புது ரூல்ஸ்.. டிச.15 முதல் அமல்.. Google Pay, PhonePe, Paytm-க்கு லிமிட் போட்ட NPCI.. என்னென்ன மாறப்போகுது?
கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm), பீம் (BHIM) போன்ற யுபிஐ ஆப்களில் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு புதிய லிமிட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த லிமிட்டின்படி டிசம்பர் 15ஆம் தேதி முதல் பரிவர்த்தனைகள் செய்து முடிக்கப்பட இருக்கின்றன. இந்த விதிகளால் என்னென்ன மாற இருக்கிறது என்பதை யுபிஐ கஸ்டமர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
லிமிட் என்றவுடன் பணத்தை அனுப்ப லிமிட் வருகிறது என்று நினைக்க வேண்டாம். யுபிஐ செட்டில்மெண்ட் சைக்கிள்களில் (UPI Settlement Cycles) புது நேர லிமிட் வர இருக்கிறது. சொல்லப் போனால், நவம்பர் 3ஆம் தேதியே 12 புதிய செட்டில்மெண்ட் சைக்கிள்கள் அமலுக்கு வந்துவிட்டன. இதில் டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகளின் (Dispute Transactions) சைக்கிள்கள் இப்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இந்த மாற்றப்பட்ட யுபிஐ செட்டில்மெண்ட் சைக்கிள்களே டிசம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கின்றன. டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகள் என்பது வேறொன்றும் கிடையாது. யுபிஐ ஆப்கள் மூலமாக பணம் அனுப்பும்போது அதில் சிக்கல் ஏற்பட்டு உங்களுக்கு ரிவர்ஸ் செய்தல் அல்லது ரீபண்ட் செய்தல் ஆகியவற்றை உறுதி செய்கிறது. இதற்கு டைம் லிமிட் கொண்டுவரப்பட்டது.
இந்த லிமிட்டில் தான் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மாற்றம் செய்யப்படுகின்றன. ஆகவே, அந்த தேதியில் இருந்து நள்ளிரவு முதல் காலை 10 மணி வரையில் மட்டுமே டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகள் மீதான ரிப்போர்ட் செய்ய முடியும். இந்த நேரங்களில் செண்டில்மெண்ட் ஸ்டேட்டஸ் செய்யப்படாது. யுஆர்சிஎஸ் அட்ஜஸ்ட்மென்ட் ரிபோர்ட் (URCS Adjustment Report) செய்யப்படும்.
ஆனால், யுடிஐஆர் அட்ஜஸ்ட்மென்ட் ரிபோர்ட் (UDIR Adjustment Report) செய்யப்படாது. மேலும், நள்ளிரவு முதல் மாலை 4 மணி வரையில் முதலாவது டிஸ்ப்யூட் சைக்கிள் (DC1) மற்றும் மாலை 4 மணி முதல் நள்ளிரவு வரையில் இரண்டாவது டிஸ்ப்யூட் சைக்கிள் (DC2) செய்து முடிக்கப்படும். இதில் செண்டில்மெண்ட் ஸ்டேட்டஸ், யுஆர்சிஎஸ் மற்றும் யுடிஐஆர் அட்ஜஸ்ட்மென்ட் ரிப்போர்ட் செய்யப்படும்.
இப்போது பார்த்தது, டிஸ்ப்யூட் பரிவர்த்தனைகளின் சைக்கிள்களாகும். ஆகவே, அங்கீகரிக்கப்பட்ட பரிவர்த்தனைகளுக்கு (Authorised Transactions) நவம்பர் 3ஆம் தேதியில் அமலுக்கு வந்த செண்டில்மெண்ட் சைக்கிள்களை இப்போது பார்க்கலாம். இது வழக்கமான பணத்தை அனுப்புதல் மற்றும் பெறுதல்களுக்கு பயன்படுதப்படும் செண்டில்மெண்ட்களாக இருக்கிறது.
1. முதலாவது சைக்கிள் காலை 9 மணி முதல் நள்ளிரவு வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
2. இரண்டாவது சைக்கிள் நள்ளிரவு முதல் அதிகாலை 5 மணி வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
3. மூன்றாவது சைக்கிள் அதிகாலை 5 மணி முதல் காலை 7 மணி வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
4. நான்காவது சைக்கிள் காலை 7 மணி முதல் காலை 9 மணி வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
5. ஐந்தாவது சைக்கிள் காலை 9 மணி முதல் காலை 11 மணி வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
6. ஆறாவது சைக்கிள் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
7. ஏழாவது சைக்கிள் பிற்பகல் 1 மணி முதல் பிற்பகல் 3 வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
8. எட்டாவது சைக்கிள் பிற்பகல் 3 மணி முதல் மாலை 5 மணி வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
9. ஒன்பதாவது சைக்கிள் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
10. பத்தாவது சைக்கிள் இரவு 7 மணி முதல் இரவு 9 மணி வரையில் செய்து முடிக்கப்படுகிறது.
மேலும், யுபிஐ ஆப்களில் கொண்டுவரப்பட்ட யுபிஐ சர்க்கிள் (UPI Circle) விருப்பத்தில் ஃபுல் டெலிகேஷன் (Full Delegation) என்னும் மாதத்துக்கு ரூ.15,000 லிமிட் அமலுக்கு வந்துவிட்டது. ஆனால், இதை கூகுள் பே, போன்பே மற்றும் பேடிஎம் போன்ற ஆப்களில் கிடைக்கவில்லை. இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் கீழ் செயல்படும் பீம் (BHIM) ஆப்பில் மட்டுமே கொடுக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








