Home
News

புது ரூல்ஸ்.. 2025 டிசம்பர் 15 முதல் அமல்.. GPay, PhonePe, Paytm பணம் போச்சா.. இதுதான் புது செட்டில்மெண்ட்!

யுபிஐ (UPI) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுக (Unified Payments Interface) பரிவர்த்தனைகளில் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வருகின்றன. யுபிஐ அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் மற்றும் யுபிஐ டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகள் ஆகியவற்றில் இந்த விதிகள் நேரடி மாற்றத்தை கொண்டுவர இருக்கின்றன.

கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற யுபிஐ ஆப்களில் நடக்கும் பரிவர்த்தனைகள் ஆனது அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் (Authorised Transactions) மற்றும் டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகள் (Dispute Transactions) ஆக வகைப்படுத்தப்பட்டுள்ளன. பணத்தை அனுப்பியவுடன் பெறுதல் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளின் கீழ் கொண்டுவரப்படும்.

புது ரூல்ஸ்.. 2025 டிசம்பர் 15 முதல் அமல்.. GPay, PhonePe, Paytm பணம்!

பணம் அனுப்பிய பிறகு அது அனுப்பி அக்கவுண்ட்டுக்கு செல்லாமல் இருந்தால் (தொழில்நுட்ப கோளாறு ரீபண்ட், ரிவர்ஸ் போன்றவை) அது டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகளின் கீழ் கொண்டுவரப்படும். இந்த பரிவர்த்தனைகளுக்கு நவம்பர் 3 ஆம் தேதியில் யுபிஐ செட்டில்மெண்ட் சைக்கிள்கள் (UPI Settlement Cycles) அமலுக்கு கொண்டுவரப்பட்டன. குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டது.

இதில் அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு 10 சைக்கிள்களும், டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகளுக்கு 2 சைக்கிள்களும் கொண்டுவரப்பட்டன. இதில் டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகளுக்கு நள்ளிரவு 12 மணி முதல் மாலை 4 மணி வரையில் முதலாவது சைக்கிளும், மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையில் இரண்டாவது சைக்கிளும் கொண்டுவரப்பட்டது.

ஆகவே, இந்த நேரத்தில் மட்டுமே யுபிஐ ஆப்களில் சிக்கல் ஏற்பட்டு ரீபண்ட் அல்லது ரிவர்ஸ் செய்யப்படும் பரிவர்த்தனைகள் நடக்க இருந்தது. இந்த டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகளுக்கான சைக்கிள்களிலேயே இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றப்பட்ட விதிகளே டிசம்பர் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இதில் கூடுதல் ரிப்போர்ட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

ஆகவே, டிசம்பர் 15ஆம் தேதியில் இருந்து நள்ளிரவு முதல் காலை 10 மணி வரையில் மட்டுமே டிஸ்ப்யூட் ரிப்போர்ட் (Dispute Report) செய்து கொள்ளலாம். இந்த நேரத்தில் பரிவர்த்தனைகள் முடிக்கப்படாது. ஆகவே, செண்டில்மெண்ட் ஸ்டேட்டஸ் செய்யப்படாது. இருப்பினும், யுஆர்சிஎஸ் அட்ஜஸ்ட்மென்ட் ரிபோர்ட் (URCS Adjustment Report) செய்து முடிக்கப்படும்.

இந்த நேரத்தில் யுடிஐஆர் அட்ஜஸ்ட்மென்ட் ரிபோர்ட் (UDIR Adjustment Report) செய்து முடிக்கப்படாது. நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரையில் நடக்கும் டிஸ்ப்யூட் சைக்கிளில் செண்டில்மெண்ட் ஸ்டேட்டஸ் செய்யப்படும். அதேபோல யுஆர்சிஎஸ் அட்ஜஸ்ட்மென்ட் ரிபோர்ட் மற்றும் யுடிஐஆர் அட்ஜஸ்ட்மென்ட் ரிபோர்ட் செய்யப்படும்.

மேலும், மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையில் நடக்கும் டிஸ்ப்யூட் சைக்கிளிலும் செண்டில்மெண்ட் ஸ்டேட்டஸ் செய்யப்படும். யுஆர்சிஎஸ் அட்ஜஸ்ட்மென்ட் ரிபோர்ட் மற்றும் யுடிஐஆர் அட்ஜஸ்ட்மென்ட் ரிபோர்ட் செய்து முடிக்கப்படும். இந்த சைக்கிள்களின்படி டிசம்பர் 15 ஆம் தேதி முதல் யுபிஐ பரிவர்த்தனைகள் செய்து முடிக்கப்பட இருக்கிறது.

அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகள் சைக்கிள்கள் எப்படி? காலை 9 மணி முதல் நள்ளிரவு வரையில் முதாவது சைக்கிள், நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரையில் இரண்டாவது சைக்கிள், அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரையில் மூன்றாவது சைக்கிள், காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையில் நான்காவது சைக்கிள் வழியாக பரிவர்த்தனைகள் செய்யப்படும்.

காலை 9 மணி முதல் காலை 11 மணி வரையில் ஐந்தாவது சைக்கிள், காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் ஆறாவது சைக்கிள், பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 வரையில் ஏழாவது சைக்கிள், பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையில் எட்டாவது சைக்கிள், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை ஒன்பதாவது, இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரை பத்தாவது சைக்கிள் வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
New Rules For UPI Settlement Cycles Authorised Dispute Transactions From 15th December 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X