருந்து எஸ்எம்எஸ்கள் அனுப்பி வைக்கப்படும். ஒருவேளை உங்களுக்கு ரூ.100-க்கும் கீழான பரிவர்த்தனைகளுக்கும் பேங்க் தரத்தில் இருந்து தகவல் பெற வேண்டுமானால், ஈமெயில் மூலம் அதை தெரிந்துகொள்ளலாம். அதற்கு பின்வருவனவற்றை செய்யுங்கள்.

ஈமெயில் மூலம் பரிவர்த்தனைகளை தெரிந்து கொள்ள வேண்டுமானால், ஆன்லைன் மூலம் அதற்கு பதிவு செய்யதிருக்க வேண்டும். இப்படி பதிவு செய்திருந்தால், அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் ஈமெயில் மூலம் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதற்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. அதேபோல எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படாது.

ஈமெயில் ஸ்டேட்மெண்ட் சேவையை ரிஜிஸ்டர் செய்வது எப்படி? ஈமெயில் மூலம் ஸ்டேட்மெண்ட் சேவையை பெற முதலில் உங்களிடம் எச்டிஎப்சி பேங்கின் நெட்பேங்கிங் ஐடி (NetBanking ID) மற்றும் பாஸ்வேர்ட் (Password) இருக்க வேண்டும். ஆகவே, அதை எடுத்து வைத்துக்கொண்டு, எச்டிஎப்சி பேங்க்கின் அதிகார்ப்பூர்வ வெப்சைட்டுக்கு செல்லுங்கள்.

இப்போது, ஹோம் பக்கத்தில் தோன்றும் நெட்பேங்கிங் (NetBanking) டேப்பை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதை ஓப்பன் செய்து, நெட்பேங்கிங் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் ஆகியவற்றை கொடுத்து ஓப்பன் செய்து, அக்கவுண்ட் டேப்பை (Accounts Tab) கிளிக் செய்து கொள்ளுங்கள். அந்த மெனுவில் ஈமெயில் ஸ்டேட்மெண்ட் ரெஜிஸ்ட்ரேஷன் (Email Statement Registration) டேப் இருக்கும்.

இந்த டேப்பை கிளிக் செய்து பிறகு உங்களது வங்கியுடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பர் கேட்கப்படும். அதேபோல பிறந்த தேதி, பான் கார்டு எண் உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். இதையெல்லாம் கொடுத்த பிறகு ஓடிபி (OTP) மூலம் வெரிபிகேஷன் செய்யப்படும். இந்த வெரிபிகேஷன் முடிந்த பிறகு ஈமெயிலுக்கு உறுதிப்படுத்திய மெயில் வந்து சேரும்.

Best Mobiles in India

English summary
New Rules For UPI Transactions From June 25 Sending Below Rs 100 Bank Customers How to Check Email
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X